Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியில் நடக்கும் குளறுபடிகள் குறித்து, ரொம்பவே ஆர்வமாக விசாரிக்கிறாராம் மெர்சலான நடிகர். கட்சி யாருடைய கைவசமாகும், டெல்லி ஆதரவு யாருக்கு, சின்னம் முடக்கப்படுமா, மூன்று அணிகளும் ஒன்றாகுமா என இலைக் கட்சி குறித்த அத்தனை விவரங்களையும் விசாரிக்க, ‘இலைக் கட்சிக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?’ என்கிற கேள்வி கிளம்பியிருக்கிறது. வலுவான எதிர்க்கட்சியாக இலைக் கட்சி இல்லாவிட்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே அரசியல் வெள்ளோட்டம் பார்க்க நினைத்துத்தான் இவ்வளவு விவரங்களையும் விசாரிக்கிறாராம். சமீபகாலமாகக் கதர்க் கட்சியின் டெல்லி ஆட்களோடும் இது குறித்துப் பேசத் தொடங்கியிருக்கிறாராம் அவர். #இந்தச் சுவரு இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்கப்போகுதோ!

கிசுகிசு

பைக் நடிகரின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்திருக்கிறது. முதல்வரின் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அருகே ஷூட்டிங் நடந்ததால், உள்ளே புகுந்த போலீஸ் கேமராவைத் தூக்கிக்கொண்டு போய்விட்டதாம். ஆளுங்கட்சியின் அரசியல் வாரிசு நடித்த நீதிக் கருத்துள்ள படத்தை எடுத்தவர்தான் தற்போதைய பைக் நடிகரின் படத்துக்கும் தயாரிப்பாளர். அதனால், வாரிசைத் தொடர்பு கொண்டு கேமராவை ஒப்படைக்கச் சொல்லிக் கேட்டார்களாம். “இதோ பேசுறேன்…” எனச் சொன்னவரை அதன் பிறகு தொடர்புகொள்ளவே முடியவில்லையாம். விஷயம் பெரிதானால், ‘பைக் நடிகரின் ஷூட்டிங்கை நிறுத்திய போலீஸ்’ எனப் பரபரப்பாகிவிடும் என்பதற்காக, பாதியிலேயே ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு கிளம்பியதாம் யூனிட். போலீஸ் தரப்பில் போராடி அடுத்த நாள்தான் கேமராவை மீட்டார்களாம். #அமர்க்களமாவும் அட்டகாசமாகவும் நடந்த ஷூட்டிங்கை அநியாயமா நிறுத்திட்டீங்களே பாஸ்!

கிசுகிசு

சதுரங்க நிகழ்வுக்காக சென்னைக்கு வந்த உச்சப்புள்ளி, காவிக் கட்சிப் பிரமுகர்களை அன்றிரவு சந்தித்தார். சந்திக்க வாய்ப்பு கேட்டுப் பல பேர் போராடிய நிலையில், 17 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது. இலைக் கட்சியில் நடக்கும் சதுரங்க ஆட்டம் குறித்து விசாரித்த உச்சப்புள்ளி, காவிக் கட்சியின் நலனுக்கு யார் உகந்தவராக இருப்பார் என வெளிப்படையாகவே கேட்டாராம். ‘இவர்கள் இரண்டு பேரையும்விட அந்தம்மா எவ்வளவோ தேவலாம்… அவங்க மீதான எதிர்ப்பும் இப்போ குறைஞ்சுடுச்சு…’ என்றார்களாம் காவிக் கட்சி ஆட்கள். இதைச் சற்றும் எதிர்பார்த்திராத உச்சப்புள்ளி, காவிக் கட்சியின் மாஜி காக்கியை அழைத்து இது குறித்து தனியாகவும் விசாரித்தாராம். அவரும் அம்மையாருக்கு ஆதரவான கருத்தையே வெளிப்படுத்தியதுதான் ஆச்சர்யம். #‘நெசமாத்தான் சொல்றீங்களா?’ மொமன்ட்!

கிசுகிசு

முதன்மையானவர் முக்கியமான விழாக்களில் பங்கேற்கும்போதெல்லாம் மனரீதியான சங்கடங்களுக்கு ஆளாகிறாராம். ஹேர் ஸ்டைல் தொடங்கி உடை விஷயங்கள் வரை, ‘ஆளையே மாற்றுகிறோம்’ என்கிற பெயரில் முதன்மையானவரைப் படுத்தி எடுக்கிறார்களாம். விழாக்களில் அதைக் காட்டிக்கொள்ளாமல் கம்பீரமாகச் சிரித்துச் சமாளித்தாலும், வீட்டுக்கு வந்து, ‘என் இயல்பையே மாத்திட்டீங்களே… அப்பா இறுதி வரைக்கும் அவர் இயல்பில்தானே வலம்வந்தார்’ என வருத்தப்படுகிறாராம் முதன்மையானவர். #அவரை அவராகவே இருக்கவிடுங்க ஸ்ட்ராட்டஜிஸ்ட் அப்ரசண்டிகளா!

கிசுகிசு

காவிக் கட்சியில் கலந்து, பல காலமாக கௌரவத்துக்குக் காத்திருக்கிறார் ‘தில்’லான காமெடி நடிகர். நல்ல பதவியையோ அங்கீகாரத்தையோ இன்றளவும் அவருக்கு வழங்காத காவிக் கட்சி, முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அவரை அழைப்பது கிடையாதாம். செய்தி இதுதான்… காவிக் கட்சியை வலுப்படுத்த சினிமா ஆட்களைக் கட்சிக்குள் கொண்டுவர, சமீபத்தில் ஆலோசனை நடத்தினாராம் காவிக் கட்சியின் மாஜி காக்கி தலைவர். “தில்லான காமெடி நடிகரை எப்படியாவது நம்ம கட்சிக்கு இழுத்துட்டு வந்துடுங்க… அவர் கிராமங்களை நோக்கிப் போனால், செம ரெஸ்பான்ஸ் இருக்கும்” என்றாராம். “அவர் வருசக்கணக்கா நம்ம கட்சியிலதான் சார் இருக்கார்…” என விழுதுகள் சொல்ல, விக்கித்துப்போனாராம். சீக்கிரமே ‘தில்’லான காமெடி நடிகரைச் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள் எனக் களமிறக்கிவிடப்போகிறார்களாம். #வாழைப்பழ காமெடியால்ல இருக்கு!