Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

உச்ச நடிகரிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நடுநிலைத் தலைவர். ‘எங்கள் நிறுவனத் தயாரிப்பில் ஒரு படத்தில் நடியுங்கள்…’ என்று தொடங்கிய பேச்சுவார்த்தை, ‘அரசியல்ரீதியாக ஏன் நீங்கள் என்னை ஆதரிக்கக் கூடாது?’ என்கிற அளவில் வந்து முடிந்ததாம். இரண்டுக்குமே உச்ச நடிகர் சொன்ன பதில்: ‘யோசித்து முடிவெடுக்கலாம்’ என்பதுதானாம். ‘இப்போதைக்கு அவசரமில்லை… தேர்தல் நேரத்தில் ஆதரவு கருத்து தெரிவித்தால் போதும்’ என நடுநிலைத் தலைவர் மறுபடியும் தன் எதிர்பார்ப்பை அழுத்தமாக வலியுறுத்தினாராம். #மய்யமாவே பதில் சொல்றாரே?!.

கிசுகிசு

கச்சத்தீவைத் திரும்பப் பெறுகிற வரலாற்று வாய்ப்பு தற்போது நெருங்குகிறது என்கிறார்கள். ‘தங்களின் முயற்சியால்தான் அது சாத்தியமாகப்போகிறது’ என்று காண்பிக்க, விரைவில் இந்தக் கோரிக்கையுடன் டெல்லி பறக்கத் திட்டமிட்டிருக்கிறார் முதன்மையானவர். இது தெரிந்தே முதன்மையானவருக்கு இன்னமும் தேதி கொடுக்காத டெல்லி தரப்பு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘கச்சத்தீவைப் பெற்றுத் தந்தோம்’ எனக் குரல் உயர்த்த, காவிக் கட்சி திட்டமிட்டு வருகிறது. #‘சூது எங்களுக்கும் தெரியும்’ மொமன்ட்!

கிசுகிசு

தி.மு.க-வைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர், கட்சி குறித்தும், குடும்ப ஆதிக்கம் குறித்தும் இன்னொரு நிர்வாகியுடன் பேசிய போன் பேச்சு டேப் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவு, இப்போது காவிக் கட்சியின் காக்கி மாஜி கையில் இருக்கிறதாம். ஒன்றுக்குப் பலமுறை இந்தப் பதிவைப் போட்டுக் கேட்ட காக்கி மாஜி, ‘தி.மு.க-வின் வண்டவாளங்களை அம்பலப்படுத்த இது ஒன்று போதும்’ என்கிறாராம். ஆனாலும், கடந்த வாரமே வெளிவந்திருக்கவேண்டிய இந்தப் பதிவை, இன்னமும் தன் கட்டுப்பாட்டில் காக்கி மாஜி வைத்திருக்கும் ரகசியம்தான் யாருக்கும் புரியவில்லை. #ஒண்ணுமே புரியலே உலகத்திலே...

கிசுகிசு

சகட்டுமேனிக்குச் சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளுக்கான பணியிட மாற்றம், வாரிசு ரூட்டில் ஏற்பாடானதுதானாம். ‘கேட்டது ஒன்று கிடைத்தது ஒன்று’ என்கிறரீதியில் ஆளும் தரப்புக்கு நெருக்கமான அதிகாரிகளே குமுறிக்கொண்டுதான் இருக்கிறார்களாம். கேட்காமலேயே ஜாக்பாட் அடித்தது, புறநகரத்தில் உச்சப் பொறுப்புக்கு வந்த அதிகாரிக்குத்தானாம். பலரும் முட்டிமோதிய நிலையில், லட்டு மாதிரி அவரை அமர்த்தி அழகுபார்த்திருக்கிறது ஆளும் தரப்பு. #கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்!

கிசுகிசு

ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிவதாகச் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. தற்கொலைச் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டத்தை அறிவிக்க, விஷயம் முதன்மையானவர் கவனம் வரை போயிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நடத்திவரும் விஷயத்தைச் சொன்ன அதிகாரிகள் தரப்பு, ‘கோர்ட் தீர்ப்பு வரும் வரை நாம் எதுவும் செய்ய முடியாது’ என விளக்கம் சொன்னதாம். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான புதிய சட்ட வடிவத்தை உருவாக்க முதன்மையானவர் முயன்றுவிடக் கூடாது என்பதில் அதிகாரிகள் சிலர் தெளிவாக இருக்கிறார்களாம். ‘ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் சிலர் முதன்மையானவருக்கு நெருக்கமான வளையத்தில் இருக்கும் வரை, பல குடும்பங்கள் சீரழியத்தான் செய்யும்’ எனக் குமுறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #அதிகாரிகள் ஆடுவதுதான் ஆக மோசமான சூதாட்டம்!

கிசுகிசு

சின்ன தலைவி செல்லும் இடமெல்லாம், சமீபகாலமாகச் செலவுகளை அள்ளிவிட்டவர் பால் விவகாரத்தில் சர்ச்சையான ட்ரீட்மென்ட் புள்ளிதான். என்னதான் செலவு செய்தாலும், சின்ன தலைவியை அவர் நெருங்கிப் பேசியது உறவுகளுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லையாம். விவேகமான வாரிசு தொடங்கி, உதவியாளர் வரை பலரும் அவரைக் கட்டம் கட்டத் தொடங்கினார்கள். தங்களைத் தாண்டி யாரும் சின்ன தலைவியை நெருங்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் இந்த ஆட்கள், ட்ரீட்மென்ட் புள்ளியைப் பற்றி என்னதான் சொன்னார்களோ… சமீபகாலமாகச் சின்ன தலைவி அவரை ஒதுக்கிவைக்கத் தொடங்கிவிட்டாராம். அதனால், தாய்க்கழகத்துக்கே திரும்பத் தயாராகிவிட்டாராம் ட்ரீட்மென்ட் புள்ளி. #‘தாய்’ன்னாலும் ‘அம்மா’ன்னாலும் ஒண்ணுதானே பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism