Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

சமீபத்தில் அதிரி புதிரி வெற்றிகண்ட நடுநிலைத் தலைவரின் படத்துக்கு, ஆன்லைன் டீம் பக்காவாக வொர்க் பண்ணியது. நெகட்டிவ் ரிவ்யூ சொன்னவர்களை உண்டு இல்லை என துவம்சம் பண்ணியது. படத்துக்கு எதிராக யாரும் வாய் திறக்கக் கூடாது என்கிற அளவுக்கு இறங்கி அடித்தது இந்த டீம். இதில் மிரண்டுபோன நடுநிலைத் தலைவர், இந்த டீமை அப்படியே தன் அரசியலுக்கும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறாராம். அதற்கான பணப் பரிவர்த்தனை குறித்த பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டாராம். #உத்தம வில்லன்!

கிசுகிசு

டெல்டா மாவட்டங்களில் அவசரகதியில் நடத்தப்படும் தூர்வாரும் பணிகள் குறித்து, கம்ப்ளீட் விவரங்களைச் சேகரிக்கச் சொன்னாராம் காவிக் கட்சியின் காக்கி மாஜி. ‘பாதிக்குப் பாதி ஊழல்’ என்கிற அளவுக்கு அநியாயத்துக்குத் தூர்வாரிய விவரங்களை அனுப்பியிருக்கிறார்களாம் நம்பகமானவர்கள். விரைவில், ‘மூத்த அமைச்சரின் ஆசியோடு நடந்த ஊழல் பட்டியல்’ என டெல்டா மாவட்ட விவரங்களை வெளியிடப்போகிறாராம் காக்கி மாஜி. #வாருங்க... வாருங்க... நல்லா வாருங்க!

கிசுகிசு

அரசியலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியபோது, பத்திரிகையாளர்கள் பலரோடும் வலிய அன்பு காட்டி அரவணைத்தார் ஆளுங்கட்சி வாரிசு. ஆனால் ஆட்சி மாறியதும் காட்சி மாறிய கதையாக, பத்திரிகையாளர்கள் யார் போன் செய்தாலும் நோ ரெஸ்பான்ஸ். உதவியாளர் ரூட்டில் தொடர்புகொண்டால், அதற்கும் அதே மரியாதைதானாம். திடீர் நட்பாகச் சூழ்ந்திருக்கும் ஆகாத ஆட்கள்தான், எல்லோரிடமும் இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்லிக் கற்றுக்கொடுத்திருக்கிறார்களாம். #கூடா நட்பு கேடாய் முடியும்!

கிசுகிசு

முதன்மையானவரின் புதுக்கோட்டை விசிட்டில் உட்கட்சி மோதல் குறித்து நேரடியாகப் புலம்ப, பலரும் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், சட்டம் பேசுகிற சீனியர் அமைச்சரும், மாவட்டப் பொறுப்பாளரான மன்னர் பிரமுகரும் அதற்கு வாய்ப்பில்லாதபடி செய்துவிட்டார்களாம். தங்களுக்குவேண்டிய ஆட்களைப் பதவிக்குக் கொண்டுவரவும், ஆகாத ஆட்களைக் கழித்துக்கட்டவும் உட்கட்சித் தேர்தலை இந்த இருவரும் வாகாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களாம். #புலம்பக்கூட விட மாட்றாங்களே..!

கிசுகிசு

‘பிறந்தநாளில் அரசியல் என்ட்ரி அறிவிப்பை வெளியிடுங்க தலைவா’ என `மாஸ்டர்’ நடிகருக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் மன்றத்தினர். ‘சந்திப்பு உண்டு… மற்றபடி சைலன்ட் மோடுதான்’ எனத் தெளிவாகச் சொல்லிவிட்டாராம் `மாஸ்டர்’ நடிகர். கட்சிக்கான கட்டமைப்பைப் பெரிதாக்கச் சொல்லி இப்போதைக்கு உத்தரவாம். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் திராவிடக் கட்சிகளுக்கு நிகராக பூத் கமிட்டிகளை அமைப்பதுதான் மாஸ்டர் நடிகரின் டார்கெட்டாம். #திரைக்கதை நல்லா விறுவிறுப்பா இருக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism