Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூன்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூன்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

‘ஸ்டார்ட் கேமரா’ சங்கத்தின் தேர்தலில், கதை மன்னனை முதலில் போட்டிக்குக் கிளப்பிவிட்டதே இமய இயக்குநர்தானாம். கதை மன்னன் தோற்ற நிலையில், சங்கத்தில் வென்றவர்கள் நடத்திய பதவியேற்பு விழாவில் இமய இயக்குநர் முன்னிறுத்தப்பட, பலருக்கும் திகைப்பு. ‘இரு தரப்புக்கும் இவ்வளவு நெருக்கமானவர் ஏன் சமயத்துக்குத் தக்கபடி ஜாகை மாற்றணும்... இரு தரப்புக்கும் இணக்கத்தை உருவாக்கி, தேர்தலே இல்லாமல் செய்திருக்கலாமே?’ என இமய இயக்குநரை வசவித் தீர்க்கிறார்கள் தோற்ற அணியின் ஆட்கள். #என் இனிய தோற்ற அணியினர்களே..!

கிசுகிசு

கப்பல் தலைவரின் பலவீனமான புகைப்படம் திடீரென வெளியானதால், சினிமா, அரசியல் சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் அவரை நேரில் பார்க்கக் கிளம்பிவிட்டார்களாம். கப்பல் தலைவரை வைத்துப் பல படங்கள் இயக்கியவர், ‘நான் அவரைப் பார்த்தே தீர வேண்டும்’ என அடம்பிடித்தாராம். “அவர் நல்லா இருக்கார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தவறுதலா யாரோ வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்துட்டுப் பதறாதீங்க…” எனப் பலருக்கும் போனில் விளக்கம் சொல்லிக்கொண்டேயிருக்கிறாராம் கப்பல் தலைவரின் மனைவி. #பத்திரமா பார்த்துக்கோங்க மேடம்!

கிசுகிசு

பிரகாச நடிகரின் பட விழாவுக்கு, சென்னை மாவட்ட ரசிகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்களாம். பழக் கட்சி ஆட்கள் பிரச்னை செய்தபோது, தமிழகத்தின் பல மாவட்ட ரசிகர்களும் பெரும் ஆதரவாக நின்ற நிலையில், அவர்களைப் பிரகாச நடிகர் புறக்கணித்தது பெரும் குமுறலைக் கிளப்பிவிட்டதாம். ‘படம் சென்னையில் மட்டும் ஓடினால் போதுமா?’ என எதிர்க்குரல்கள் கிளம்ப, சீக்கிரமே மொத்த ரசிகர்களையும் அழைத்து பிரமாண்ட சந்திப்பு நடத்தத் தயாராகிவருகிறாராம் பிரகாச நடிகர். #ரசிகர்கள் எதற்கும் துணிந்தவர்கள்…

கிசுகிசு

ஆளுங்கட்சியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய ஒதுக்கீடுகளைப் பெற, பம்பரக் கட்சியில் இந்த முறை வாரிசுப்புள்ளி முன்னிறுத்தப்பட்டார். கட்சிக்கு வலுவான பகுதிகளில் உரிய வெற்றி பெற்றிருந்தும் பதவிகளைக் கேட்டுப் பெறாமல், கொடுத்ததை வாங்கிக்கொண்டு இன்முகத்தோடு வந்தாராம் வாரிசு. ‘இவரெல்லாம் எப்படிக் கட்சியை வளர்க்கப்போறார்?’ எனப் பொருமுகிறார்கள் பலரும். #நல்லா வருவீங்க பாஸு!

கிசுகிசு

புத்தக வெளியீட்டுவிழாவில் தங்கைத் தலைவி, வாரிசுப்புள்ளியைப் புகழ்ந்து பேச, இருவருக்கும் இடையே நிலவிய பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. தங்கைக்கான விழா அழைப்பிதழை வாரிசு கையில் கொடுத்தனுப்பிய முதன்மையானவர், தங்கையிடம் மனம்விட்டுப் பேசும்படியும் சொன்னாராம். தங்கைத் தலைவியை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தனியாகப் பார்த்துப் பேசிய வாரிசு, ‘இனி என்னால் எவ்விதச் சங்கடமும் ஏற்படாது’ என உறுதி கொடுத்தாராம். அதன் பிறகுதான், விழாவில் வாரிசைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினாராம் தங்கைத் தலைவி. #கண்கள் பனித்தன… இதயம் இனித்தது!

கிசுகிசு

புத்தக வெளியீட்டுவிழாவை உற்சாகமாக நடத்தி, பலருடைய பாராட்டு மழையிலும் நனைந்து வீடு திரும்பிய முதன்மையானவருக்கு, சட்டென உடல்நிலை சரியில்லையாம். அவசரகதியில் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாம். ‘குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னைதான். பெரிதாக பயப்பட ஒன்றுமில்லை’ என மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் இல்லத்துக்கு நிம்மதி பிறந்ததாம். ‘வேலைப்பளுவைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்’ எனக் கூடுதல் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். #ஈசிஆர் பக்கம் சைக்கிளை எடுங்க... ஜாலியா இருங்க!