அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

‘ஷ்’ புள்ளிதான் அரசு டெண்டர்களை ஆட்டிப்படைக்கும் வல்லவராகிவருகிறாராம். கடந்த ஆட்சியிலும் கோலோச்சிய இந்த நான்கெழுத்து லாபி புள்ளி, இந்த ஆட்சியிலும் வாரிசின் வலதுகரமாக மாறி, அரசின் அத்தனை விஷயங்களிலும் விளையாடுகிறாராம். சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்திகளின் பின்னணியும் இவர்தான் எனக் கைகாட்டுகிறார்கள் விஷயப்புள்ளிகள். ‘ஆட்சியின் ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டே, ஆட்சிக்கு எதிரான கருத்துகளையும் பரப்புகிறார்’ எனக் குமுறுகிறார்கள் ஆளும் தரப்பில். #உஷ்ஷ்ஷ்ஷ்!

கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியின் டெல்லி புள்ளிகளைக் கையிலெடுக்கப் பல வகையிலும் ரூட் எடுக்கிறாராம் இனிஷியல் தலைவர். உச்ச புள்ளியிடம் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கி, அவரை நேரில் சந்திக்க அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணித் தரும்படி டெல்லி புள்ளிகளிடம் வேண்டுகிறாராம். இனிஷியல் தலைவர் இவ்வளவு இறங்கி வந்தும், உச்ச புள்ளி ஏனோ இந்தச் சந்திப்பை விரும்பவில்லையாம். “பழைய வரலாறு அப்படிப்பட்டது...” எனச் சொல்லிச் சிரிக்கிறார்களாம் டெல்லியில். #ஆடிய ஆட்டமென்ன..!

டெல்டா மாவட்டப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை, சீக்கிரமே நியமிக்க முடிவெடுத்திருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். பணிவானவர் பக்கம் இருந்துகொண்டு ட்ரீட்மென்ட் புள்ளி ரொம்பவே குடைச்சல் கொடுப்பதால், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தடாலடி ஆட்களைப் பொறுப்புக்குக் கொண்டுவரப்போகிறாராம் துணிவானவர். மதுக்கூர், ஒரத்தநாடு பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றனவாம். டெல்டா மாவட்டத்தை கவனிக்க பெருந்தலைவர் பெயர்கொண்ட மாஜியை ஆஃப் தி ரெக்கார்டாக நியமித்து, பசை விஷயத்திலும் விளையாடும்படி வேண்டியிருக்கிறாராம் துணிவானவர். தஞ்சையின் சாமி புள்ளியையும் விசில் கட்சியிலிருந்து இலைக் கட்சிக்குக் கொண்டுவர வியூகம் நடக்கிறதாம். #விளையாடு மங்காத்தா... விட மாட்டாங்க வராட்டா!

கிசுகிசு
கிசுகிசு

கோட்டையில் ஒருகாலத்தில் கோலோச்சிய அதிகாரி, ஓய்வுக்குப் பிறகு பக்கத்து மாநில அரசியலுக்குப் போனார். நடிகர் ஒருவரின் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக ஆனார். ஆனால், எதிர்பார்த்த மாற்றத்தை அங்கு அவரால் ஏற்படுத்த முடியாமல் போக, மீண்டும் தமிழகத்தின் பக்கம் திரும்பிவிட்டார். சாதிரீதியான அமைப்புகளை ஒன்றாக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் ஒன்றிரண்டு சீட் வாங்கத் திட்டமிடுகிறாராம் அந்த மாஜி அதிகாரி. இது குறித்த விவரங்களை முதல்வருக்கு `நோட்’ வைத்திருக்கிறது உளவுத்துறை. #ரெஸ்ட் எடுக்கலாமே பாஸ்!