Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

மறைந்த முதல்வருக்கு பி.எஸ்.ஓ-வாக இருந்து ஓய்வுபெற்ற ‘பாண்டிய’ எஸ்.ஐ., அறிவாலயம் எதிரே அலுவலகம் போட்டு வலை விரிக்கும் ‘புலிப்பெயர்’ புள்ளியின் மோசடிகளுக்குத் தொடர்ந்து துணைபோகிறாராம். குவாரி விவகாரத்தில் மட்டுமே பத்து கோடிகளுக்கும் மேலாகச் சுருட்டியிருக்கும் புலிப்பெயர் புள்ளிமீது அபிராமபுரம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், ‘பாண்டிய’ எஸ்.ஐ தனக்கு நெருக்கமான அதிகாரிகளுக்கு போன் போட்டு ‘ஆறப்போடும்’ வகையில் பேசுகிறாராம். அதனால் ‘ஆளும் தரப்புக்கு ஆல் இன் ஆல் நான்தான்…’ எனச் சொல்லி, சதுரங்க வேட்டை மோசடிகளைச் சகட்டுமேனிக்கு அரங்கேற்றுகிறாராம் புலிப்பெயர் புள்ளி. #திருடன் போலீஸ் விளையாட்டு!

கிசுகிசு

நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டதை உயரிய அங்கீகாரமாக நினைத்து, உரியவர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார் இசையானவர். “இதென்ன பிரமாதம்... ஜனாதிபதி பதவியை யாருக்குக் கொடுக்கலாம் என விவாதித்தபோது, உங்கள் பெயரையும் பரிசீலித்தோம்…” என உயரியவர்கள் சொல்ல, நெகிழ்ந்துபோனாராம் இசையானவர். நெருக்கமான நிழல்களிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்ட இசையானவர், ஒருகட்டத்தில் கண்கலங்கவும் செய்தாராம். பெயரளவுக்கான கௌரவமாக மட்டும் எண்ணாமல், அடிக்கடி டெல்லிக்குப் போய் தன் குரலை உரத்து ஒலிக்கிற திட்டத்திலும் இருக்கிறாராம் இசையானவர். #ஒரு ராகம்... திசை மாறி... இசை மாறுது..!

கிசுகிசு

ஆளும் தரப்பின் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர், காவிக் கட்சியின் காக்கி மாஜியிடம் போனில் பேசுகிற அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்களாம். ஆளும் தரப்பு குறித்த அதிருப்திகளை இவர்களே பாஸ் பண்ணுகிறார்களாம். கட்சி, குடும்பம் எனச் சகலவிதமான விமர்சனங்களையும் காக்கி மாஜி சகட்டுமேனிக்குப் பேச, ஆளும் தரப்பிலிருந்து கசியவிடப்படும் தகவல்களே காரணம் என நினைக்கிறதாம் இல்லத் தரப்பு. “முதலில் அதிகாரிகள்… இப்போது அமைச்சர்கள்… அடுத்து யாரை நோக்கிச் சந்தேகப்படப் போகிறார்களோ?” எனப் புலம்புகிறார்கள் கட்சிக்காரர்கள். #தீதும் நன்றும் பிறர் தர வாரா!

கிசுகிசு

பணிவானவருக்குப் பக்கபலமாக இருக்கும் டெல்டா மாவட்ட ட்ரீட்மென்ட் புள்ளியை வளைக்க முயன்றது துணிவானவர் தரப்பு. ஆனால் பருப்பு வேகாத நிலையில், ட்ரீட்மென்ட் புள்ளிக்கே செக் வைக்கும்விதமாக, அவர் கோலோச்சும் ஏரியாவில் விசில் கட்சி நிர்வாகியாக விளங்கும் மூன்றெழுத்து தாடிக்காரரை இலைக் கட்சிக்கு இழுக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். தேர்தல், திருமணம் எனப் பலவிதமான கடன் சுமைகளால் திணறும் அந்தத் தாடிக்காரரிடம் ‘சுளையாக 10 சி’ எனச் சொன்னதாம் துணிவானவர் தரப்பு. கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல், தாடிக்காரர் `நோ’ சொல்ல, ‘மா.செ பதவி உறுதி’ என அடுத்த தூண்டிலை வீசினார்களாம். பணத்துக்கு மயங்காதவர் பதவிக்கு மசிகிற நிலைக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். #பணம் பத்தும் செய்யும்... பதவி பத்தாயிரம் செய்யும்!

கிசுகிசு

மீசை அமைச்சரின் தம்பி கொலையான வழக்கைத் தீவிரமாக்க, தனி அதிகாரி நியமிக்கப்பட்டார் அல்லவா... அவருக்கு உதவியாக உள்ளூர் போலீஸையும் களத்தில் இறக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். போதிய வசதிகள் இல்லாமல், தனி அதிகாரி தலைமையிலான குழு திண்டாடுவதால் இந்த ஏற்பாடாம். அதனால், சீக்கிரமே வழக்கு இலக்கை நோக்கி வேகமெடுக்கும் என்கிறார்கள். இதற்கிடையில், வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியப் புள்ளியை நெருங்கிவிட்ட தகவல், முதன்மையானவர் கவனத்துக்குத் தனிப்பட்ட விதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறதாம். ‘யார் கருத்துக்கும் செவிசாய்க்க வேண்டாம்… உண்மைக் குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்’ என்று தனி அதிகாரிக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். #யார் அந்தக் குற்றவாளி?