Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

அண்ணன் தலைவர், அடுத்த மாதம் தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். இரண்டு மாதங்களுக்குப் பயணத்திலேயே இருக்கும்படி ஏற்பாடு நடக்கிறதாம். ‘நாடாளுமன்றத் தேர்தலில் கோடி வாக்கு’ என்பதுதான் பயணத்துக்கான இலக்காம். இலைக் கட்சியில் அடுத்தடுத்து நடக்கும் யுத்தத்தால், அடுத்த எதிர்க்கட்சி நாம்தான் எனத் தம்பிகளை உசுப்பேற்றி, செல்லும் இடமெல்லாம் கூட்டத்தைப் பெரிதாகத் திரட்டச் சொல்லியிருக்கிறாராம் அண்ணன் தலைவர். பயணத் திட்டத்துக்கான வாகனம், எரிபொருள், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டுமே பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிற, அனைத்தையும் தம்பிகள் தலையிலேயே கட்டச் சொல்லிவிட்டார்களாம். #கிச்சான்னாலே...

கிசுகிசு

சின்ன தலைவிக்கு முழு பக்கபலமாக மாறிவிட்ட மன்னார்குடி சகோதரர், மாஜிக்கள் பலருக்கும் போன் பண்ணிப் பேசுகிறாராம். கடலோர பெல் புள்ளி, ட்ரீட்மென்ட் பிரமுகர், கோட்டை நகரின் இனிப்புப் புள்ளி எனப் பல மாஜிக்களைச் சின்ன தலைவியிடமே போனில் பேசவைத்தாராம். இதுகாலம் வரை இந்த மாதிரியான முன்னெடுப்புகளைத் தன்னருகில் இருந்தவர்கள் செய்யவில்லை என மன்னார்குடி சகோதரரிடம் மனம் கலங்கினாராம் சின்ன தலைவி. “கட்சியை உங்க கையில் ஒப்படைக்காமல் உறங்க மாட்டேன்” எனச் சத்தியம் செய்து கொடுத்து, சின்ன தலைவியைத் தைரியமாக்கிவருகிறாராம் மன்னார்குடி சகோதரர். #ஆடியோல்லாம் எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க?

கிசுகிசு

இலைக் கட்சியின் நிதியைக் கையாளும் உரிமையைப் புதிய பொருளாளருக்கு வங்கிகள் வழங்க, திகைத்துப்போனாராம் பணிவானவர். தான் கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், எப்படி வங்கிகள் இந்த அனுமதியை வழங்க முடியும் எனச் சட்ட வல்லுநர்களிடம் விவாதித்தவர், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டார். இதற்கிடையில், தடை வருவதற்குள் தகுந்த செலவுகளுக்கான தொகையை வெளியே எடுக்க புதிய பொருளாளருக்கு யோசனை சொல்லப்பட்டதாம். ஏற்கெனவே இந்தப் பொறுப்பை வகித்த அனுபவத்தில், ‘அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன்’ என்கிறாராம் இனிப்பான பொருளாளர். #எட்டணா இருந்தா... எட்டு ஊரு எம்பாட்ட கேக்கும்!

கிசுகிசு

பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து அதை வீடியோவாக்கி ஆன்லைன் அலப்பறைகளை அவ்வப்போது நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறார் ஆளுங்கட்சியின் ‘தில்’லான எம்.பி. சமீபத்தில் ஏரி புனரமைப்புப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டதைக் கண்டித்து எம்.பி சகட்டுமேனிக்கு எகிற, தேர்தல் நேரத்தில் அவர் காவடி தூக்காத குறையாக ஆன்மிக வேஷம் போட்ட நிகழ்வுகளைப் பதிலடிப் பதிவுகளாகப் போட்டுத் தாளிக்கத் தொடங்கினார்கள் ஆன்லைன் ஆட்கள். ‘இந்து விரோதப் போக்கு’ எனக் காவிக் கட்சி இதற்கும் சாயம் பூசி சண்டை போட, ‘இந்த மனுஷனைக் கொஞ்சம் அமைதியா இருக்கச் சொல்லுங்கப்பா’ என எக்கினாராம் முதன்மையானவர். #‘ஏன்யா கத்துற?’ மொமன்ட்!

கிசுகிசு

பள்ளி வன்முறை விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்துத் தெளிவாக விசாரிக்காமல், ‘மாவட்ட’ அதிகாரிகளை அரசு பந்தாடியது சம்பந்தப்பட்டவர்களை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம். முழுக்க முழுக்க அரசியல் தலையீடுகளாலும், திட்டமிட்ட தூண்டுதலாலும், உளவுத்துறையின் தோல்வியாலும் நடந்த வன்முறைக்கு, ‘மாவட்ட’ அதிகாரிகளின் மெத்தனமே காரணம் எனச் சித்திரிப்பதுபோல் டிரான்ஸ்ஃபர் விவகாரம் அமைந்துவிட்டதாம். ‘மாவட்ட’ அதிகாரிகளின் கூட்டமைப்புக்குள் இந்த விவகாரம் பூதாகரமாக விவாதிக்கப்பட்டுவருகிறதாம். ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பு ஆளும் புள்ளிகளோடு நிழல் யுத்தம் நடத்திவரும் நிலையில், இது பெரிதாகாமல் கவனிக்கும்படி சீனியர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். #எள்ளு திருடுனவன விட்டுப்புட்டு... எதுத்தால வந்தவன அடிச்சாங்களாம்!