Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியிருக்கும் அண்ணன் தலைவர், 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இப்போதே தயாரிக்கத் தொடங்கிவிட்டாராம். ஒரு வருடத்துக்கு முன்பே வேட்பாளர்களை அவரவர் தொகுதிகளில் களமிறக்கிவிட்டு, ‘தொகுதிக்கு 2 லட்சம் வாக்குகள்’ வாங்கிக் காட்ட வேண்டும் என்பதுதான் அண்ணன் தலைவரின் ஆசையாம். 20 தொகுதிகளில் ஆண்கள், 19 தொகுதிகளில் பெண்கள், ஒரு தொகுதியில் திருநங்கை எனப் பக்கா திட்டத்துடன் தீவிர ஆலோசனை நடத்திவருகிறார். #ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு...

கிசுகிசு

யார் தன்னைச் சந்திக்க வந்தாலும் ‘அதை வாங்கிக் கொடு… இதை வாங்கிக் கொடு’ எனச் சிறு குழந்தைபோல் கோரிக்கைவைத்து அடம்பிடிக்கிறாராம் சீனியர் அமைச்சர். கான்ட்ராக்ட், கமிஷன், சலுகை, சிபாரிசு என வருபவர்களிடம் அமைச்சர் இப்படி வாங்கிக்கொள்வது சரி… நலம் விசாரிக்க வருபவர்களிடமும் அமைச்சர் இப்படி நடந்துகொள்ளலாமா எனப் பொருமுகிறார்கள் பலரும். சமீபத்திய ஒரு பயணத்தின்போது உடன் வந்த ஒருவருக்கு ‘25 எல்’ செலவு வைத்தாராம் அமைச்சர். இத்தனைக்கும் அந்த நபர் எந்த ஆதாயத்துக்காகவும் அமைச்சருடன் பயணிக்கவில்லையாம். #சும்மா கூட போனது குத்தமாய்யா..!

கிசுகிசு

பங்களா படுகொலைகள் குறித்த விசாரணையில், துணிவானவருக்கு எதிராகப் பல விஷயங்களைச் சின்ன தலைவி பேசியதாகச் செய்திகள் கசிகின்றன. இந்நிலையில், “அப்படி எந்த விஷயத்தையும் அவர் பேசவில்லை” என்கிறது சின்ன தலைவி தரப்பு. “அக்காவின் துணிமணிகள் மட்டுமே அங்கு இருந்தன. டாக்குமென்ட், பணம், வீடியோ என எதுவுமே அங்கு இல்லை” எனச் சின்ன தலைவி சொல்ல, விசாரணை நடத்திய போலீஸ் ஆச்சர்யப்பட்டதாம். ‘துணிவானவருக்கு எதிராகப் பல விஷயங்களைச் சொல்வார்’ என போலீஸ் எதிர்பார்த்த நிலையில், அனைத்தையும் சின்ன தலைவி புஸ்வாணமாக்கிவிட்டாராம். “அவரை ஏதாவது ஒரு விஷயத்தில் கோத்துவிட்டிருக்கலாமே” என உறவுகள் கேட்க, “நடந்ததை மட்டும்தான் சொல்லணும்… உண்மையை மட்டும்தான் சொல்லணும்” என அநியாயத்துக்குச் சின்ன தலைவி அறத்தோடு பேசியதாக வயலின் வாசிக்கிறது அவர் தரப்பு. #‘இது இட்லினு சொன்னா சட்னியே நம்பாது’ மொமன்ட்!

கிசுகிசு

முதன்மையானவருக்கு நெருக்கமாக இருக்க மாண்புமிகுக்களுக்கு இடையே நடக்கிற போட்டியில், இப்போது முதலிடத்தில் இருப்பவர் கோல்டு மினிஸ்டர். எது சம்பந்தமான தகவல் என்றாலும், கோல்டு மினிஸ்டரைக் கூப்பிட்டுத்தான் பேசுகிறாராம் முதன்மையானவர். அலுவல் நேரம் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் கோல்டு மினிஸ்டரை வீட்டுக்கே கூப்பிட்டு ‘எதிர்காலம்’ குறித்த விஷயங்களையும் கலந்து பேசுகிறாராம். நெருக்கமாக வைத்திருந்த இனிஷியல் அமைச்சர், அணில் அமைச்சர் இருவரிடமும் இப்போது டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணத் தொடங்கியிருக்கிறாராம் முதன்மையானவர். #நெருக்கமா... விலக்கமா... மனதிலே... குழப்பமா..?

கிசுகிசு

“உள்ளாட்சித் தேர்தல் எப்போதுமே ஆளுங்கட்சிக்குத்தான் சாதகமாக இருக்கும். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பெரிய அளவில் வெற்றிபெற்றுக் காட்டுகிறேன். அதில் தவறினால், அந்த அம்மையாரைக் கட்சியில் சேர்க்க நான் தடையாக இருக்க மாட்டேன்” எனப் போர்க்குரல் புள்ளிகளிடம் போனில் பேசினாராம் இலைக் கட்சியின் துணிவுப்புள்ளி. பணப் பட்டுவாடா தொடங்கி, பரப்புரைத் திட்டங்கள் வரை அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும், அதில் வென்று காட்டும் நிலையில் அம்மையார் குறித்த பேச்சையே யாரும் எடுக்கக் கூடாது எனவும் கறாராகச் சொல்கிறாராம். உள்ளடி ஆட்களைச் சமாதானப்படுத்துவதில் துணிவுப்புள்ளியின் வியூகங்களைக் கண்டு வியக்கிறார்கள் நிர்வாகிகள் பலரும். #ராஜதந்திரங்களைக் கரைத்துக் குடித்திருப்பார்போலயே!

கிசுகிசு

ரஜினி தொடங்கி விமல் வரை, திரைத்துறை சம்பந்தப்பட்ட பலருக்கும் தலைவலியாக இருக்கும் டெல்டா மாவட்டத் தயாரிப்புப்புள்ளியை ‘சற்று’ கவனிக்கும்படி காக்கித் தரப்பில் சொன்னாராம் வாரிசுப்புள்ளி. அதன் பிறகுதான் புகார் கொடுத்தவரையே வீடு தேடிப்போய் கைதுசெய்ததாம் காவல்துறை. “இனி அவர் யார் மீதும் புகார், மோசடி எனப் போகவே கூடாது. அந்த அளவுக்கு கவனிப்பு இருக்கட்டும்” எனக் கறார் காட்டினாராம் வாரிசுப்புள்ளி. அடுத்தடுத்து வழக்குகள் போட்டுச் சிதைக்கிற முடிவில் இருக்கிறதாம் போலீஸ். #முடிஞ்ச்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism