Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

`விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும்’ என்றும், `டெல்டா மாவட்டங்களுக்கான பங்களிப்பு இந்த முறை நிச்சயம் வழங்கப்படும்’ என்றும் பரவலான பேச்சு அடிபடுகிறது. டெல்டா ஒதுக்கீட்டில் கிடைக்கும் அமைச்சர் பதவியைக் கைப்பற்ற மில்க் எம்.பி-யின் வாரிசுக்கும், தடாலடி எம்.எல்.ஏ-வுக்கும் இடையே போட்டி நடக்கிறதாம். மூன்று முறை ஜெயித்த வாரிசுக்குப் பதவி வாங்கிக் கொடுக்க மருமகன், குடும்பம், வாரிசு எனப் பல ரூட்டிலும் காய்நகர்த்திவருகிறார் மில்க் எம்.பி. தடாலடி எம்.எல்.ஏ-வோ முதன்மையானவரின் ரூட்டில் மட்டும் மெனக்கெடுகிறார். #மாடு ரெண்டு... பாதை ரெண்டு... வண்டி எங்கே சேரும்?

கிசுகிசு

ஆளுங்கட்சியின் பொதுவான பதவியிலிருக்கும் மூத்த அமைச்சர் சமீபத்தில் டெல்லிக்குப் பயணித்தபோது, மணல்புள்ளி ஒருவரை உடன் அழைத்துச் சென்றார். கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அமைச்சர்களுக்கு வலதுகரமாக வலம்வந்த அந்த மணல்புள்ளியை அதிகார மையங்களை நோக்கியும் தைரியமாகக் கூட்டிச் சென்றாராம். “கட்சியில் உயர் பொறுப்பிலிருக்கும் சீனியர் அமைச்சரே இப்படிச் செய்யலாமா... சர்ச்சைக்குரியவர் எனத் தெரிந்தும், உடன் அழைத்து வருகிற அளவுக்கு அப்படியென்ன பாசம்?” எனக் கொந்தளிக்கிறார்கள் பலரும். “பாசம், அன்பு அப்படியெல்லாம் ஏதுமில்லை. பசை விஷயங்களைப் பார்ப்பதற்காகவே செல்லும் இடமெல்லாம் இந்த மணல்புள்ளியை அழைத்துப்போகிறார். அவ்வளவுதான்…” என்கிறார்கள் மூத்த அமைச்சரின் மூவ் தெரிந்தவர்கள். #பசை மேட்டர் என்பதால் ஒட்டிக்கொண்டார்போல!

கிசுகிசு

கப்பல் தலைவரின் இல்லத்தலைவி போராட்டக் கூட்டத்தில் தன்னைப் பற்றி அதிகமாகப் பேசியதால், காவிக் கட்சியின் மாஜி காக்கி அதிகாரிக்குத் தாங்க முடியாத பூரிப்பாம். போராட்டம் முடிந்து கப்பல் தலைவரின் இல்லத்தலைவி வீடு திரும்புவதற்குள்ளேயே போன் போட்டு நன்றி சொன்னாராம் காவிக் கட்சியின் மாஜி காக்கி. ஆனால், மறுநாளே “ரெண்டு ஆட்டுக்குட்டி வெச்சிருக்கிற ஒருத்தருக்கு எதுக்கு ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு?” என்று தன்னைப் போட்டு வாரு வாரு என்று அவர் வாரியதால், ‘ஏன்... நேத்து நல்லாத்தானே பேசினாங்க’ எனக் குழம்பிபோனாராம் மாஜி காக்கி. #‘அது போன மாசம்... நாஞ்சொல்றது இந்த மாசம்’ மொமன்ட்!

கிசுகிசு

ஆளுங்கட்சிக்கு எதிராக அடக்கிவாசிக்கச் சொல்லியிருக்கிறாராம் தோட்டத்துத் தலைவர். சட்டம்-ஒழுங்கு பிரச்னை தொடங்கி, விலைவாசி உயர்வு வரையிலான எது குறித்துப் பேசும்போதும் ஆளும் அரசைத் தாக்கக் கூடாது எனக் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவாம். நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்து, தோட்டத்துத் தலைவர் காய்நகர்த்துவதாகச் சொல்கிறார்கள் உட்கட்சி நிர்வாகிகள். ஆனால் விஷயப்புள்ளிகள் சிலரோ, ‘அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் ஆளும் தரப்பின் அனுசரணை தோட்டத்துத் தலைவருக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த அகிம்சை…’ என்கிறார்கள் அர்த்தத்தோடு. #அறக்கட்டளை வேலை முடியும் வரை அன்புக் கட்டளை!

கிசுகிசு

டெல்லியில் தி.மு.க அலுவலகம் கட்ட, பத்து வருடங்களுக்கு முன்னால் பதவியிலிருந்த எம்.பி-க்கள்தான் பெரிதாக நிதி திரட்டினார்கள். ஆனால், டெல்லி அலுவலகத் திறப்புவிழாவுக்கு அவர்களில் ஒருவர்கூட அழைக்கப்படவில்லை. மீசைக்கார மாஜி எம்.பி இது குறித்து முதன்மையானவரிடமே கேட்க, ‘பெரிதாகக் கூட்டம் சேர்க்க விரும்பவில்லை. அவ்வளவுதான்’ என்றாராம். உண்மையான காரணம், கட்சி அலுவலகம் கட்ட, அப்போது பலரையும் ஒருங்கிணைத்து நிதி திரட்டியவர் மதுரைக்காரராம். மற்றவர்களை அழைத்தால், மதுரைக்காரரையும் அழைக்கவேண்டி வரும் என்பதற்காகவே அனைவரையும் தவிர்க்கச் சொன்னாராம் முதன்மையானவர். #அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அரசியலான உலகத்திலே!

கிசுகிசு

இல்லத்து அபிமானத்தைப் பெற, ஆன்மிக அமைச்சரோடு போட்டிபோடுகிறாராம் அணில் அமைச்சர். எந்தக் கட்சிக்குப் போனாலும், இல்லத் தரப்பு அபிமானத்தில் வளர்வதுதான் அணில் அமைச்சரின் வழக்கம். ஆனால், இந்த முறை அந்தப் பக்கம் நெருங்க முடியாதபடிக்கு இல்லத் தரப்பு ஏவும் வேலைகளைத் தலைமேல் சுமந்து செய்கிறாராம் ஆன்மிக அமைச்சர். எனவே, பலமாக இருக்கும் அவருடைய நெட்வொர்க்கை உடைத்து, இல்லத் தரப்பிடம் நல்ல பெயர் வாங்க எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கியிருக்கிறார் அணில் அமைச்சர். “உங்களுக்காக வேண்டிக்கொண்டேன். இதோ பிரசாதம்…” என அணில் அமைச்சர் காட்டுகிற பணிவும் பக்குவமும் ஆன்மிக அமைச்சரையே மிரளவைக்கிறதாம். #அலகு குத்தும்... தீ மிதியும் மட்டும்தான் பாக்கி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism