Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவர் விரைவில் டெல்லிக்குப் பயணிக்கப் போகிறாராம். ஆரம்பத்தில் அட்வைஸ் கொடுத்த டெல்லித் தரப்பு திடீரென சைலன்ட்டானதால், என்ன செய்வதெனத் தெரியாமல் மண்டை குழம்புகிறாராம் பணிவானவர். காவிக் கட்சியின் உச்சப்புள்ளியைச் சந்திக்க அனுமதி கிடைக்காத நிலையிலும், டெல்லிக்கு நேரடியாகப் போய் நின்றுவிட நினைக்கிறாராம் பணிவானவர். தன் வாரிசு மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் தொடர் பின்னடைவைச் சந்திப்பதால், டெல்லி பயணத் திட்டத்தில் உறுதியாக இருக்கிறார் பணிவானவர். #ஹலோ... யார்னா இருக்கீங்களா... பயம்மாக்கீது!

கிசுகிசு

பல காலமாக மன வருத்தத்தில் பிரிந்திருந்த சின்ன தலைவியும், மன்னார்குடித் தம்பியும் திடீரென கைகோத்ததில் இனிஷியல் புள்ளிக்கு ஏக வருத்தமாம். சின்ன தலைவியின் தயவு இல்லாமல் விசில் கட்சியைத் தனித்து நடத்துகிற அளவுக்குக் கோபமாகிவிட்டாராம். “இவ்வளவு காலம் கட்சியை நடத்தவும், தேர்தலை எதிர்கொள்ளவும் வாங்கிய பணத்தை மொத்தமாக செட்டில் பண்ணிவிட்டுக் கட்சியை நடத்திக்கொள்ளச் சொல்லுங்கள்” என்றாராம் சின்ன தலைவி. பணம், பஞ்சாயத்து என உறவுகளுக்குள் உக்கிரமான போரே நடக்கிறதாம். #பணம் காசக் கண்டுப்புட்டா... புலிகூட புல்லத் தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி!

கிசுகிசு

உச்ச காக்கிப் புள்ளியை வாரத்தில் ஒரு நாள் சந்தித்து, அவரை அருகில் வைத்துக்கொண்டு மொத்த பஞ்சாயத்துகளையும் பைசல் செய்கிறாராம் ‘ஷ்’ புள்ளி. “சார் நம்ம பக்கத்துலதான் இருக்கார்...” எனச் சொல்லி, மாநகர காக்கி அதிகாரிகளுக்குப் பேசி ஆகவேண்டிய அத்தனை விஷயங்களையும் சாதித்துக்கொள்கிறாராம். மொத்த மாநகரச் சட்டம் - ஒழுங்கையும் ஒற்றை விரலில் இயக்கத் தொடங்கியிருக்கிறாராம் ‘ஷ்’ புள்ளி. #விரலுக்கு ஏத்த வீக்கமா இல்லியே..!

கிசுகிசு

டெல்லியில் காவிக் கட்சி ஆட்களைத் தனித்தனியே சந்தித்து, வேண்டிய காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்களாம் இங்கிருந்து போன எம்.பி-க்கள். உறவுக்கார எம்.பி-யின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆட்களை நியமித்திருக்கும் முதன்மையானவர், காவிக் கட்சி ஆட்களைச் சந்திக்கும் எம்.பி-க்களைப் பற்றிச் சமீபத்தில்தான் அறிந்தாராம். மில்க் எம்.பி-யிடம் பல மணி நேரம் பேசி, அனைத்துத் தொடர்புகள் குறித்தும் விசாரித்தாராம். இதற்காகவே காத்திருந்த மில்க் எம்.பி., மொத்த விவரங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டாராம். #இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?!

கிசுகிசு

இலைக் கட்சியில் பொருளாளர் பதவியை எதிர்பார்த்து சாமியாடிய சீனியர் நிர்வாகிக்கு, பக்காவான செட்டில்மென்ட் முடிக்கப்பட்டதாம். மைக் நிர்வாகியைச் சமாதானப்படுத்தத்தான் பெரும்பாடானதாம். பசை விஷயத்துக்கும் மைக் நிர்வாகி மசியவில்லையாம். உருக்கமான பேச்சுதான் ஒருவழியாக வொர்க்அவுட்டானதாம். ‘ஆளுக்கு ஓர் அஸ்திரம்’ என அதகளம் செய்கிறார் துணிவானவர். #அணையா மைக்கையே பேசி ஆஃப் பண்ணிட்டாங்களே!