Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

பணிவானவர் பக்கம் நின்ற வகையில், ட்ரீட்மென்ட் புள்ளிக்கு டெல்டா மாவட்டங்களில் செம ரெஸ்பான்ஸ். பசைக்கு ஆசைப்பட்டு திசைமாறிய டெல்டா நிர்வாகிகள், ஊர்ப்பக்கம் வரவே பயந்துபோய் சென்னையில் பதுங்கிக் கிடக்கிறார்கள். ட்ரீட்மென்ட் புள்ளிக்கு ஆல் இன் ஆலாக இருந்த அகிம்சை பிரமுகர், “நான் ஊருக்குப் போனால் என்னைக் கொன்னுடுவாங்க…” எனக் கதறத் தொடங்கிவிட்டாராம். ‘மாவட்டச் செயலாளர் பதவிக்கு ஏற்பாடு செய்கிறோம்’ எனத் துணிவானவர் தரப்பு விரித்த வலையில்தான் இந்த அகிம்சை பிரமுகர் சிக்கினாராம். துணிவானவர் தரப்பில் பேசியவர்களையும் இப்போது தொடர்புகொள்ள முடியவில்லையாம். #‘சோனமுத்தா... போச்சா?!’ மொமன்ட்!

கிசுகிசு

ஆளுங்கட்சி வாரிசு, சமீபத்தில் கோட்டை மாவட்டப் பகுதிகளில் விசிட் அடித்தார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், நகைச்சுவை என்கிற பெயரில் அபத்தமாகப் பேசியது பலரையும் முகம் சுளிக்கவைத்தது என்கிறார்கள். திருமண நிகழ்வு ஒன்றில், ‘பா.ஜ.க-அ.தி.மு.க-போல் வாழாதீர்கள்’ என வாரிசு பேச, மணமக்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். இத்தனைக்கும் வாரிசுக்கு எழுதிக்கொடுக்க ஒரு குழுவே இயங்குகிறதாம். #உன் கூடவே இருந்து நான் செய்யும் காரியங்கள் பயங்கரமானதாய் இருக்கும்!

கிசுகிசு

பணிவானவர், துணிவானவர், சின்ன தலைவி என மூன்று பக்கமும் தன்னுடைய நெட்வொர்க்கை கவனமாக மெயின்டெய்ன் பண்ணிவருகிறார் பிரதர் புள்ளி. ஜனாதிபதி தேர்தல் விஷயத்துக்காக டெல்லிக்குப் போன பிரதர் புள்ளி, பணிவானவரிடம் பக்குவமாக நடந்துகொண்டாராம். பணிவு - துணிவு முயற்சிகளைச் சின்ன தலைவியிடம் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்த்தாராம். இந்த இரு தரப்பு எண்ணங்களையும் துணிவானவரிடமும் துல்லியமாகக் கொண்டுபோய் சேர்த்தாராம். ‘பொழப்பு முக்கியம்தான்… அதுக்காக இப்படியா?’ எனப் புலம்புகிறார்கள் தலைமைக் கழகத்தில். #நோ கமென்ட்ஸ்!

கிசுகிசு

சாதிரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படாதபடி தடுக்கும் பொறுப்பை குட்கா மாஜியிடம் ஒப்படைத்திருந்தாராம் துணிவானவர். பணம், பதவி என ஆசைகாட்டி அத்தனை பேரையும் வளைத்துப்போட்டார் குட்கா மாஜி. ‘நீ ஒருத்தன் போதும்யா’ எனத் துணிவானவர் குட்கா மாஜியைக் கொண்டாடிவிட்டாராம். ஆனால், தொண்டர்கள் என்கிற பெயரில் சாதிரீதியான ஆட்கள் குட்கா மாஜியை போனிலேயே போட்டுப் பொளக்கிறார்களாம். இதனால், போன் வந்தாலே தனியாக ஒதுங்கிப்போய் வியர்த்துக்கொட்டித் திரும்புகிறாராம் குட்கா மாஜி. #ஒய் பிளட்... சேம் பிளட்!

கிசுகிசு

காவிக் கட்சியின் மாஜி காக்கி அதிகாரி, தான் போகிற இடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தைக் காட்டுவது முதன்மையானவரை ரொம்பவே யோசிக்கவைக்கிறதாம். ‘பணம் கொடுத்துக் கூட்டப்படுகிற கூட்டம் அது’ என உளவுத்துறை நோட் வைக்க, ‘அந்தக் கட்சிக்கெல்லாம் பணம் கொடுத்தாலும் இவ்வளவு கூட்டம் கூடக் கூடாதுய்யா’ என்றாராம் ஆவேசமாக. கொரோனா பரவல் தீவிரமாவதாகச் சொல்லி, சீக்கிரமே பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் உத்தரவுகள் வர வாய்ப்பிருக்கிறதாம். #எதுக்கோ பயந்து எதையோ கொளுத்துனாங்களாம்!

கிசுகிசு

பலவிதமான தடைகளையும் தாண்டி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை இந்த முறை செயல்படுத்திவிட்டார்கள். முதன்மையானவர் மனதைக் குளிர்விக்கும் வகையில், சைக்கிள் பேஸ்கட் லோகோவில் அவர் பெயரை பிரின்ட் செய்யக் கேட்டார்களாம். “சுற்றுச் சூழல், ஆரோக்கியம் சம்பந்தமான வாசகங்களைப் பிரசுரியுங்கள். என் பெயர் புராணம் வேண்டாம்” எனத் தவிர்த்துவிட்டாராம் முதன்மையானவர். கொரோனா நெருக்கடிகளுக்கு முன்பே மாணவர்களின் கைகளுக்கு சைக்கிள் போய்விட வேண்டும் எனச் சொல்லி, சீக்கிரமே தேதி குறிக்கச் சொல்லியிருக்கிறாராம். #மிதிவண்டி ஜருகண்டி!