Published:Updated:

நாகை: "எங்ககிட்டயே பணம் கேட்பியா?" - பிரியாணிக் கடையை அடித்து நொறுக்கிய அரசியல் புள்ளிகள்

பிரியாணிக் கடை

திருப்பூண்டி, காரைநகர், 3 -வது வார்டு திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசுந்தரியின் கணவர் சுரேஷ், சிபிஐ கட்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அஞ்சான் ஆகியோர் பிரியாணிக்குப் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

நாகை: "எங்ககிட்டயே பணம் கேட்பியா?" - பிரியாணிக் கடையை அடித்து நொறுக்கிய அரசியல் புள்ளிகள்

திருப்பூண்டி, காரைநகர், 3 -வது வார்டு திமுக ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசுந்தரியின் கணவர் சுரேஷ், சிபிஐ கட்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி, சிபிஎம் கட்சியைச் சேர்ந்த அஞ்சான் ஆகியோர் பிரியாணிக்குப் பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
பிரியாணிக் கடை

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி கடைத் தெருவில் தனியார் பிரியாணிக் கடை ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரண்டுபேர் வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது அவர்கள் மட்டன் கறி கேட்டுள்ளனர். `கறி இல்லை' என்றதும், `குழம்பாவது கொடுங்க’ என்று கேட்டிருக்கிறார்கள். ஊழியர்கள் அதற்கும் இல்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடையிலிருந்த பொருள்களை உடைத்துள்ளனர். கடை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து தாக்கவே ஒருவர் தப்பித்துவிட, மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்துக் கடையின் உரிமையாளர் கீழையூர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

பிரியாணிக் கடை
பிரியாணிக் கடை

இந்நிலையில் நேற்று (20.04.2022) மதியம் இந்த ஹோட்டலுக்கு திருப்பூண்டி காரைநகர் 3 -வது வார்டு  தி.மு.க ஊராட்சி மன்ற உறுப்பினர் ஞானசுந்தரியின் கணவர் சுரேஷ், சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த பக்கிரிசாமி, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த அஞ்சான் ஆகியோர் சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்குப் பணம்  கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடையை அடித்து நொறுக்கி உணவுப் பொருள்களையும் கீழே கொட்டி நாசப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து  கடைப் பணிப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்கப் பாய்ந்தபோது அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு காப்பாற்றியுள்ளனராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் ரகளையில் ஈடுப்பட்டு கடையை அடித்து நொறுக்கிய சுரேஷ், பக்கிரிசாமி, அஞ்சான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து, வர்த்தக சங்கத்தினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்களோடு  நாகை - திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில்  திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த கீழையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பசுபதி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "கடையைச் சேதப்படுத்திய நபர்களை இன்று கைது செய்துவிடுவோம்" என உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

பிரியாணி கடை சாலை மறியல்
பிரியாணி கடை சாலை மறியல்

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பசுபதியிடம் பேசினோம். ``முதல் நாள் இரவு நடந்த சம்பவத்துக்கு இரண்டு தரப்பும் சமாதானமாகப் போய்விடுவதாகச் சொன்னாங்க. இதற்கிடையில் மறுநாளும் அதே கடையில் தகராறு நடந்துள்ளது. அதில் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து பக்கிரிசாமி என்பவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தலைமறைவாகியுள்ள மற்ற இருவரையும் கைதுசெய்ய முயன்றுவருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism