Published:Updated:

'அவைத் தலைவர் - மேயர் - அமைச்சர்'- மா.சுப்பிரமணியனின் அரசியல் பயணம்!

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

1976-ல் திமுக-வில் சேர்ந்த மா.சுப்பிரமணியன், 1996-2006 வரையிலான காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார்.

2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியபோது திறமையாகச் செயல்பட்டு, பாராட்டைப் பெற்றவர் மா.சுப்பிரமணியன். தற்போது கொரோனா தொற்று தமிழகத்தை ஆட்டிப்படைத்துவரும் நிலையில், அதே திறமையான செயல்பாடுகளை எதிர்நோக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 61 வயதாகும் சுப்பிரமணியனுக்கு வாணியம்பாடிதான் சொந்த ஊர் என்றாலும், சைதாப்பேட்டைதான் அவரது அடையாளமே. சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பையும், பெங்களூர் ஹெவனூர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் பயின்றவர்.1976-ல் திமுக-வில் சேர்ந்த மா.சுப்பிரமணியன், 1996-2006 வரையிலான காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச்செயலாளரான இவர், கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மாடித் தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்
மாடித் தோட்டத்தில் மா.சுப்பிரமணியன்

2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய பின்னர்,மீண்டும் 2011-ல் நடந்த மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2021 தேர்தலிலும் இரண்டாவது முறையாக அதே சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், அமைச்சராகியிருக்கிறார். உடற்பயிற்சி, யோகா, மாடித்தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம்கொண்ட இவர், ஏராளமான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு