Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

தம்பியையும், தம்பியின் வாரிசான ஜெயமான இளைஞரையும் கட் அண்ட் ரைட்டாக ஒதுக்கிவைத்திருந்தார் சின்ன தலைவி. தம்பிக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுகூட சின்ன தலைவி மனம் மாறவில்லை. அந்த அளவுக்குத் தம்பி குடும்பத்தைத் தள்ளிவைத்திருந்தவர், கடந்த வாரம் சட்டென மனம் மாறிவிட்டார். தம்பியின் ஜெயமான வாரிசு, சின்ன தலைவியின் வீட்டுக்கே நேரடியாக வந்து, “அத்தை…” என அழ, பாசத்தோடு தம்பி மகனை வாரி அணைத்துக்கொண்டாராம். நலம் விசாரிப்பு, போன் பேச்சு என மீண்டும் அன்பு பெருக்கெடுத்து ஓட, என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து நிற்கிறார்கள் மற்ற உறவுகள். #அன்பிற்கும் உண்டோ அரசியல் தாழ்?!

ஏதோவொரு காரணத்தைச் சொல்லி, முதன்மையானவரை வைத்து விழா நடத்த அனுமதி வாங்கிவிடுகிறாராம் அணில் அமைச்சர். விழா குறித்துப் பேசும்போதும், நிகழ்வின்போதும் தன் மனக் கருத்துகளையெல்லாம் முதன்மையானவரின் தலையில் ஏற்றிவிடுகிறாராம். “கட்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை, தன் கவனத்துக்குச் சரியாகக் கொண்டுவருபவர் அணில் அமைச்சர்தான்” என முதன்மையானவர் வெளிப்படையாகவே புகழ்கிறாராம். இதனால் சீனியர் அமைச்சர்கள் பலரும் அணிலுக்கு எதிராகக் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். #காதுகுத்து விழா நடத்தாம இருந்தாச் சரிதான்!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவருக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்தியபோதே, “போராடுங்கள்… வென்றாலும் தோற்றாலும் உங்களுக்கான வெகுமதியை நிச்சயம் செய்வேன்” என கோல்டு புள்ளியிடம் சொல்லியிருந்தாராம் முதன்மையானவர். வரும் ராஜ்யசபா தேர்தலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறார் கோல்டு புள்ளி. ஆனாலும், அது குறித்து முதன்மையானவரை நேரில் சந்தித்துக் கோரிக்கைவைக்க கோல்டு புள்ளிக்கு ரொம்பவே தயக்கம். அதனால், வாரிசு ரூட்டில் காய்நகர்த்துகிறார். “இவ்வளவு காலம் நீங்கள் அமைதியாக இருந்ததற்கே அப்பா நிச்சயம் நல்லது செய்வார்” எனச் சொல்லியிருக்கிறாராம் வாரிசு. #ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு...

கிசுகிசு

ஞானியானவர் திடீரென உச்ச புள்ளியை அம்பேத்கருக்கு இணையாகப் புகழ்ந்து பேசியதாகப் பரபரப்பு கிளம்ப, முதன்மையானவர் திடுக்கிட்டுப்போனாராம். ‘அப்படி எங்கே பேசினார்... என்ன நிகழ்ச்சி அது?’ என அவர் விசாரிக்க, சுறுசுறுப்பானார்கள் உளவு ஆட்கள். “எந்த நிகழ்ச்சியிலும் ஞானியானவர் அப்படிப் பேசவில்லை. ஒரு புத்தகத்துக்கான அணிந்துரையில் அப்படிப் புகழ்ந்து ஒரு வரி எழுதியிருக்கிறார்” எனச் சொன்னார்களாம். “இந்த விஷயம் பரபரப்பாவதற்கு முன்னரே அந்தப் புத்தகம் குறித்து என் கவனத்துக்கு நீங்கள் குறிப்பு வைத்திருக்க வேண்டுமல்லவா…” எனக் கொந்தளித்தாராம் முதன்மையானவர். அவசரகதியில் சம்பந்தப்பட்ட அந்தப் புத்தகப் பிரதியை வரவழைத்துக் கொடுத்தார்களாம். ஞானியானவர் கருத்துக்கு முதன்மையானவர் இந்த அளவுக்குப் பரபரப்பானது ஏன் எனப் புரியாமல் உளவுத்துறையே கிர்ரடித்துக் கிடக்கிறது. #ஞானிக்கும் வரி சறுக்கும்!

கிசுகிசு

டெல்லியில் நடந்த விசாரணையில், விசில் கட்சியின் இனிஷியல் புள்ளியைச் சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்துவிட்டார்களாம் அமலாக்கத்துறை அதிகாரிகள். எப்போதுமே விசாரணைக்குப் பக்காவாக ஒத்துழைப்பு கொடுக்கும் இனிஷியல் புள்ளி, பல மணி நேர விசாரணைக்கு வாய் திறக்கவே இல்லையாம். நீண்ட நேரத்துக்குப் பிறகு, வெளியே வந்தவருக்கு வியர்வை அடங்கவே வெகுநேரமாகியிருக்கிறது. திட்டமிட்டுத் தனக்கு எதிராகக் காய்நகர்த்தப்படுவதாக நினைக்கும் இனிஷியல் புள்ளி, டெல்லியிலேயே தங்கி காவிக் கட்சியின் அதிகார மையங்களை அணுகி, சரண்டராகும் ஐடியாவில் இருக்கிறாராம். #வேர்க்க வெச்சுட்டாய்ங்க பரமா...!

கிசுகிசு

ஜனாதிபதி பதவிக்கு, ராம் நாத் கோவிந்த் தொடங்கி வெங்கைய நாயுடு பெயர் வரை அடிபடும் நிலையில், துணை ஜனாதிபதியைத் தமிழ்நாட்டிலிருந்துதான் தேர்வுசெய்ய நினைக்கிறதாம் காவிக் கட்சி. தமிழகத்தில் கட்சியை வலுவாக்கவே இந்த முயற்சியாம். காவிக் கட்சியின் பெண்மணி, மூத்த தலைவர் ஒருவர் எனப் பரபரப்பாகச் சில பெயர்கள் அடிபடுகின்றன. அதேநேரம், “இரு கவர்னர், ஒரு மத்திய அமைச்சர் எனத் தமிழ்நாட்டுக்கு நிறைய ஒதுக்கீடு செய்துவிட்டோம். துணை ஜனாதிபதி ஒதுக்கீடெல்லாம் ரொம்பவே அதிகம்” என டெல்லியின் முடிவுக்கு எதிராகவும் பலர் குரல் கொடுக்கிறார்களாம். அதனால், எந்த நேரத்திலும் முடிவுகள் மாறலாம் என்கிறார்கள். #வரும்... ஆனா, வராது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism