Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

கோட்டை மாவட்டத்தில், ஆளும் தரப்பின் உட்கட்சித் தேர்தலில் தனக்கு நெருக்கமான ஆட்களைப் பதவிக்குக் கொண்டுவர, வாரிசுப்புள்ளியின் பெயரைச் சொல்லியே விளையாடினாராம் ரூல்ஸ் அமைச்சர். பல ஒன்றியங்களில் பிரச்னை முற்ற, “இந்த ஆளைப் போடச் சொன்னது வாரிசுதான். நீங்க அவர்கிட்டதான் போய்க் கேட்கணும்” எனச் சொல்லியே அத்தனை பேர் வாயையும் அடைத்துவிட்டாராம். வாரிசுக்கு எதிராக எப்படிப் போய் நியாயம் கேட்க முடியும் என்றெண்ணி, அமைதி காக்கிறார்கள் கோட்டை மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள். #‘நீதான் தைரியமான ஆளாச்சே... போய்க் கேளு’ மொமன்ட்!

கிசுகிசு

அண்ணன் தலைவர் பல லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கார் வாங்கிய விவகாரம், கட்சி வட்டாரத்துக்குள்ளேயே பெரிய அதிருப்தி அலைகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், அடுத்தடுத்து பல கோயில்களுக்கு அந்த காரை அனுப்பி, அண்ணன் தலைவர் பூஜை போடச் சொன்ன விவகாரமும் புகைப்பட ஆதாரங்களுடன் ஆன்லைனில் பரபரப்பாகி வருகின்றன. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு அண்ணன் தலைவரின் கார் லேசான விபத்துக்கு உள்ளாகிவிட்டதாம். “இத்தனை பேர் கண்ணுவெச்சா, விபத்து நடக்கத்தானே செய்யும்… ஏதாவது திருஷ்டி பரிகாரம் பண்ணிடுங்க…” என அண்ணன் தலைவருக்கு இப்போது அட்வைஸ் பண்ணி வருகிறார்களாம் நெருக்கப்புள்ளிகள். #ஆமைக்கறி தின்னா ஏதும் தோஷம் உண்டா?

கிசுகிசு

கொஞ்ச காலமாக, தேவையான விஷயத்துக்கு மட்டும் அறிக்கை வெளியிட்டு அமைதி காக்கும் தோட்டத்துத் தலைவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியை மாற்றிக்கொள்ள விரும்புகிறாராம். அதற்கான பேச்சு வார்த்தைகளை இப்போதே தொடங்கியும்விட்டாராம். ‘‘மரியாதையும் ‘மகத்துவமும்’ கிடைத்தால், கூட்டணிக்கு நாங்கள் ரெடி’’ என ஆளும் தரப்பின் ஆட்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். இலைக் கட்சியின் வலுவை உடைக்க, ஆளும் தரப்பும் இதற்குத் தலையாட்டும் முடிவில் இருக்கிறதாம். #கூட்டணின்னா சைலன்ட்... இல்லைன்னா வயலன்ட்!

கிசுகிசு

பரோட்டா காமெடி நடிகர், எந்த நேரத்தில் கல்வியின் அவசியம் குறித்து வாய் திறந்தாரோ… அவருக்கு எதிரான சர்ச்சைகளை வரிசையாகக் கட்டவிழ்த்துவருகிறது காவிக் கட்சி. சமீபத்தில் பரோட்டா காமெடி நடிகர் தன் வீட்டில் கொடியேற்றி அந்தப் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பதிவேற்ற, ‘‘வீடு துடைக்கும் மாப்பு கம்பில் கொடியேற்றிவிட்டார்’’ எனக் கொந்தளித்துக் குமுறினார்கள். இன்னும் சில காவி ஆட்கள், காமெடி நடிகருக்குச் சொந்தமான ஹோட்டல்களுக்குப் போய் பிரச்னை செய்கிறார்களாம். “இத்தனை வருஷ வாழ்க்கையில் இவ்வளவு நெருக்கடிகளை நான் பார்த்ததே இல்லை” என பரோட்டா காமெடி நடிகர் புலம்பும் அளவுக்குக் காவிக் கட்சியின் ஆன்லைன் ஆட்கள் அலப்பறை கொடுக்கிறார்களாம். #பிச்சுப் போட்டு... கொத்தி எடுத்து... குருமா ஊத்தி... வதக்குறாய்ங்கண்ணே!

கிசுகிசு

கடந்த 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்குவதற்காகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதற்குத் தேவையான தங்கத்தையும் அப்போதே வாங்கி வைத்துவிட்டதாம் அப்போது ஆட்சியிலிருந்த இலைத்தரப்பு. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும் இலைக் கட்சிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதால், அந்த அறிவிப்பை வெளியிடாமல், பல லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட தங்கத்தை அப்படியே லாக்கரில் வைத்துப் பூட்டிவிட்டார்களாம் அதிகாரிகள். ‘விருதுக்கு உரியவர்களை மறுபடி தேர்ந்தெடுத் துக்கூட அந்தத் தங்கத்தை வழங்கலாமே…’ என உரிய துறையின் நியாயமான அதிகாரிகள் சொல்ல, ‘அதில் சட்டச் சிக்கல்’ என வாயை அடைத்துவிடுகிறார்களாம் அதிகாரிகள். உரிய துறையின் அமைச்சர் கவனத்துக்குப் பலமுறை இந்த விஷயம் சொல்லப்பட்டும், லாக்கரில் இருக்கும் தங்கத்துக்கு விடிவு கிடைக்கவில்லையாம். #இந்த விவகாரத்தைவெச்சே ஒரு சினிமா பண்ணலாமே!