Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற தீவிரமான போட்டி நடக்கிறது. அன்பான அமைச்சருக்கும், மன்னர் எம்.எல்.ஏ-வுக்கும் ஏற்கெனவே பனிப்போர் நிலவிவந்த நிலையில், தனது மைத்துனருக்கு அந்தப் பதவியைப் பெறுவதில் உறுதியாக இருக்கிறார் எம்.எல்.ஏ. ‘மேயரின் ஆதரவும் எனக்குத்தான்’ எனச் சொல்லி அறிவாலயத்திலேயே அலப்பறை கொடுத்த மன்னர் எம்.எல்.ஏ, மண்டலத் தலைவர் பதவியைத் தன் மைத்துனருக்குக் கொடுத்தே தீர வேண்டும் எனக் கட்சித் தலைமையிடம் அழுத்தமாக வலியுறுத்துகிறாராம். ‘அன்பான அமைச்சரின் முட்டுக்கட்டைகளையும் தாண்டி மன்னர் எம்.எல்.ஏ வென்றாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை’ என்கிறார்கள். #‘மைத்துனருக்கு மண்டலப் பதவி...’ நல்லா ரைமிங்கா இருக்கு பாஸ்!

கிசுகிசு

இலைக் கட்சியின் துணிவானவருக்கும் பணிவானவருக்கும் இடையே பனிப்போர் தீவிரமாகியிருக்கிறது. துணிவானவருக்குத் தூணாக நின்ற பெல் மாஜிக்கள் இருவருமே இப்போது அநியாயத்துக்கு அமைதிகாக்கிறார்களாம். துணிவானவருக்கு ஆதரவாக இருந்த மனநிலையை மாற்றிக்கொண்டு, வேறு திட்டங்களோடு இருவரும் ஆலோசனை நடத்துகிறார்களாம். பணிவானவர் பக்கம் மட்டுமே பார்வையைத் திருப்பிவைத்திருந்த துணிவானவர், இப்போது உஷாராகி பெல் மாஜிக்களின் ஆலோசனை குறித்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம். இரு முறை நேரில் அழைத்தபோதும் ‘வேலை இருப்பதாக’ சொல்லி வர மறுத்ததுதான் துணிவானவரை மேலும் அதிரவைத்ததாம். #நீயுமா புரூட்டஸ்?

கிசுகிசு

இரண்டு மாதங்களில் வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், ஆளும் தரப்புக்கு நான்கு சீட் கிடைக்கவிருக்கிறது. அதற்கான போட்டி இப்போதே ஆரம்பித்துவிட்டது. டெல்லி விஷயங்களை கவனிக்க, மருமகனை ராஜ்யசபாவுக்கு அனுப்பிவைக்க நினைக்கிறாராம் முதன்மையானவர். இதற்கிடையில், பதவி முடியவடையவிருக்கும் இரு சீனியர்கள் மறுபடியும் அதே சீட்டை எதிர்பார்க்கிறார்களாம். அதனால், அடுத்த ஒரு இடத்துக்குத்தான் பலத்த போட்டியாம். சிறுபான்மைச் சமூகம் ப்ளஸ் பெண் என்கிற விதத்தில், கவிஞர் ஒருவரை அந்த இடத்துக்குத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். #சீட் பத்தியெல்லாம் கவிதை எழுதுவாங்களா?

கிசுகிசு

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆளுங்கட்சியை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறதாம். ‘எதிர்ப்பு அலையைத் தாண்டி எப்படி இந்த வெற்றி?’ என விசாரித்தாராம் முதன்மையானவர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்கிற அளவுக்கு ஆலோசனைகள் அதிகமாகியிருக்கின்றனவாம். மூன்றாவது அணி அமைக்கவோ இல்லை புதிய பிரதமர் வேட்பாளரை அறிவித்து அதில் கதர்க் கட்சியையும் ஒருங்கிணைக்கவோ செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு யோசிக்கப்பட்டதாம். அதேநேரம் கதர்க் கட்சியின் இளையவருக்கு போன் பண்ணி தைரியம் கொடுக்கவும் முதன்மையானவர் தவறவில்லையாம். #சூதானமா இருக்கணும் கொமாரு!

கிசுகிசு

கோட்டை நகர மத்தியச் சிறையில் உயர் பொறுப்பிலிருக்கும் ‘தில்’லான அதிகாரி, சாதிரீதியான பாகுபாடு பார்த்து உள்ளுக்குள்ளேயே முட்டல் மோதலைத் தூண்டிவிடுகிறாராம். விஷயத்தை வெளியே சொன்னதாகச் சில கைதிகளைச் சந்தேகப்பட்டு, அவர்களுக்கு முரட்டு ட்ரீட்மென்ட் கொடுத்த தில் அதிகாரி, ‘என்னைய பகைச்சுக்கிட்டா இதுதான் கதி’ எனக் கர்ஜிக்கிறாராம். இதனால், எந்த நேரத்திலும் சிறைக்குள் சாதிரீதியான கலவரம் வெடிக்கலாம் என்கிற நிலையாம். #பிரச்னை பெருசாகுறதுக்குள்ள கவனிங்க முதல்வரே!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் ‘இலக்கிய’ எம்.பி-யின் இல்லத் திருமணத்துக்கு, மதுரைக்காரர் வந்தார். அவரை அழைக்கும் விஷயத்தை முதன்மையானவரிடம் சொல்லி ஒப்புதல் பெறத் தவறவில்லையாம் இலக்கிய எம்.பி. மணமக்களை வாழ்த்திவிட்டுக் கிளம்பிய மதுரைக்காரரை, மில்க் மினிஸ்டர் கார் வரை போய் வழியனுப்பிவைத்த விஷயம்தான் கட்சிக்குள் இப்போது பரபரப்பாகியிருக்கிறது. மதுரைக்காரரை தாஜா செய்வதுபோல் முகம் முழுக்கப் பல்லாக மில்க் மினிஸ்டர் சிரித்த காட்சி, முதன்மையானவரை ரொம்பவே ஆத்திரப்படவைத்ததாம். விரைவில் ‘லெஃப்ட் ரைட்’ நடக்கும் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். #சிரிச்சது ஒரு குத்தமாய்யா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism