Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

‘மகாராஷ்டிராவைப்போலத் தமிழ்நாட்டிலும் ஒரு ஷிண்டே கிளம்பி வருவார்’ என காக்கி மாஜி தடாலடியாகப் பேச, விதிர்விதிர்த்துவிட்டதாம் முதன்மையானவர் தரப்பு. ‘யார் அவர்?’ என்கிற கேள்வி கட்சிக்குள் பெரிதாகி, கடைசியில் நெருக்கமான சிலர் மூலமாக காக்கி மாஜியிடமே நீண்டதாம். “இப்படியெல்லாம் நடக்கும்னு உத்தேசமாத்தான் சொன்னேன். அதுக்கா இப்படி அலர்றாங்க…” எனச் சிரித்தாராம் காக்கி மாஜி. ஆனாலும், அதிருப்தி ஆட்களை அடையாளம் காணும்படி உளவுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம் ஆளும் தரப்பு. #பயப்படுறியா குமாரு!

கிசுகிசு

இலைக் கட்சியின் சார்பில் சமீபத்தில் ராஜ்ய சபா போன இருவரில் ஒருவர், பணிவானவரின் கடும் போராட்டத்தால் தேர்வானவர். அவரையே தங்கள் பக்கம் இழுத்து, பணிவானவரை அதிரவைக்கத் திட்டமிட்டதாம் துணிவானவர் தரப்பு. சமுதாயரீதியான சப்போர்ட்டும் கிடைத்த மாதிரி இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டதாம். துணிவானவர் தரப்பிலிருந்து தூது வந்தவர்களைச் சந்திக்காமலேயே திருப்பி அனுப்பி செம பதிலடி கொடுத்தாராம் அந்த எம்.பி. “இவங்க பக்கம் போனால், நான் மறுபடி ஊர்ப்பக்கம் போக முடியுமா?” என்றாராம் நெருங்கியவர்களிடம். #எது தேவையோ அதுவே தர்மம்!

கிசுகிசு

இலைக் கட்சியின் எழுத்தாளர், பணிவானவர் பக்கம் பாய்ந்ததைத் துணிவுத் தரப்பு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். பத்திரிகைப் பொறுப்பை அவர் உதறியபோதே உஷாராகியிருக்கவேண்டிய துணிவுத் தரப்பு, கொடநாடு விவகாரம் வரை அவர் வெளுத்து வாங்கிய பிறகு ரொம்பவே சோர்ந்துபோனதாம். “அவரை அமைதியாக்க இன்னொரு ரூட் இருக்கு…” என்று தென் மாவட்ட மாஜி ஒருவர் சொல்ல, “அவர்தான் பேசவேண்டியதையெல்லாம் பேசிட்டாரே… இனி ஏன் அமைதியாக்கணும்” எனக் கொந்தளித்தாராம் துணிவானவர். ‘தேர்தலில் போட்டியிட்டபோது, கட்சி கொடுத்த பணத்தைச் செலவு செய்யாமல் அமுக்கிவிட்டார்’ எனக் காரணம் கண்டுபிடித்து, மற்றவர்களைக் ‘கப்சிப்’பாக்கிவருகிறார்களாம். #முழுசா நனைஞ்ச பிறகு எதுக்கு முக்காடு?!

கிசுகிசு

சின்ன தலைவி ஒருபுறம், இனிஷியல் புள்ளி மறுபுறம் எனப் போட்டி போட்டு பயணங்கள் நடப்பதால், விசில் கட்சியில் குழப்பம் கும்மியடிக்கிறது. ‘சின்ன தலைவியின் பயணங்களுக்குப் போகாதீர்கள்’ என இனிஷியல் புள்ளி மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் போட்டு எச்சரிக்கிறாராம். அதேநேரம், சின்ன தலைவியின் உதவியாளர் உரிய ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி, நிர்வாகிகளுக்கு உத்தரவிடுகிறாராம். யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் திண்டாடித் தவிக்கிறார்கள் பலரும். #ஒற்றைத் தலைமை குரல் இங்கேயும் ஒலிக்குமோ?!

கிசுகிசு

மதுரை அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ஹோட்டல் ஆரம்பித்தார் பரோட்டா காமெடி நடிகர். “நோயாளிகளும் நல்ல உணவு சாப்பிடட்டுமே…” என உள்ளூர் அமைச்சர் வேண்டிக்கொண்டதால்தான் நடிகர் இதற்கு ஒப்புக்கொண்டாராம். ஆனால், ஆளுங்கட்சி ஆட்களைப் பிடித்து, லாபி செய்து ஹோட்டல் நடத்துவதாகச் சிலர் கிளப்பிவிடுகிறார்களாம். ‘நல்ல நோக்கத்துக்காகக் கைக்காசைச் செலவழித்துச் செய்கிற வேலைக்கு இப்படி உள்ளர்த்தம் கற்பிக்கிறார்களே…’ என ஆதங்கப்படுகிறார் காமெடி நடிகர். #நம்மூர்ல நல்லது செய்யறதுதான் ரொம்ப கஷ்டம் பாஸ்... மத்ததெல்லாம் ஈஸி!