Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

டெல்லிக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுவிட, கடைசிவரை போராடிப் பார்த்தார் கதர்க் கட்சியின் தமிழ்நாடு தலைவர். யார் கவனத்துக்கும் தெரியாமல் டெல்லிக்குப் போய் கட்சித் தலைவியை நேரடியாகச் சந்தித்தும் கோரிக்கைவைத்தார். ‘பார்க்கலாம்…’ எனத் தலைவி சொல்லி அனுப்பிய நிலையில், ரகசியப் பிரமுகர் வழக்கம்போல் வித்தை காட்டி விளையாடியதால், அவருக்கான வாய்ப்பு அம்போவானது. ஆனாலும், அவருக்குக் கவலை இல்லையாம். தமிழ்நாடு தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் இப்படி வாய்ப்பு கேட்பதுபோல் பாவ்லா காட்டினாராம். வாய்ப்பு கிடைக்காததால், தலைவர் பதவி தப்பிவிடும் என்பதுதான் அவர் கணக்காம். #ராஜ தந்திரங்களைக் கரைத்துக் குடித்திருப்பார்போலயே!

கிசுகிசு

கடந்த தேர்தலில் விசில் கட்சியின் சார்பில் டெல்டா மாவட்டத்தில் களமிறங்கிய பாரம்பர்ய வழக்கறிஞர் ஒருவர், கணிசமான வாக்குகளை வாங்கினார். அப்போதே அவரை ஆளுங்கட்சிக்கு இழுத்துப்போட முயற்சிகள் நடந்தன. ஆனாலும், வழக்கறிஞர் வர மறுத்துவிட்டார். இந்நிலையில் பழைய பாசத்தில் அணில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்க, மறுக்க முடியாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர். ஆனால், அவர் ஆளுங்கட்சிக்கு வருவதை அந்த மாவட்டத்தின் ஆளுங்கட்சிச் செயலாளர் விரும்பவில்லையாம். வழக்கறிஞர் வந்தால், தனது எதிர்காலத்துக்குச் சிக்கல் என நினைக்கிறாராம். அதனால், எல்லை தாண்டி கட்சி விவகாரங்களில் தலையிடும் அணில் அமைச்சருக்கு எதிராக, கட்சித் தலைமை வரை புகார் சொல்லிப் புலம்புகிறாராம். #எல்லை தாண்டிய பயங்கரவாதமா இருக்கே பாஸ்!

கிசுகிசு

டெல்டா மாவட்ட விசிட்டின்போது, வயல்வெளியில் விரிப்புகள் விரித்தது தொடங்கி, பயணத் திட்டத்தைச் சரிவர ஏற்பாடு செய்யாதது வரையிலான விஷயங்கள் முதன்மையானவரைக் கடுமையான ஆத்திரத்தில் தள்ளிவிட்டதாம். அதைத் தாண்டி வரவேற்பு கொடுத்தவிதத்திலும், தனித் தனிக் கோஷ்டிகளாக டெல்டா மாவட்ட நிர்வாகிகள் செயல்பட்டதும் முதன்மையானவரை வேதனைப்படுத்தியதாம். சென்னை திரும்பிய பிறகு கட்சியின் சீனியர் நிர்வாகிகளிடம் ஆதங்கப்பட்டவர், டெல்டா மாவட்டக் குளறுபடிகளைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளைப் பார்க்கச் சொன்னாராம். #தாய் தின்ற மண்ணே... இது பிள்ளையின் கதறல்... ஒரு பேரரசன் புலம்பல்..!

கிசுகிசு

பத்திரிகையாளர்களை அவமானப் படுத்தியதாகக் கிளம்பிய சர்ச்சை, இந்த அளவுக்குப் பெரிதாகத் திரும்பும் எனக் காவிக் கட்சியின் மாஜி காக்கி நினைக்கவில்லையாம். “இதேபோல்தான் முன்பு விஜயகாந்துக்கு எதிராகவும் பத்திரிகை யாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால், கடைசிவரை விஜயகாந்த் இறங்கி வரவேயில்லை. அதேபோல் நீங்களும் வீராப்பாக நில்லுங்கள்…” என மாஜி காக்கியை உசுப்பேற்றுகிறார்களாம் உடனிருப்பவர்கள். விஷயத்தைத் தீர்வுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என நினைப்பவர்களையே மாஜி காக்கி நம்புகிறாரே என ஆதங்கப்படுகிறார்கள் விஷயப்புள்ளிகள். #இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

கிசுகிசு

சின்ன தலைவி கலந்துகொள்ளும் எந்த விழாவிலும், கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளக் கூடாது எனக் கறார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் இனிஷியல் புள்ளி. இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகப் பல மாதங்களாகச் செய்திகள் கசியும் நிலையில், யுத்தம் இப்போது வெளிப்படையாகவே நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதனால், ‘யாரை நம்பிக் கட்சியில் நீடிப்பது’ என நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் கும்மியடிக்கிறது. ‘தாக்குப்பிடித்து நிற்கும் ஒருசில நிர்வாகிகளும் இந்தக் குழப்பத்திலேயே ஓடிப்போய்விடப் போகிறார்கள்…’ என வேதனைப்படுகிறார்கள் லோக்கல் நிர்வாகிகள். #இன்னுமா இந்த ஊர் நம்புது!

கிசுகிசு

முதன்மையானவரைக் காட்டிலும், அவரின் வாரிசை வறுத்தெடுப்பதையே முழு நேர டார்கெட்டாக முடிவெடுத்துவிட்டாராம் அண்ணன் தலைவர். அதனால்தான், வாரிசை அமைச்சராக்கச் சொல்லி தீர்மானம் இயற்றப்பட்ட விவகாரத்தை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டாராம். பேச்சாக மட்டும் அல்லாமல், சமூக வலைதளப் பதிவுகளிலும் வாரிசை நேரடியாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறார் அண்ணன் தலைவர். திடீர் ஆவேச அட்டாக்கின் பின்னணி புரியாமல் மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் வாரிசுக்கு நெருக்கமானவர்கள். #எட்றா அந்த அ.க அறுபத்து ஏழ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism