Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

ஆளுங்கட்சிக்கான நான்கு ராஜ்யசபா சீட்டுகளுக்கு அவர்களே பெரிதாக அடித்துக்கொள்வதால், கூட்டணிக் கட்சிகள் பெயரளவுக்குக்கூட கோரிக்கை வைக்காமல் அமைதியாகிவிட்டன. இந்நிலையில், கதர்க் கட்சியின் டெல்லி தலைவி, தமிழகத்தின் முதன்மையானவருக்கு ராஜ்யசபா சீட் ஒன்றுக்கான கோரிக்கையை வைத்தாராம். ‘ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை’ என பதில் சொல்லப்பட்டதாம். ரகசியத்துக்குப் பெயர்போன கதர்க் கட்சியின் சீனியர் புள்ளிக்காகத்தான் சீட் கேட்பதாகச் சொல்லப்பட, அதன் பிறகும் மறுத்துப் பேச முதன்மையானவருக்கு மனம் இல்லையாம். ‘முடிந்த மட்டும் பரிசீலிக்கப் பார்க்கிறேன்’ எனப் பட்டும்படாமல் பதில் சொல்லியிருக்கிறாராம் முதன்மையானவர். #மனதில் சீட் நிச்சயம்... ராஜ்சபா சீட் லட்சியம்!

கிசுகிசு

முதல்வரின் துபாய் பயணத்தில், சட்டரீதியான சர்ச்சைகளுக்கு ஆளான சிலர், அவர் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்களாம். முதல்வரை நெருங்கியும் பேசினார்களாம். நடிகர் கட்சியில் இளைஞரணிப் பொறுப்பு வகித்த ஒருவர், அடுத்தடுத்த நில அபகரிப்புக் குற்றச்சாட்டால் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரும் முதல்வருக்கு நெருக்கமாக போஸ் கொடுக்க, அதிர்ந்துபோனார்கள் பலரும். இத்தகைய சர்ச்சைக்குரிய ஆட்கள் குறித்தும், அவர்கள் மீதான வழக்குகள் குறித்தும் முதல்வருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை அதிகாரிகள் தரப்பு எப்படி நெருங்கவிட்டது என்பதுதான் பலருக்கும் திகைப்பு. முதல்வருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து, சர்ச்சைக்குரியவர்கள் என்னவெல்லாம் சாதிக்கக்கூடும் என தாமதமாக உணர்ந்து, இப்போது திண்டாடிக்கொண்டிருக்கிறது அதிகாரிகள் தரப்பு. #ஸ்மைல் ப்ளீஸ்!

கிசுகிசு

மெர்சலான நடிகர், சமீபத்திய படத்தின் புரொமோஷனுக்காக, பிரகாச நிறுவனத்துக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார். சினிமா தாண்டியும் சில விஷயங்களை நடிகர் பேசியதாகத் தெரியவர, ஒளிபரப்புக்கு முன்னரே அந்தப் பேட்டியை முழுவதுமாகப் பார்க்க வேண்டும் என முதன்மையானவர் இல்லத் தரப்பு கேட்டதாம். ‘நம்மைப் பற்றியெல்லாம் அவர் ஒன்றும் தவறாகப் பேசவில்லை’ எனத் தன்னிலை விளக்கம் கொடுத்த சேனல் தரப்பு, கடைசி வரை பேட்டியைக் காட்டச் சம்மதிக்கவில்லையாம். #ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா...

கிசுகிசு

காவல்துறையின் உச்ச அதிகாரி, பலவிதமான வேலைகளுக்கு மத்தியிலும், திடீரென சில போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து விசாரணை நடத்துகிறார். அவர் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே, அவர் எங்கு போகிறார் என்கிற விஷயம் உரிய போலீஸ் ஸ்டேஷன்களுக்குச் சொல்லப்பட்டுவிடுகிறதாம். அவர்கள் முன்கூட்டியே உஷாராகி, தங்களின் கடமை உணர்வை செவ்வனே காட்டிக்கொள்கிறார்களாம். உச்ச அதிகாரிக்கு இந்த விஷயம் தாமதமாகத் தெரியவர, இப்போது படு உஷாராகிவிட்டாராம். சைக்கிளிங் போகும்போதும் சர்ரென ஸ்டேஷன் பக்கம் போய் விசாரணை நடத்துகிறாராம். #காத்து வாக்குல சில காவல் நிலைய விசாரணைகள்!

கிசுகிசு

மாங்கனி மாநகரில் உள்ளாட்சித் தேர்தலில் பொறுப்புக்கு வந்தவர்கள் நடத்திய முதல் கூட்டமே முற்றிலும் கோணலான கூட்டமாக முடிந்துவிட்டதாம். உயர் பொறுப்பு வகிப்பவர்கள் செய்யக்கூடிய அடிப்படை வேலைகளைப் பற்றிக்கூட புதிய பொறுப்பாளருக்குத் தெரியவில்லையாம். அதனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களே உயர் பொறுப்பு வகிப்பவருக்கு எதிராக உஷ்ணமாகியிருக்கிறார்கள். விஷயம் தலைமை வரை போக, உயரிய பொறுப்புக்கு அவரை சிபாரிசு செய்த இனிஷியல் மாண்புமிகுவுக்கு செம டோஸ் விழுந்ததாம். #கோணல் பக்கங்கள்!

கிசுகிசு

தமிழ் அதிகாரிகளுக்கும், வடக்கத்திய அதிகாரிகளுக்கும் வெளியே தெரியாத பனிப்போர் நிலவிவருகிறது. ‘முக்கிய பொறுப்புகளில் வடக்கத்திய அதிகாரிகள் நியமிக்கப்படுவதில்லை எனவும், இது திட்டமிட்ட செயல் என்றும்’ மத்திய உள்துறை அமைச்சகத்துக்குத் தமிழகத்திலிருந்து சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் இது குறித்து தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் விசாரிக்கலாம் என்கிறார்கள். இங்கிருந்து டெல்லிக்குக் கடிதம் எழுதிய அதிகாரிகள் யார் என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்திவருகிறது உளவுத்துறை. #உக்ரைன் மீதான போரைவிட உக்கிரமா இருக்கும்போலயே!