Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

நாட்டைவிட்டு ஓடிப் பதுங்கியிருக்கும் அண்டை நாட்டுத் தலைவர், இந்தியாவில் தங்க அனுமதி கேட்டார். ஆனால், அதற்கான அனுமதியைக் கொடுக்க டெல்லி அறவே மறுத்துவிட்டது. இந்த நிலையில், போர் நடந்த நேரத்தில் கதர்க் கட்சி கொடுத்த அழுத்தத்தை அண்டை நாட்டுத் தலைவர் வெளிப்படையாகச் சொல்லத் தயாராகிவருகிறாராம். அப்படியாவது டெல்லியின் கருணையைப் பெற்றுவிட முடியாதா என நினைக்கும் அண்டை நாட்டுத் தலைவர், இந்தத் தகவலை டெல்லி கவனத்துக்குக் கசியவிட்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை மாற்ற, காவிக் கட்சி அண்டை நாட்டுத் தலைவரைப் பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கவனிப்பவர்கள். #நல்லா சொல்றாய்ங்கையா டீட்டெய்லு!

கிசுகிசு

கார்டனுக்கு உற்ற துணையாக இருந்த மலர்ப் பிரமுகரை, இலைக் கட்சியின் இரு அணிகளும் இப்போது தீவிரமாகத் தேடத் தொடங்கியிருக்கின்றனவாம். கட்சியின் பல மாவட்ட அலுவலகங்கள் மலர்ப் பிரமுகர் பெயரில்தான் இருக்கின்றனவாம். அதனால், அவரை வளைக்கத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். செல்போன் எண்களை மாற்றிக்கொண்டே இருக்கும் மலர்ப் பிரமுகர், இப்போது ஆல்வேஸ் அவுட் ஆஃப் கவரேஜ்தானாம். பலமுறை கட்சி நலனுக்காகப் பணிவானவரையும் துணிவானவரையும் சந்திக்க நேரம் கேட்டுக் காத்திருந்தாராம் மலர்ப் பிரமுகர். ஆனால், அப்போதெல்லாம் நேரம் கொடுக்காமல் இழுத்தடித்தவர்கள், இப்போது தீவிரமாகத் தேட, நேரம் பார்த்து பதிலடி கொடுக்கும்விதமாக எஸ்கேப் ஆகியிருக்கிறார் மலர்ப் பிரமுகர். #குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!

கிசுகிசு

‘மறைந்த தலைவரின் நினைவாக, கடலுக்குள் சின்னம் அமைப்பது தேவையா?’ என முதன்மையானவரிடம் பலரும் கருத்து சொன்னார்களாம். ஆனாலும், நினைவுச்சின்னம் அமைப்பதில் முதன்மையானவர் உறுதியாக இருக்கிறாராம். அது குறித்த அறிவிப்பையும் அவசரகதியில் வெளியிடச் சொன்னாராம். அரசு சார்பில் 81 கோடியில் திட்டமிடப்படும் இந்தப் பணிக்கான ஒப்புதலை டெல்லி கொடுக்குமா என்கிற சந்தேகம் இப்போது உருவாகியிருக்கிறது. மத்திய சுற்றுச்சூழல்துறை இதற்கு முட்டுக்கட்டை போட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் கசிவதால், டெல்லியைச் சரிசெய்யும் பொறுப்பை மில்க் புள்ளிக்குக் கொடுத்திருக்கிறாராம் முதன்மையானவர். #சின்னம்னாலே பிரச்னைதானே?!

கிசுகிசு

சமீபத்திய படம் மகத்தான வசூலை வாரிக்குவித்தாலும், நடுநிலைத் தலைவரின் கடன் கொஞ்சமும் குறைந்தபாடில்லையாம். மதுரைக்கார ஃபைனான்ஸியரிடம் வாங்கிய பெருந்தொகையை மட்டும் சமீபத்தில் செலுத்தியவர், மற்ற கடன்களை அடைக்க இன்னமும் இழுபறிதான் நீடிக்கிறதாம். இது புரியாமல், ‘கட்சியை வளர்க்கப் பணம் ஒதுக்குங்க தலைவா’ எனக் கோரிக்கைக் குரல்கள் கிளம்புகின்றனவாம். கட்சியின் சார்பில் மாதாந்தரச் சம்பளம் வாங்கும் நிர்வாகிகள், சம்பளத்தை உயர்த்தச் சொல்லிக் குரல் கொடுக்கிறார்களாம். எதற்கும் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் நடுநிலைத் தலைவர். #பத்தல... பத்தல..!

கிசுகிசு

பணிவானவரின் மகனுக்கு ஆதரவாகச் சின்ன தலைவி வெளியிட்ட அறிக்கை, இலைக் கட்சிக்குள் கலவரத்தைக் கிளப்பியிருக்கிறது. “அந்தம்மா சொல்றது நியாயம்தானே…” எனத் துணிவானவர் பக்கம் இருக்கும் சிலரே சொல்லத் தொடங்கியிருக்கிறார்களாம். இந்த ஆதரவை வெளிப்படையாகப் பேசவைக்கவும் முயற்சிகள் நடக்கின்றனவாம். சமுதாய ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகத் துணிவானவர் பக்கமிருக்கும் சிலரை வெளியே கிளம்பி வரச்சொல்லும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதை ஆஃப் செய்ய, வழக்கம்போல் கோட்டை மாவட்டத்துக்கு குட்கா மாஜியையும், டெல்டாவின் பெருந்தலைவர் பெயர்கொண்ட மாஜியையும் களமிறக்கியிருக்கிறதாம் துணிவுத் தரப்பு. #இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!