Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

உட்கட்சித் தேர்தல் முடிவின்போது, மாவட்டச் செயலாளர்கள் சிலரை மாற்றலாம் என முடிவெடுத்திருந்தாராம் முதன்மையானவர். ஆனால் ‘நாடாளுமன்றத் தேர்தல் வரை மாவட்டச் செயலாளர்கள் விஷயத்தில் அமைதி காப்பதே சிறந்தது’ என சீனியர்கள் சொல்ல, முதன்மையானவர் அதை ஆமோதித்தாராம். ஆனாலும் டெல்டாவின் கடலோர மாவட்டம், தலைநகரின் சில பகுதிகள், தென் மண்டல சுறுசுறுப்பு ஏரியா எனச் சில மாவட்ட நிர்வாகிகளை மாற்றியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அவர்களின்மீது அதிரடி காட்டினால்தான் மற்ற மாவட்டங்களின் நிர்வாகம் சரியாக இருக்கும் என நினைக்கிறாராம் முதன்மையானவர். #அண்ணனுக்கு அடி விழுந்தா, தம்பி தானா வேலை செய்வான்!

கிசுகிசு

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சேனல்காரரையும், ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும் நறுமணப் புள்ளியையும் காவிக் கட்சியில் கலக்கும்படி வலியுறுத்துகிறதாம் டெல்லி. இருவரையும் கட்சிக்குள் கொண்டுவருவதன் மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என உறுதியாக நம்புகிறார்களாம். நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இணைப்புக்குத் தயார் என சேனல்காரர் சொல்ல, நறுமணப் புள்ளி மட்டும் அமைதி காக்கிறாராம். கட்சியில் பெரிய பதவி தருவதாக உத்தரவாதம் கொடுத்து அசைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. #தேர் புறப்பட்டுருச்சு... சைக்கிள்தான் சைலன்ட்டா இருக்கு!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவர், கார்டன் இல்லத்தில் பல காலம் பணியாற்றிய பூவான பிரமுகரைத் தன் பக்கம் இழுக்க, பல பேரை அனுப்பிப் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்கிறாராம். ஆனாலும், பூவான பிரமுகர் அசைந்து கொடுக்கவில்லையாம். சமூகரீதியான ஆதரவாகக்கூட அவர் இறங்கி வராதது பணிவானவரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்திவிட்டதாம். “இந்த நேரத்தில் நீங்கள் என் உடனிருக்க வேண்டும்” என உருக்கமான குறுந்தகவலை பூவான பிரமுகருக்கு அனுப்பிவிட்டு, பதிலுக்காகக் காத்திருக்கிறார் பணிவானவர். #வா வா அன்பே பூஜை உண்டு... பூஜைகேற்ற பூக்கள் ரெண்டு!

கிசுகிசு

‘ஆனந்த இயக்குநர் தன் கதையைக் காப்பியடித்துப் படம் செய்துவிட்டார்’ எனக் கொந்தளித்தார் அண்ணன் தலைவர். ஆனால், ஆனந்த இயக்குநரின் படம் உரிய கவனம் பெறாமல் போக, அந்தக் கதையைத் தான் மீண்டும் நல்லபடி எடுத்துக்காட்டுவதாகச் சொல்லி, வம்பு நடிகரை அணுகிக் கதை சொன்னாராம் அண்ணன் தலைவர். அண்ணனைத் தவிர்க்க முடியாத வம்பு நடிகர், “கதை அட்டகாசம். ஆனால், எனக்கு 20 கோடி சம்பளம் வேண்டும்” என்றாராம். “அவ்வளவு பணம் இருந்தால் இந்நேரம் நான் சொந்த வீடு வாங்கியிருப்பேனே...” என்றபடி நொந்து திரும்பினாராம் அண்ணன் தலைவர். #இந்த வீடு நமக்குச் சொந்தமில்லை... பாடுடா சின்னத் தம்பி!

கிசுகிசு

ஆளுங்கட்சியின் வாரிசுக்குப் பட்டாபிஷேகம் தள்ளிக்கொண்டே போவதில் இல்லத் தரப்புக்கு நிறைய வருத்தமாம். ‘ஜாதகரீதியாக இந்தக் காத்திருப்பு தேவை’ என ஒன்றுக்குப் பலராக ஆலோசனை சொன்னதால், நிவர்த்திக்கு அல்லாடுகிறது இல்லத் தரப்பு. இதற்கிடையில் பட்டாபிஷேகம் நடந்துவிட்டால், அதன் பிறகு ஜாலியாக வலம்வர முடியாது எனக் கிடைத்திருக்கும் அவகாசத்தில் நட்பு, சினிமா என ஆனந்தமாக இருக்கிறாராம் வாரிசு. லேட்டஸ்ட் நண்பர்களாக ஒட்டி உறவாடும் சிலர்தான், வாரிசை வழி மாற்றி அரசியல் ஆர்வத்தைத் தவிர்க்கவைக்கிறார்கள் என்கிறது இல்லம். #தென்னையப் பெத்தா இளநீரு...