Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

டெல்லியில் கட்சி அலுவலகம் திறந்தபோது, காவிக் கட்சியின் முக்கியப்புள்ளிகள் சிலரைச் சந்தித்தாராம் முதன்மையானவர். ‘கதர்க் கட்சியுடனான நெருக்கத்தைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளுங்கள்… எங்கள் தரப்பில் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்களாம் காவிக் கட்சியின் முக்கியப்புள்ளிகள். முதன்மையானவருக்கும் அந்த டீல் ரொம்பவே பிடித்துப்போக, ஓகே சொல்லிவிட்டு வந்தாராம். இந்நிலையில் ராஜ்ய சபா எம்.பி-க்கள் தேர்வில், கதர்க் கட்சிக்கு ஓரிடத்தை முதன்மையானவர் ஒதுக்கிய விவகாரம், டெல்லி புள்ளிகளைக் கடுப்பாக்கிவிட்டதாம். ‘கூட்டணி தர்மத்துக்காக அல்ல… சில ஆதாயக் கணக்குகளை வைத்துத்தான் கதர்க் கட்சிக்கு ஓரிடத்தை ஒதுக்கினார்கள்’ என டெல்லி புள்ளிகளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் மீடியேட்டர்கள். #கூட்டிக் கழிச்சுப் பாருங்க... கணக்கு சரியா வரும்!

கிசுகிசு

ஆன்மிகம், அரசியல் எனக் கலந்துகட்டி சின்ன தலைவி சுற்றுப்பயணங்களை நடத்திவருகிறார். இதே பாணியில் சீக்கிரமே தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். கிளைக்கழகம் வரையிலான நிர்வாகிகளைச் சந்தித்து, எல்லோரையும் தன்வசமாக்கத்தான் இந்தத் திட்டமாம். பயணம் குறித்த தகவல் சின்ன தலைவியைப் பதற்றமாக்கியதோ இல்லையோ… இலைக் கட்சியின் பணிவானவரைக் குலைநடுங்க வைத்துவிட்டதாம். ‘கட்சியை மொத்தமாக அவர் வசமாக்க நினைக்கிறாரோ’ என முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்து விசாரித்து வெதும்புகிறாராம் பணிவானவர். #மரண பயத்தைக் காட்டுறாய்ங்க பரமா..!

கிசுகிசு

‘இவர்கள் சொல்லும் சிபாரிசுகளைச் செய்துகொடுக்கவே கூடாது’ என இல்லத் தரப்பிலிருந்து அனைத்துத் துறை அமைச்சர்களுக்கும் உத்தரவு போடப்பட்டிருக்கிறதாம். மிக நெருங்கிய உறவினர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் இருப்பதால், சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்களாம் அமைச்சர்கள். முதன்மையானவரின் உற்ற உறவுக்காரப் பெண்மணி, ஒரு காலத்தில் அரசையே ஆட்டுவிக்கிற சக்தியாக இருந்தவர். அவரைத்தான் இந்த லிஸ்ட்டில் முதல் ஆளாகக் குறிப்பிட்டிருக்கிறார்களாம். #ஏது பந்தபாசம்... எல்லாம் வெளிவேஷம்... காசு பணம் வந்தா...

கிசுகிசு

நவரச நடிகரின் பெயர்கொண்ட அதிகாரி, துறைரீதியான விஷயங்களை கவனிப்பதே இல்லையாம். முக்கிய அதிகாரி தன்னைப் பழிவாங்கிவிட்டதாகப் பலரிடமும் ஆதங்கப்படும் இவர், ‘விரைவில் எனக்கு நெருக்கமானவர் உயரிய பதவிக்கு வரப்போகிறார்’ என்றும் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம். ‘யார் எந்தப் பொறுப்புக்கு வந்தால் என்ன… இவர், இவரோட வேலையைப் பார்க்கவேண்டியதுதானே…’ எனப் புரணி கேட்பவர்களே புலம்புகிறார்களாம். #‘இதையெல்லாம் தட்டிக்கேக்க ஒருத்தன் வராமலா போயிருவான்?!’ மொமன்ட்!

கிசுகிசு

நடுநிலைத் தலைவரின் படத்தை வாரிசுப்புள்ளி வாங்கி வெளியிடுவது, அரசியல்ரீதியான சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ‘கடந்த தேர்தலில் கடுமையான விமர்சனங்களைச் செய்தவரின் படத்தை நாம் விநியோகிப்பது நியாயமா?’ என மூத்த நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பினார்களாம். முதன்மையானவரின் கவனத்துக்கும் இந்த ஆதங்கத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்களாம். ‘அரசியல் வேறு… வியாபாரம் வேறு…’ என பதில் வந்திருக்கிறது. கட்டுப்படுத்த முடியாத சக்தியாக வாரிசு வளர்ந்து வருவதற்குச் சாட்சியாக இந்த விஷயத்தைச் சொல்லிச் சொல்லிக் குமுறுகிறார்கள் சீனியர்கள். #காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

கிசுகிசு

மாநகரத்தின் உயரிய பெண் தலைவி, தன்னை நிரூபிக்க தடாலடியாகச் சில விஷயங்களைச் செய்தார். ஆய்வுப் பணிகள், அதிரடியான பிரஸ் மீட், கலந்தாய்வுக் கூட்டங்கள் என அம்மணி தீவிரம்காட்ட, கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு இதில் உடன்பாடே இல்லையாம். அம்மணிக்கு எதிராகப் புகார்களைக் கிளப்பிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்களாம். மீடியாக்களில் அம்மணிக்கு எதிரான செய்திகள் வேகமெடுப்பதற்கான பின்னணியே ஆளுங்கட்சியின் புள்ளிகள்தானாம். #நாங்கள் கூடவே இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமானவையாக இருக்கும்!