Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

லாக்கப் மரணங்கள் தொடர்வது முதன்மையானவரைக் கடுமையான வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். சமீபத்தில் நடந்த துயருக்கு விளக்கம் சொல்கிறேன் என்கிற பெயரில், ‘சம்பந்தப்பட்ட காவலர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்’ என அன்பான உயரதிகாரி படுகேஷுவலாகக் கொடுத்த பேட்டியும் முதன்மையானவரை அப்செட்டாக்கிவிட்டதாம். இது குறித்து, காவல்துறையின் உச்ச அதிகாரியை போனிலேயே வறுத்தெடுத்தாராம். ‘முதல்ல எந்த விஷயத்தை, எப்படிப் பேசணும்னு அதிகாரிகளுக்குச் சொல்லிக்கொடுங்க…’ என்றாராம் வெறுத்துப்போய். #‘படுத்துறாய்ங்களே என்னிய’ மொமன்ட்!

கிசுகிசு

அதிக குழப்பங்களும் மாற்று அறிவிப்புகளும் அடிக்கடி நடப்பது கற்பிக்கும் துறையில்தான். ஆனாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மாற்றத்தின்போது தன் துறையில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது எனக் கோரிக்கை வைத்தாராம் அன்பான அமைச்சர். அந்த அளவுக்கு அதிகாரிகள், அமைச்சரை வளைத்து வைத்திருக்கிறார்களாம். “லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாத விவகாரத்தைக்கூட அமைச்சர் கவனத்துக்குப் போகாமல் தடுத்த அதிகாரிகளைத்தான் அவர் மிகவும் நம்புகிறார்” எனக் கோட்டை வட்டாரத்திலேயே குமுறல்கள் ஒலிக்கின்றன. #மாற்றம் ஒன்றே மாறாதது பாஸ்!

கிசுகிசு

இலைக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ‘ஒற்றைத் தலைமை’ குரலை உரக்க ஒலிக்கவைத்து ரியாக்‌ஷன் கவனித்திருக் கிறார் துணிவானவர். பணிவானவரின் சமுதாயத்தைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களையே வளைத்து, அவர்களையும் தாம் தூம் அமளியில் இறக்கியதுதான் துணிவானவர் செய்த ஹைலைட். இதற்கு பக்கபலமாகச் செயல்பட்டவர் முன்னால் ஹெல்த் புள்ளியாம். கூட்டத்தில் அவரையும் வலுவாகக் கூவ வைத்து, ‘உங்களுக்குச் சமுதாய சப்போர்ட்டும் இனி கிடையாது’ என்பதைப் பணிவானவருக்குப் பொளேரெனப் புரியவைத்தாராம் துணிவானவர். ‘சும்மாவே காட்டிக்கொடுக்கிற மாவட்டம்னு பேர் வாங்கிவெச்சிருக்கோம். கட்சிரீதியாவும் அதையே பண்ணியிருக்காரே…’ என ஹெல்த் புள்ளிக்கு எதிராகப் பொருமுகிறார்கள் கோட்டை மாவட்ட நிர்வாகிகள். # ‘அதுவும் அந்தத் தவில்காரர் காதுல கேக்குற மாதிரி சொல்லு’ மொமன்ட்!

கிசுகிசு

டெல்லி வழக்கின் குற்றப் பத்திரிகையில் இனிஷியல் புள்ளியின் பெயர் சேர்க்கப்படாமல் விடுபட்ட பின்னணியில், காவிக் கட்சியின் சீனியர் புள்ளிகள் சிலர் இருக்கிறார்களாம். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை வலுவாக்கத்தான் இந்த வளைப்பாம். இது குறித்து சின்ன தலைவியிடம் எந்த ஆலோசனையும் பெறாமல், தன் இஷ்டத்துக்கே டெல்லி ஆட்களிடம் பேசுகிறாராம் இனிஷியல் புள்ளி. ‘சின்ன தலைவியை அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கச் சொல்வது என் பொறுப்பு’ என்றும் டெல்லியிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். #அப்ப... அந்த சமாதியில பண்ண சத்தியம்?!

கிசுகிசு

தடாலடி மடாதிபதி, காவிக் கட்சிக்காக வரிந்துகட்டிப் பேசுவதாக முதன்மையானவர் கவனத்துக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. மடாதிபதியின் சமீபத்திய பேச்சுகளின் லிங்க்கும் முதன்மையானவருக்கு அனுப்பப்பட, அதன் பிறகுதான் ‘கைது செய்யவும் தயங்க மாட்டோம்’ என ‘முரசொலி’யில் கண்டிப்பு காட்டப்பட்டதாம். “நான் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. இப்படியெல்லாம் என் குரலை அடக்க முடியாது” என ஆளும் அரசுக்கு நெருக்கமான புள்ளியிடமே பதில் பாய்ச்சலைக் காட்டினாராம் மடாதிபதி. #ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரிக்கவே முடியாதுபோலயே?!

கிசுகிசு

‘ஜனாதிபதி தேர்தலில் கிறிஸ்தவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என உறுமல் தலைவர் சொல்ல, அதை ஆதரிப்பதா, அமைதி காப்பதா என முதன்மையானவருக்கு ரொம்பவே குழப்பம். காரணம், அத்தகைய கருத்தைத்தான் அவரும் பேசத் தயாராகி வந்தாராம். உறுமல் தலைவர் முந்திக்கொண்டு முதலிலேயே விஷயத்தைப் போட்டு உடைக்க, அதன் பிறகு சொன்னால் தான் காப்பியடித்துச் சொல்வதுபோல் ஆகிவிடுமே எனத் தயங்கினாராம் முதன்மையானவர். ‘அமைதி காப்பதே சரி’ என முடிவெடுத்து சைலன்ட் மோடுக்குப் போனாராம். #இது மௌனமான நேரம்... தல மனதில் என்ன பாரம்?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism