Published:Updated:

``அடுத்த 20-30 ஆண்டுகாலம் பாஜக-வை சுற்றியே இந்திய அரசியல் சுழலும்!" - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடல் ஒன்றில், ``வரும் தசாப்தங்களில் பாஜக ஓர் வலிமையான தேர்தல் கட்சியாக இருக்கும்" எனபிசாந் கிஷோர் கூறினார்.

``அடுத்த 20-30 ஆண்டுகாலம் பாஜக-வை சுற்றியே இந்திய அரசியல் சுழலும்!" - பிரசாந்த் கிஷோர்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடல் ஒன்றில், ``வரும் தசாப்தங்களில் பாஜக ஓர் வலிமையான தேர்தல் கட்சியாக இருக்கும்" எனபிசாந் கிஷோர் கூறினார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர், 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதையடுத்து, பிரசாந்த் கிஷோர் புதிதாக அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என பலரும் பேசிவந்தனர். பிரசாந்த் கிஷோரும் அதேகேற்றார்போல், மக்களிடம் செலவதர்கான நேரம் வந்துவிட்டது என ட்வீட் கூட செய்திருந்தார். இப்படியான பெரும் அரசியல் எதிர்பார்புகளுக்கு மத்தியில் திடீரென, ``இப்போதைக்கு கட்சி தொடங்குவதாக இல்லை. நான் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். ஒருவேளை வரும் காலங்களில் கட்சி தொடங்கலாம்" என அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு திடீரென முற்றுப்புள்ளியிட்டார்.

இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் பாஜக மற்றும் காங்கிரஸின் நிலைகுறித்து, `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது பிரசாந்த் கிஷோர், ``இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் நீங்கள் பெற்றுவிட்டால், உங்களை யாராலும் விரட்டியடிக்க முடியாது. இதுவொன்றும் தானாக நிகழ்ந்துவிடாது.

பாஜக
பாஜக

அதேசமயம், வரும் தசாப்தங்களில் பா.ஜ.க ஓர் வலிமையான தேர்தல் கட்சியாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு தேர்தல்களிலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று அர்த்தமல்ல. அதாவது, முதல் 40-50 ஆண்டுகால இந்திய அரசியல் காங்கிரஸைச் சுற்றியே இருந்தது. நீங்களும் காங்கிரஸுடன் இருந்தீர்கள் அல்லது எதிர்த்தீர்கள். அடுத்த 20-30 ஆண்டுகால இந்திய அரசியல் பா.ஜ.க-வை சுற்றியே இருப்பதை நான் பார்க்கிறேன். நீங்களும் பா.ஜ.க -வுடன் இருக்கிறீர்கள் அல்லது எதிர்க்கிறீர்கள். ஆனால், பா.ஜ.க தனித்து வரும் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒன்று. பா.ஜ.க இருப்பதால் எதிர்க்கட்சியும் இருக்கவேண்டும். மக்களின் வாழ்வை பாதிக்கும் பிரச்னைகளை அரசியல் கட்சிகள் கையிலெடுக்க வேண்டும். இந்த ஜனநாயகத்தில் விடாமுயற்சி எப்போதும் பலனளிக்கும்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism