Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

அரசியல் மற்றும் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு, நிவாரண உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நேரில் பயணிக்கவும் நினைக்கிறாராம். ஆனால், ‘இலங்கைக்குப் பயணிக்க வேண்டாம்’ என உளவுத்துறை அழுத்தமாக வலியுறுத்தி `நோட்’ வைத்திருக்கிறதாம். உளவுத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து முதல்வர் விவாதிக்க, ‘பாதுகாப்பு முக்கியம் சார்…’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்களாம். விஷயம் இல்லத் தரப்புக்கும் தெரியவர, ‘இலங்கைக்குச் செல்ல வேண்டாம்’ என சென்டிமென்ட் ரூட்டிலும் தடைபோடப்பட்டதாம். அதனால், இலங்கை பயண விஷயத்தில் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். #கடன்பட்டார் நெஞ்சம்போல...

கிசுகிசு

‘அமைச்சர்கள் யாராவது அதிருப்தி மூடில் இருக்கிறார்களா?’ என விசாரித்ததாம் பவன் தரப்பு. ஆளும் அரசுக்கு எதிரான விஷயங்களை ஆதாரபூர்வமாக விசாரிக்கத்தான் இந்த ஆர்வமாம். ‘சமீபத்தில் துறை மாற்றம் செய்யப்பட்ட சீனியர் அமைச்சர், இன்னமும் ஆதங்கம் அடங்காமல்தான் இருக்கிறார்’ என முதற்கட்ட தகவல் பவன்காரருக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். “கோடிகளைக் கொட்டிக்கொடுத்து பதவி பெற்ற தகவலை அந்த அமைச்சர் ஸ்டேட்மென்ட்டாகக் கொடுத்தால், ஆட்சியையே தூக்கி வீசிவிடுவேன்” என்றதாம் பவன் தரப்பு. இந்த அளவுக்கு பவன் தரப்பு வியூகம் வகுத்துக்கொண்டிருப்பதை முதன்மையானவர் கவனத்துக்குக் கோட்டை வட்டாரம் இன்னமும் கொண்டு செல்லவில்லையாம். #உங்க சோப் என்ன ஸ்லோவா?

கிசுகிசு

வரும் ஜூன் மாத இறுதிக்குள், ராஜ்ய சபா

எம்.பி-க்களுக்கான தேர்வு தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. தி.மு.க-வுக்கு நான்கு எம்.பி-க்கள், அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் என்கிற நிலையில், ‘எங்களுக்கு ஓரிடம்’ என உரத்துக் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. “நான்காவது எம்.பி-யை ஜெயிக்கவைக்க காங்கிரஸ் ஆதரவு தி.மு.க-வுக்குத் தேவை. அதனால், அந்த ஒரு சீட்டை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்கே வழங்க வேண்டும்” என்கிறாராம் உள்ளூர் தலைவர். தனக்கு ஆதரவான இருவர் பெயரையும் சிபாரிசு செய்கிறாராம். ஆனால், ‘சீட் கொடுக்கும் எண்ணமே இல்லை. அப்படிக் கொடுத்தாலும் ‘ரகசிய’ புள்ளிக்குத்தான் கொடுப்பார்’ என முதன்மையானவரின் முடிவு குறித்துச் சொல்கிறார்கள் ஆளும் நிர்வாகிகள். #‘ஆணியே புடுங்க வேண்டாம்’ மொமன்ட்!

கிசுகிசு

‘மத்திய அரசு’ எனப் பாடப் புத்தகங்களில் இருப்பதை ‘ஒன்றிய அரசு’ என மாற்றி பிரின்ட் செய்வதில், ஆளும் தரப்பு உறுதியாக இருக்கிறது. ‘நிலைப்பாட்டில் உறுதி’ என்பதெல்லாம் வெளியே சொல்லப்படுகிற காரணம்தானாம். கோடிக்கணக்கான புத்தகங்களை மறுபடி பிரின்ட் செய்ய, அதற்கான டெண்டர், கமிஷன் எனக் குவியும் ஆதாயம்தான் முக்கியக் காரணமாம். சொல்லிக்கொடுக்கும் துறையின் அமைச்சரை அணுகி, ‘எங்களுக்குச் சாதகம் செய்யுங்கள்’ எனப் பல அச்சு நிறுவனங்கள் கோரிக்கை வைக்கின்றனவாம். #மனதில் இருக்கு புதுக்கணக்கு... சொன்னா புரியும் அது உனக்கு!

கிசுகிசு

‘அரசியலுக்கு மூத்த மகன்… சினிமாவுக்கு இளைய மகன்…’ எனத் தெளிவாகத் திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறார் கப்பல் தலைவரின் மனைவி. சீனியர் அரசியல் புள்ளிகள் மூலமாக மேடைப்பேச்சு, பிரஸ் மீட், போராட்டங்கள் குறித்த தெளிவை மூத்த மகனுக்கு ஏற்பாடு செய்துகொடுத்திருப்பவர், இளைய மகனை ஹிஸ்டாரிக்கல் படம் ஒன்றில் கமிட்டாக்கி, அதற்காகக் குதிரையேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளைச் செய்யச் சொல்லியிருக்கிறாராம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இரு மகன்களையும் அவரவர் துறையில் தகுதியாக்கிவிட நினைக்கிறாராம் கப்பல் தலைவி. பிள்ளைகளும் சுறுசுறுப்பாகிறார்களாம். #பாலிட்டிக்ஸ் உன்னுது... பவுடர் டப்பா என்னுது!

கிசுகிசு

ஆதீன விவகாரத்தில், ஆளும் தரப்பு காட்டிய வேகத்தை இல்லத்து ஆட்களே விரும்பவில்லையாம். ஆன்மிக விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என முதன்மையானவரிடமே சொல்லிவிட்டார்களாம். முதன்மையானவருக்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் சிலர், “காவிக் கட்சியை நீங்களே வலுவாகக் கால் ஊன்ற வெச்சுடுவீங்கபோலிருக்கே...” என அவரிடமே சொன்னார்களாம். அதனால், இனி இத்தகைய விஷயங்களில் அடக்கிவாசிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். #எதைப் பண்ணாலும் நல்லா ப்ப்ள்ளான் பண்ணிப் பண்ணணும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism