Published:Updated:

தெலங்கானாவில் முதல்வருடன் வலுக்கும் மோதல்... சமாளிப்பாரா ஆளுநர் தமிழிசை?

தமிழிசை சவுந்தரராஜன்

தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால், அங்கு ஆளுநராக அவரால் அங்கு சமாளிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தெலங்கானாவில் முதல்வருடன் வலுக்கும் மோதல்... சமாளிப்பாரா ஆளுநர் தமிழிசை?

தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதனால், அங்கு ஆளுநராக அவரால் அங்கு சமாளிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Published:Updated:
தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு, அங்கு ஆளுநராக செயல்பட்டுவருகிறார். இந்த நிலையில், கூடுதலாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொறுப்பு துணைநிலை ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். தற்போது, இரண்டு மாநிலங்களிலும் அவர் பதவி வகித்துவருகிறார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் சந்திரசேர ராவ் தலைமையில் ராஷ்டிரிய தெலங்கானா சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு நிலைப்பாட்டை முதல்வர் சந்திரசேகர ராவ் எடுத்துள்ளார். இந்தச் சூழலில், ஆளுநர் தமிழிசைக்கும் முதல்வர் சந்திரசேர ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல் போக்கு அதிகரித்துவருகிறது. ஆளுநர் தமிழிசைக்கு உரிய மரியாதையை மாநில அரசு வழங்குவதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆளுநர் தரப்பிலிருந்து கடந்த பல மாதங்களாக எழுப்பப்பட்டுவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சில சம்பவங்கள் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தன. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவதுதான் மரபு. அப்படியிருக்கும்போது, ஆளுநரின் உரை இல்லாமலே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

சந்திரசேகர ராவ்
சந்திரசேகர ராவ்

கடந்த அக்டோபரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் தொடர்ச்சிதான் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் என்றும், இதற்கு ஆளுநரின் உரை தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரின் உரையின்றி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்பட்டதற்கு, தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தார். விதிகளைக் காரணம் காட்டி உரை ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கடந்த ஓராண்டில் அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் ஆளுநர் தமிழிசை கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற யாதாத்ரி கோயில் திறப்பு விழாவிலும் ஆளுநர் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். அண்மையில், பத்ராசலம் சென்றிருந்த ஆளுநர் தமிழிசையை வரவேற்க மாவட்ட ஆட்சியரோ, காவல் கண்காணிப்பாளரோ அங்கு இல்லை. இது தொடர்பாக ஆளுநர் தரப்பில் எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் மாநில அரசு பெரிதாக பதில் அளிப்பதில்லை. கௌசிக் ரெட்டியை சட்டமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டது மாநில அரசை கொந்தளிக்கவைத்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற உகாதி தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியானது. அதில், ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான மோதல்கள் குறித்தும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டன.

“ஆளுநர் பதவிக்காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் அவருடனான உறவு சுமுகமாகவே இருந்தது. அதன் பிறகு, பல சந்தர்ப்பங்களில் அரசுடன் அவர் உடன்படவில்லை. கௌசிக் ரெட்டியை ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் சட்டப் பேரவைக்கு நியமிக்க மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. ஆனால், அந்த கோப்பு மீது எந்த முடிவும் எடுக்காமல் பல நாட்களாக ஆளுநர் கிடப்பில் போட்டுவிட்டார்" என்று குறிப்பிடப்பட்டது

மேலும், “இரு அவைகளிலும் ஆற்றுகிற உரையாக இருந்தாலும், ஜனவரி 26-ம் தேதி கொடியேற்றும்போது ஆற்றுகிற உரையாக இருந்தாலும், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் உரையை மட்டுமே ஆளுநரால் வாசிக்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது சொந்த உரையை ஆளுநரால் வாசிக்க முடியாது. ஜனவரி 26-ம் தேதி மாநில அரசு எந்த உரையையும் வழங்காத நிலையில், தனது சொந்த உரையை ஆளுநர் வாசித்தார். 2021-22 ஆண்டுக்கான ஆளுநரின் பட்ஜெட் உரையின் போது, ​​அரசால் ஒப்புதல் வழங்கப்படாத சில பத்திகளைப் ஆளுநர் வாசித்தார்” என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

இந்த மோதல் போக்கு தொடரும் நிலையில், திடீரென டெல்லி சென்று பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஆளுநர் தமிழிசை சந்தித்து, தெலங்கானா மாநில நிலைமை குறித்து விளக்கியிருக்கிறார். இது, முதல்வர் சந்திரசேகர ராவை கோபப்படுத்தியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அடுத்த ஆண்டு தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளுநரை மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவருவதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

தெலங்கானாவைப் போலவே, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

ஒருவேளை கேரளா ஆளுநர் மாற்றப்பட்டால், அந்த இடத்துக்கு தமிழிசை நியமிக்கப்படலாம். புதுச்சேரியில் தமிழிசை சவுந்தரராஜனின் செயல்பாடுகள் குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், தெலங்கானா அளவுக்கு அது சீரியஸாக இல்லை. தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை முழு நிலவையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் ரங்கசாமியும் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர். எனவே,தற்போது புதுச்சேரியின் முழுநேர துணைநிலை ஆளுநராக தமிழிசை நியமிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism