Published:Updated:

`பொன்முடி, உள்குத்து அரசியலில் கில்லாடி' - அமாவாசை டு நாகராஜசோழன்| அரசியல் புள்ளிகள் வளர்ந்த கதை

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

தமிழக அரசியல்வாதிகளில் இன்று உச்சத்தில் இருக்கும் பலர் ஆரம்பத்தில் எப்படி தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். யாரையெல்லாம் சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்தி இந்த இடத்தை அடைந்தார்கள் என்பதை அலசுவதே இந்தப் பகுதி!

அரசியல் களத்தில் இன்று ஜாம்பவன்களாக வலம்வரும் ஒவ்வொருவருக்குமே ஒரு முன்கதை இருக்கும். ஆரம்பத்தில் மிகச் சாதாரணமாக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் படிப்படியாக உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். கண்டிப்பாக அவர்களின் கடின உழைப்பும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கும். ஆனால், அது மட்டுமே காரணமா என்றால் நிச்சயமாக இல்லை.

மற்ற விஷயங்களில் எப்படியோ அரசியலில் வெறும் உழைப்பு மட்டுமே வளர்ச்சிக்கான மந்திரமாக இருக்காது. அரசியல் சதுரங்க விளையாட்டில் சரியான நேரத்தில் நகர்த்தும் காய்களே வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுக்கும். அதுவரை யாருக்காக நாம் வேலை செய்தோமே அவர்களையே ஆட்டத்தில் பலி கொடுக்க வேண்டியிருக்கும். வளர்த்துவிட்டவர்களுக்குத் துரோகம் செய்யலாமா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்தக் களத்தில் இடமே இல்லை. 27 ஆண்டுகள் ஆகியும் அமைதிப்படை அமாவாசை கதாபாத்திரம் இன்றைய இணைய உலகத்தையும் ஆட்டிப்படைக்க இதுவும் ஒரு காரணம்தான்.

`எடப்பாடி பக்கம் திரும்பும்`வாளையார்' மனோஜ் முதல் சசிகலாவின் சமாதான முயற்சி வரை'- கழுகார் அப்டேட்ஸ்!
அமாவாசை டு நாகராஜசோழன் - அமைதிப்படை
அமாவாசை டு நாகராஜசோழன் - அமைதிப்படை

அப்படித் தமிழக அரசியல்வாதிகளில் இன்று உச்சத்தில் இருக்கும் பலர் ஆரம்பத்தில் எப்படி தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள், யாரையெல்லாம் சதுரங்கக் காய்களாகப் பயன்படுத்தி இந்த இடத்தை அடைந்தார்கள் என்பதை விவரிப்பதே இந்தப் பகுதி. இப்போது நாம் பார்க்க இருக்கும் அந்த முக்கியப் புள்ளி உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி

அரசியல் என்ட்ரி ;

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் 1950-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி பிறந்தவர் பொன்முடி. பொன்முடியுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் 8 பேர். அம்மா, அப்பா இருவரும் ஆசிரியர்கள் என்பதால் பொன்முடியும் எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்),பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்ட மேற்படிப்புகளுக்குச் சொந்தக்கார‌ர்.

பொன்முடி
பொன்முடி

கல்லூரியில படிக்கிற காலத்திலேயே தி.மு.க மாணவரணியில இணைந்த பொன்முடிக்கு, அப்போது, மாநில மாணவரணி துணைச்செயலாளராக‌ இருந்த செஞ்சி ராமச்சந்திரன், தென்னாற்காடு மாவட்ட மாணவரணியின் முக்கியப் புள்ளியான ஏ.ஜி.சம்பத் ஆகிய இருவரின் அறிமுகமும் கிடைக்கிறது. அதன் பிறகு பொன்முடியின் கிராஃப் எப்படி உயர்கிறது என்பதை பின்வரும் வீடியோவில் முழுமையாக‌ காணலாம்!

அடுத்த கட்டுரைக்கு