Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியுடன் அனுதினமும் பேச்சுவார்த்தை நடத்தி, தனக்கான சாதகங்களைத் தேடிக்கொள்வதில் கவனமாக இருக்கிறாராம் இனிஷியல் தலைவர். இலைக் கட்சியின் பிளவுகள் பெரிதாகிவரும் நிலையில், “ஒன்றுபட்டாலும், கூட்டணி ஒதுக்கீடாக அமைந்தாலும் எனக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என டெல்லி புள்ளிகளிடம் வேண்டுகோள் வைக்கிறாராம். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று சீட்களும், மலைக்கவைக்கும் ஸ்வீட் பாக்ஸும்தான் இனிஷியல் புள்ளியின் டிமாண்டாம். சின்ன தலைவியின் கவனத்துக்கு இத்தகைய விஷயங்களைக் கொண்டு செல்லாமல் இனிஷியல் தலைவர் ரகசியமாகவே பேச்சுவார்த்தை நடத்துவதுதான் காவிக் கட்சி ஆட்களை யோசிக்கவைக்கிறதாம். #வேகுறது வெந்தா... விசில் வந்துதானே ஆகணும்!

கிசுகிசு

கதர்க் கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர், அதிருப்தி மனநிலையிலிருக்கும் தமிழக ‘ரகசிய’ப் புள்ளியிடமும் விலகச் சொல்லிப் பேச்சுவார்த்தை நடத்தினாராம். கட்சியில் எவ்வித மரியாதையும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், “என்னால் கட்சிக்குச் சிறு சறுக்கல்கூட வந்துவிடக் கூடாது” என பதில் சொன்னாராம் அந்த ‘ரகசிய’ப் புள்ளி. விஷயம் கதர்க் கட்சியின் வாரிசு கவனத்துக்குப் போக, உடனே அந்த ‘ரகசிய’ப் புள்ளியிடம் போனில் பேசினாராம். பல ஆதங்கங்களைப் பகிர்ந்துகொண்ட ‘ரகசிய’மும் ‘என்னைப்போல் இன்னும் எத்தனையோ அதிருப்தி ஆட்கள் புறப்படும் மனநிலையில் இருக்கிறார்கள்’ எனச் சொல்லி பெரிய லிஸ்ட்டையும் நீட்டினாராம். #‘இதென்ன பிரமாதம்... இதைவிட பெசல் ஐட்டம் ஒண்ணு இருக்கு’ மொமன்ட்!

கிசுகிசு

ஆன்லைன் ரம்மி விஷயத்தில், முதன்மையானவர் கடும் தீவிரம் காட்ட முக்கியக் காரணமே கோட்டையின் உச்ச அதிகாரிதானாம். ஆன்லைன் ரம்மியால் அல்லாடும் பல குடும்பங்களின் நிலை குறித்துத் தன் கவனத்துக்கு வந்த துயரங்களை முதன்மையானவரிடம் நேரடியாகவே பகிர்ந்துகொண்டாராம் உச்ச அதிகாரி. “லாட்டரிச்சீட்டைவிட மிக மோசமாக மக்களைப் பாதிக்கிற மோசடி ஆன்லைன் ரம்மி” எனவும் விளக்கினாராம். ஆன்லைன் ரம்மி விஷயத்தில் அரசின் கவனத்தை மீறி, ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ எனச் சொல்லிப் பெரிய அளவில் பசை பார்த்திருக்கிறது ஒரு கும்பல். உச்ச அதிகாரியின் ஆலோசனையில் முதன்மையானவர் அவசரச் சட்டம் இயற்றும் அளவுக்குத் தீவிரமாக, பசை பார்த்தவர்கள் பதறிக்கிடக்கிறார்களாம். #ஆடிய ஆட்டம் என்ன..!

கிசுகிசு

ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில், குட்கா மாஜியை விசாரிக்கச் சொல்லிக் குறிப்பிடப்பட்டிருப்பதை இலைக் கட்சியில் பரபரப்பாகப் பார்க்கிறார்கள். காரணம், ‘எந்த நேரத்திலும் நடந்தவை யாவையும் நான் மனம் திறந்து கொட்டிவிடுவேன்’ என இலைக் கட்சி ஆட்களிடம் குட்கா மாஜி சொல்லிக்கொண்டேயிருப்பாராம். கட்சிக்குள் கூச்சலும் குழப்பமும் கும்மியடிக்கும் இப்போதைய சூழலில், குட்கா மாஜி எந்த ரகசியத்தை வெளிப்படுத்தப்போகிறார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. வெளிநாட்டுச் சிகிச்சைக்குச் செல்லவிடாமல் தடுத்தவர்கள் குறித்த தகவலைத்தான் `ரகசியம்’ எனச் சொல்லிவருகிறாராம் குட்கா மாஜி. இலைக் கட்சியின் துணிவானவருக்குத் தூணாக நிற்கும் இவர், எத்தகைய விளையாட்டையும் நடத்துவார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். #ஒரு கதை சொல்லட்டா சார்?!

கிசுகிசு

சமீபத்தில் கோட்டை மாவட்ட நிர்வாகிகளிடம் ஜூம் மீட்டில் உரையாடினாராம் அண்ணன் தலைவர். “கட்சி, கடனில் தத்தளிக்குது. பணம் இல்லாமல் எம்.பி தேர்தலை எதிர்கொள்ள முடியாது. கட்சி நிதியைப் பெரிதாகத் திரட்டினால்தான் நாம் நிலைத்து நிற்க முடியும்” என வெளிப்படையாகப் பேசியவர், ஒருகட்டத்தில் சொந்தவீடு இல்லாமல் வாடகை வீடு மாறி தான் படுகிற வேதனைகளையும் புலம்பினாராம். “பெரிய அளவில் நிதி திரட்டுங்கள். மாவட்ட நிகழ்வுக்கு நானே வருகிறேன்” என அவர் சொல்ல, தாறுமாறான வசூலில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள் கோட்டை மாவட்டத் தம்பிகள். #தம்பியுடையான் வசூலுக்கு அஞ்சான்!