Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை நேரில் பார்த்தாலும், தன் விவகாரம் குறித்து அவர்கள் நேரம் ஒதுக்கிக் கேட்காதது பணிவானவரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது. தன் மகன் மூலமாக பகீரதப் பிரயத்தனம் செய்து ‘உள்துறை’ புள்ளியைச் சந்திக்க முயல, அதுவும் தோல்வியில் முடிந்தது. ‘திட்டமிட்டுத் தவிர்க்கிறார்களோ?’ என்கிற அளவுக்குப் பணிவானவர் வெறுத்துப்போன நிலையில், காவிக் கட்சியின் பவர்ஃபுல் அமைச்சர் போனில் பேச, அதன் பிறகே ஆசுவாசமானாராம். ‘வெளிநாட்டுப் பயணம் முடித்து பிரதமர் உங்களோடு பேசுவார்’ என அவர் கொடுத்த நம்பிக்கையில் உற்சாகமாகியிருக்கிறாராம் பணிவானவர். #அவர் டூர் போனா சீக்கிரம் வர மாட்டாரே பாஸ்..!

கிசுகிசு

அத்தனை பேர் கூடாரம் மாறிய நிலையிலும், ஒற்றை ஆயுதமாகத் தன் பக்கம் நிற்கும் டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளிமீது இலைக் கட்சியின் பணிவானவருக்கு ரொம்பவே மரியாதையாம். எல்லோரும் நினைப்பதுபோல் பணிவானவர்மீது பாசமோ, சாதிப்பற்றோவெல்லாம் ட்ரீட்மென்ட் புள்ளிக்குக் கிடையாதாம். கடந்த ஆட்சியில் மணல் விவகாரத்தில் துணிவானவருக்கும், ட்ரீட்மென்ட் புள்ளிக்கும் முட்டிக்கொண்டுவிட்டதாம். கூடவே, முருகப்பெருமான் பெயர்கொண்ட ஒருவரை தஞ்சையில் மாஜி மணி வளர்த்துவிட, அதையும் துணிவானவர் கண்டிக்கவில்லையாம். இந்த ஆதங்கம்தான் ட்ரீட்மென்ட் புள்ளியைப் பணிவானவர் பக்கம் நிற்க வைத்திருக்கிறதாம். #‘பிரியமாவது... மண்ணாவது... எனக்கு பஸ் 3 மணிக்குத்தான்!’

கிசுகிசு

நாடாளுமன்றத் தேர்தலுக்குள் சொந்த வீடு வாங்க சபதம் ஏற்றிருக்கிறாராம் அண்ணன் தலைவர். இதற்காக நலன் விரும்பிகள் பலரிடமும், ‘அண்ணனுக்கு அன்பு காட்டுங்கப்பா…’ எனக் கோரிக்கை விடுத்து வருகிறாராம். இந்த விஷயம் எப்படியோ ஆளும் தரப்பை எட்ட, சில ஆதரவுக் கரங்கள் வலிய நீண்டனவாம். வீட்டுக்கான மொத்தச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாம். ஆனாலும், “உங்களை எதிர்ப்பதுதான் என் அரசியல். உங்கள் ஆதரவை ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டேன்” எனப் பொளேர் பதில் சொன்னாராம் அண்ணன் தலைவர். #‘அண்ணன் நான் கதகளி ஆடி நீ பாத்ததில்லயே?’

கிசுகிசு

ஆளும் தரப்பை பயமுறுத்தவோ என்னவோ, பவன் புள்ளி அடிக்கடி டெல்லிக்குப் பறந்துவருகிறார். இதை முன்கூட்டியே யூகித்து, தகவல் சொல்லவேண்டிய உளவுத்துறை, ‘கிளம்பிட்டார்’, ‘போயிட்டார்’ என்று `புலிகேசி’ படக் காட்சிபோல நிகழ்ச்சிக் குறிப்பு வாசிப்பது முதன்மையானவரை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். பயணம் மட்டுமல்லாமல் எது குறித்துப் பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது போன்ற எந்த விவரத்தையும் உளவு ஆட்களால் யூகிக்க முடியவில்லையாம். பவன் ஏரியாவை கவனிக்கும் உளவு ஆட்கள் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். #‘மன்னா... போர் வரப்போகிறதாம்!’

கிசுகிசு

பொதுக்குழு கூட்டப்பட்ட நாள் அன்று, இலைக் கட்சியின் துணிவானவருக்கு சந்திராஷ்டமாம். அதைப் பார்க்காமல் பொதுக்குழுவுக்கு எப்படி தேதி குறித்தீர்கள் என ‘அறிவுரை’ ஆட்களைக் குதறியெடுத்துவிட்டாராம். ‘புதிய தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது’ எனக் கெடுபிடி பிறப்பிக்கப்பட்டதற்கு சந்திராஷ்டமம்தான் காரணம் என உறுதியாக நம்புகிறாராம். ‘இதையெல்லாம்விட ஆயிரம் மடங்கு நல்ல நேரம் பார்க்குற அந்தம்மாவே வீட்லதான் உட்கார்ந்திருக்கு. இந்த மனுஷன் இப்பப் போயி சந்திராஷ்டமத்தைக் காரணம் காட்டுறாரே?’ எனப் புலம்புகிறார்கள் உடனிருப்பவர்கள். #ஒரு எலுமிச்சம் பழத்துலயா லாரி ஓடப்போகுது!?