Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

ஆளும் அரசின் ஓராண்டு சாதனையை இந்தியாவின் அத்தனை மொழிகளிலும் விளம்பரமாக வெளியிட பெரிய அளவில் திட்டமிடப்பட்டதாம். விளம்பரங்களுக்கான மொத்தச் செலவையும் ஆளும் அரசின் எம்.பி-க்கள் மூலமாகத் திரட்டச் சொன்னார்களாம். டெல்லியில் கட்சி அலுவலகத் திறப்புவிழாவுக்குப் பணம் திரட்டி, இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், தங்களால் முடியாது எனக் கையை விரித்துவிட்டார்களாம் பலரும். அதனால்தான், இந்திய அளவுக்கான திட்டம் சின்னதாகச் சுருங்கிவிட்டதாம். #‘முடியல குருநாதா’ மொமன்ட்!

கிசுகிசு

சின்ன தலைவிக்கும், டெல்டா மாவட்டத்தின் ட்ரீட்மென்ட் புள்ளிக்கும் போன் பேச்சுவார்த்தைகள் தொடர்வது இலைக் கட்சியின் துணிவானவரை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். இரு முறை ட்ரீட்மென்ட் புள்ளியைத் தனிப்பட்டவிதமாகச் சந்தித்து மனம்விட்டுப் பேசியும், சின்ன தலைவியோடு அவர் இணக்கம் காட்டுவதுதான் துணிவானவரைத் தூங்கவிடாமல் செய்கிறதாம். சாதிரீதியான ஒருங்கிணைப்பு உருவாகிவிடக் கூடாது என்பதில் அவ்வளவு எச்சரிக்கையாகவும், பதற்றமாகவும் இருக்கிறாராம் துணிவுப்புள்ளி. #மெத்த வாங்குனேன்... தூக்கத்த வாங்கலை!

கிசுகிசு

ஓராண்டு சாதனை விளம்பரங்களில், தன்னுடைய புகைப்படத்தைப் போடாமல், இனிஷியல் அமைச்சரின் புகைப்படத்தைப் புதிதாக உதித்த மாவட்டத்தின் எம்.எல்.ஏ-க்கள் இருவரும் வெளியிட்டதில் பொன்னான சீனியர் அமைச்சருக்கு அவ்வளவு வருத்தமாம். “கட்சியில அவங்க வளர்ச்சிக்குக் களம் அமைச்சுக் கொடுத்தவன் நான். ஆனா, இன்னிக்கு யாருக்கோ பல்லக்கு தூக்குறாங்க” என ‘வளர்த்த கடா’ கதையைச் சொல்லி வெளிப்படையாகவே வருத்தப்பட்டாராம் பொன்னான அமைச்சர். #‘பல்லக்கு’ உதாரணம்லாம் வேணாம் பாஸ்... சர்ச்சையாகும்!

கிசுகிசு

நிதிச் சிக்கலில் தடுமாறும் நடுநிலைத் தலைவர், வரிசையாகப் படங்களைக் கமிட் செய்துவருகிறார். மதுரை ஃபைனான்ஸ் புள்ளியிடம் வாங்கிய கடன் வட்டிக்கு மேல் வட்டியாக எகிறுகிறதாம். இது புரியாமல், ‘கட்சி விஷயங்களில் அக்கறை காட்டாமல் இருக்கீங்களே தலைவா…’ என நிர்வாகிகள் கொந்தளிக்க, அரசியல் ஆலோசனைப் புள்ளியிடம் கலந்துபேசினாராம் நடுநிலைத் தலைவர். ‘எம்.பி தேர்தல் வரை தாக்குப் பிடியுங்கள். அட்டகாசக் கூட்டணியில் உங்களை மரியாதைக்குரிய ஆளாக நிறுத்திக்காட்டுகிறேன்’ என்றாராம் ஆலோசனைப் புள்ளி. அதனால், தாக்குப்பிடிக்கும் வகையில் நிர்வாகிகளை தாஜா செய்துவருகிறாராம் நடுநிலைத் தலைவர். #தோ கிலோமீட்டர்!

கிசுகிசு

டெல்டா மாவட்டத்தின் விவசாய அணியைச் சேர்ந்த வில்லுக்குப் பெயர்போன புள்ளி, டெல்லியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு ஒரு வருடம் முடியப்போகிறது. அவருக்குப் பொறுப்பை நீட்டிக்கப்போகிறார்களா, இல்லை அவ்வளவுதானா எனக் கட்சிக்குள் பட்டிமன்றமே நடக்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபடி வில் புள்ளி செயல்பட்டாலும், அவரை ஓரங்கட்டி டெல்லி பிரதிநிதி பொறுப்பைத் தட்டிச்சென்றுவிட, கட்சிக்குள் பலமான போட்டி நடக்கிறதாம். டெல்லியின் பவர்ஃபுல் மில்க் புள்ளி தனக்கு ஆதரவான ஆட்களின் பெயரைக் குறித்துக் கொடுத்திருப்பதாகவும் தகவல். இதற்கிடையில் ராஜ்ய சபாவுக்கான ரேஸில் வில் புள்ளியின் பெயரும் ஒருபுறம் அடிபடுகிறது. ‘டெல்லி அனுபவம் நிறைந்தவர்’ என்பதால், வில் புள்ளியின் பெயர் பரீசிலிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். #வல்லவன் வகுத்ததடா... கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா!

கிசுகிசு

மாவட்டச் செயலாளர்களைக் குறைக்க முதன்மையானவர் முடிவெடுத்திருப்பதாகக் கசியும் செய்தி, ஆளுங்கட்சி நிர்வாகிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குக் குறைவான அளவுகொண்ட மாவட்டச் செயலாளர்களை மட்டும் நீக்கலாம்’ என முதற்கட்டமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறதாம். அதனால், அத்தகைய பட்டியலிலுள்ள நிர்வாகிகள் இப்போதே அறிவாலயம் வந்து கண்ணைக் கசக்கத் தொடங்கிவிட்டார்களாம். இதற்கிடையில், ‘நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த விஷப்பரீட்சை வேண்டாம்’ என்கிறார்களாம் சீனியர் நிர்வாகிகள். #பத்து வருஷம் கழிச்சு இப்பதான் பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்குப் போயிருக்கு... அதுக்குள்ளயா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism