Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

தமிழகத்தின் மூன்று இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி தேர்தலை, ஒரே நேரத்தில் நடத்தியிருந்தால் இலைக் கட்சிக்கு ஒரு எம்.பி சீட் கிடைத்திருக்கும். டெல்லி போய் காவிக் கட்சி ஆட்களைச் சந்தித்தபோது, இது குறித்துப் பேசியிருப்பதாகப் பணிவானவரும் துணிவானவரும் கட்சி நிர்வாகிகளிடம் சொன்னார்களாம். அதையும் மீறி ராஜ்யசபா தேர்தலைத் தனித்தனியாக நடத்தும்படி உத்தரவு வர, இலைக் கட்சி நிர்வாகிகள் பதறிப்போனார்கள். ‘இந்த ஒரு சீட் வாய்ப்பை யாருக்குக் கொடுத்தாலும் சிக்கல் வரும்… அதனால் தனியாகவே நடத்துங்கள்’ எனக் காவிக் கட்சியினரிடம் சொன்னதே பணிவும் துணிவும்தானாம். இது புரியாமல், இலைக் கட்சி நிர்வாகிகள் டெல்லியைத் திட்டிக்கொண்டிருக்கிறார்களாம். #எண்ணெய கொட்டினவனை விட்டுட்டு, எதுக்க வந்தவனா அடிச்சாங்களாம்!

“ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளைப் பேசும்போது, கட்சித் தலைமையின் உத்தரவு பெற்றே பேச வேண்டும்” எனக் கறாராகச் சொல்லியிருக்கிறாராம் அண்ணன் தலைவர். தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்ட விஷயங்களுக்கும் நிர்வாகிகளைப் புதிதாக நியமிக்கப்போகிறாராம். சட்டரீதியான நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளாதபடி பேச, நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் மூலமாகப் பயிற்சியளிக்கவும் திட்டமாம். #கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

சீறும் தலைவரின் பிறந்தநாளுக்கு, அமைச்சர்கள் பலரும் வாழ்த்து சொன்ன விஷயம் முதன்மையானவர் கவனத்துக்குப் போயிருக்கிறது. ‘கூட்டணிக் கட்சித் தலைவர் என்றாலும், தலைமையிடம் அனுமதி கேட்காமல் ஆளாளுக்கு வாழ்த்தினால் எப்படி?’ எனச் சில மாண்புமிகுக்களுக்குக் கடுமையான டோஸாம். ‘நாம வாழ்த்து சொன்ன விஷயம் யார் மூலமா முதன்மையானவருக்குப் போயிருக்கும்?’ எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள் சீறும் தலைவருக்கு வாழ்த்து சொன்னவர்கள். #ஒரு வாழ்த்து சொன்னது குத்தமாய்யா?!

‘யூத்தான ஒருவருக்குப் பதவி கொடுத்துப் பார்க்கலாம்’ என டெல்லி தலைமை யோசிக்க, கதர்க் கட்சியின் தலைவர் பதவிக்குக் கடுமையான குடுமிப்பிடி நடக்கிறது. அதிலும் குறிப்பாக, எம்.பி-யாக இருக்கும் ஒரு பெண்மணிக்கும், எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையேதான் கடுமையான மோதலாம். வாரிசுத் தலைவரின் செல்வாக்கு எம்.பி-க்கு இருப்பதால், டெல்லியை வேறு ரூட்டில் அணுக வியூகம் வகுத்துவருகிறார் எம்.எல்.ஏ. #சபாஷ்... சரியான போட்டி!

டெல்டா மாவட்டத்தின் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கில், சில சாதகங்களைச் செய்து கொடுத்ததாக அப்போதைய காவல்துறை அதிகாரிமீது சர்ச்சை வெடித்தது. அதனால், அவரை அங்கிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்துக்கு மாற்றினார்கள். இப்போது அதைவிட டம்மி போஸ்ட்டுக்கு மாற்றியிருக்கிறார்கள். ஒரு மாவட்டத்துக்கு மாற்றி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், ஏன் இந்த அதிரடி எனக் கேட்டால், ‘முறைகேடுகள் அப்படிப்பட்டவை’ எனச் சொல்லி அதிரவைக்கிறார்கள். #நாணயம் மெத்த... நடுவீடு பொத்த!

சின்ன தலைவியின் பிறந்தநாளில் மாஜிக்கள் இருவர், தங்கள் தரப்பில் ஆட்களை அனுப்பி வாழ்த்து சொன்னார்களாம். ‘போன் பண்ணிக் கொடுங்க… நன்றி சொல்வோம்’ எனச் சின்ன தலைவி சொல்ல, மாஜிக்கள் இருவரும் பதறிப்போய்விட்டார்களாம். “சீக்கிரமே நேரில் வந்து சந்திக்கிறோம்… அதுவரைக்கும் போன் தொடர்புகள் எதுவும் வேண்டாம்” என அனுப்பிய ஆட்கள் மூலமாகவே தகவல் சொல்லி எஸ்கேப் ஆனார்களாம். #மரண பயத்தக் காட்டிட்டாங்கடா பரமா..!

கிசுகிசு

முதன்மையானவருக்கு எதிராகக் கடுமையான காட்டம் காட்டும் சர்ச்சை சாமி, தனக்கு நெருக்கமானவர்களிடம் அவரை அநியாயத்துக்குப் புகழ்ந்து பேசுகிறாராம். “எனக்கு எதிரா யாரும் பேசக் கூடாதுன்னு கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளை போட்டிருக்கார். நான் சொல்ற விஷயங்களையும் பரிசீலனை பண்றார். அர்ச்சகர்கள் விஷயத்திலும் அடக்கி வாசிக்கிறார்” என ‘சாமி’ படத்தின் பெருமாள் பிச்சை பாணியில் சிலிர்க்கிறாராம். #வெள்ளந்தியான மனுசனா இருக்காரே!

தங்கைத் தலைவி எம்.பி-யாக இருக்கும் தொகுதியின் மாவட்ட அதிகாரிகள், மாண்புமிகுக்களுக்கு மட்டுமே தலையாட்டுகிறார்களாம். எம்.பி என்கிற கணக்கில் தங்கைத் தலைவி எடுத்துச்சொல்லும் விஷயங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லையாம். ஆளுங்கட்சியின் வேறு நிர்வாகிகள் பேசினாலும், ‘அமைச்சர்கள் ரூட்டிலேயே சொல்லுங்க’ என்கிறார்களாம் மாவட்ட அதிகாரிகள். அந்த அளவுக்கு அமைச்சர்களின் ஆட்சி நடக்கிறதாம் அந்த மாவட்டத்தில். #இது அண்ணனுக்குத் தெரியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism