Published:Updated:

`பெகாசஸ் மென்பொருளில் லேட்டஸ்ட் வெர்ஷன் கேட்கும் நேரம்!’ - ப. சிதம்பரம் கிண்டல்

பெகாசஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்

``பெகாசஸ் மென்பொருளில் புதிய வெர்ஷன் உள்ளதா என்று விசாரிக்க இது தான் சிறந்த நேரம்” என்கிறார் ப. சிதம்பரம்.

`பெகாசஸ் மென்பொருளில் லேட்டஸ்ட் வெர்ஷன் கேட்கும் நேரம்!’ - ப. சிதம்பரம் கிண்டல்

``பெகாசஸ் மென்பொருளில் புதிய வெர்ஷன் உள்ளதா என்று விசாரிக்க இது தான் சிறந்த நேரம்” என்கிறார் ப. சிதம்பரம்.

Published:Updated:
பெகாசஸ் உளவு பார்க்கப்பட்ட விவகாரம்

இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா கடந்த 2017 -ம் ஆண்டு வாங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான `நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்கள்.

கடந்த 28 -ம் தேதி `நியூயார்க் டைம்ஸ்’ இச்செய்தியை விரிவாக வெளியிட்டது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஒ நிறுவனத்திடமிருந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், மெக்ஸிகோ, அமெரிக்கா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகள் பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு இந்தியாவும் பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மோடி
மோடி

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் 40 செய்தியாளர்கள் உள்பட 300 நபர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் அவைகளும் முடங்கின. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது..

கடந்த 2017 -ம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது போடப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத் தொடரில் இந்த விவகாரம் மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி - காங்கிரஸ்
ராகுல் காந்தி - காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ``மோடியின் அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது. இதன் மூலம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளின் மொபைல்கள் உளவு பார்க்கப்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர், ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெகாசஸ் மென்பொருளில் புதிய வெர்ஷன் உள்ளதா என்று விசாரிக்க இது தான் சிறந்த நேரம். இதற்கு முன் 2 பில்லியன் கொடுத்து மென்பொருளை வாங்கியது. 2024 தேர்தலுக்குள் இதைவிட வசதியான மென்பொருள் கிடைத்தால் 4 பில்லியன் கூட கொடுக்கலாம்" என்று கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பெகாசஸ் உளவு மென்பொருளை மோடி அரசு வாங்கியது அம்பலம் ஆகியுள்ளது. தேசத்துரோகம் குற்றச் செய்த மோடி பதவி விலக வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism