‘என் குடும்பத்தினர் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தில் அமர மாட்டார்கள்’ - மும்பை சத்ரபதி சிவாஜி பூங்காவில்வைத்து பால் தாக்கரே அளித்த வாக்குறுதி இது. தற்போது அதே பூங்காவில் மகாராஷ்டிர மாநில முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறார் அவரின் மகன் உத்தவ் தாக்கரே. கடந்த பத்து ஆண்டுகளாக உத்தவ் தாக்கரேவின் வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது ‘ஜே.பி.ஜி பேக்’ என்னும் அரசியல் வியூக அமைப்பு நிறுவனம். இதன் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரிடமும் அவரின் தொழில் பங்குதாரருமான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கிரிஷ் தோக்கேவிடமும் உரையாடினோம்.

“மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரேவுக்கு அப்படி என்னதான் வியூகங்களை வகுத்தீர்கள்?”

“அமைதியே உருவான உத்தவ் தாக்கரே, பலமான அடிப்படைக் கட்டமைப்பைக் கொண்ட சிவசேனா கட்சியின் தலைவராக ஏற்கெனவே மக்களிடையே நற்பெயர் பெற்றிருந்தார். 2009-லிருந்துதான் அவரின் அரசியல் வியூக ஆலோசனை அமைப்பாளர் களாக நாங்கள் பொறுப்பேற்றோம். அந்தச் சூழலில், சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்து சென்று புதிய கட்சியை ஆரம்பித்திருந்த ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் சவாலாக இருந்தார். அதை முறியடித்து உத்தவ் தாக்கரேவை மக்கள் தலைவராக நிலைநிறுத்த, பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டோம். வெற்றியும் கண்டோம். அந்த வியூகங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.’’

“ஆரம்பத்தில் ராஜ் தாக்கரேவின் அதிரடி அரசியலுக்குத்தானே மகாராஷ்டிர மக்களிடையே வரவேற்பு இருந்தது?’’

“உண்மைதான்... மேடைப் பேச்சிலும் செயல்பாட்டிலும் அதிரடி அரசியலைப் பின்பற்றிய ராஜ் தாக்கரேவுக்கு பலமான வரவேற்பு இருந்தது. பால் தாக்கரேவுக்குப் பிறகு அந்தக் கட்சியின் தொண்டர்களும் மக்களும் அதேபோன்ற தீவிர நிலைப்பாடுகொண்ட தலை வரைத்தான் எதிர்பார்த்தனர். இவையெல்லாம் ராஜ் தாக்கரேவுக்குத் தான் சாதகமாக இருந்தன. நாங்கள் ராஜ் தாக்கரேவின் பலம், பலவீனம் இரண்டையும் ஆராய்ந்தோம். அவர் தொடங்கிய ‘நவ நிர்மாண் சேனா’ கட்சிக்கு பலமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது தெரியவந்தது. அதேபோல், மேடையில் ஆவேசமாகப் பேசி கைத்தட்டல்கள் வாங்குவதைவிடவும் மக்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் பண்பு அரசியலில் மிக முக்கியம். அதுவும் ராஜ் தாக்கரேவிடம் மிஸ்ஸிங்!

உத்தவ் தாக்கரேவுக்கு மக்களை அரவணைத்துச் செல்லும் பண்பும், சிவசேனா என்ற மிகப்பெரிய கட்சியின் வலிமையும் பக்கபலமாக இருந்தன. அவரது கட்சிக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி அதன் வழியே உத்தவ் தாக்கரேவுக்கான இமேஜை பலப்படுத்தினோம். கூடுதல் தகுதியாக, கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் திறமையும் உத்தவ் தாக்கரேவிடம் இருந்தது. இது, ராஜ் தாக்கரேவிடம் இல்லை. மேலும், உத்தவ் தாக்கரேவின் அடிப்படையான சுபாவத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அமைதியே வடிவான கடவுள் ராமர் வடிவத்துடன் அவரைப் பொருத்தி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தோம். அது நன்றாக வேலை செய்தது.’’

“தமிழக அரசியலில் உங்கள் நிறுவனம் எந்தக் கட்சிக்காக வேலைபார்க்கிறது?’’

“கட்சிக்கு மட்டும் என்றல்ல... குறிப்பிட்ட அரசியல் தலைவர்களைப் பிரபலப்படுத்தும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். இங்கே உள்ள கட்சிகள் சில, தங்களுக்கும் ஆலோசனை வழங்கும்படி கேட்டுள்ளன. அவை பற்றி வெளியே சொல்ல முடியாது.’’

“2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?”

“மக்களிடையே பிரபலமான நடிகர்கள், `அரசியலிலும் எளிதாக வென்றுவிட முடியும்’ என நினைக்கலாம். ஆனால், அரசியல் களம் என்பது வேறு. நடிகராக ஏற்றுக்கொண்ட ஒருவரை தலைவராகவும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான திறமைகளை அந்த நடிகர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி தலைவராகவும் மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகே, ‘தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைப்பது’ என்ற அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வெற்றிகள்மூலம் எடப்பாடி பழனிசாமியும் மு.க.ஸ்டாலினும் தங்கள் கட்சிரீதியான தலைமைக்கான வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர். ஆனாலும், தமிழக அரசியலில் ‘பொதுத்தளம் சார்ந்த ஆளுமை மிக்கத் தலைவர்’ என்ற வெற்றிடம் காலியாகவே இருப்பதாக மக்கள் நினைக் கிறார்கள். 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி, அந்த இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள் என்பதை நிர்ணயிக் கும். எனவே, ‘நடிகர்’ என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலில் ரஜினிகாந்த் வெற்றிபெற வாய்ப்பே இல்லை.’’

“ஆனால் என்.டி.ராமராவ், ஆந்திரத்தில் கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே ஆட்சியைப் பிடித்தாரே?”

“அங்கு அவர் கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடித்தது உண்மைதான். அந்த ஒன்பது மாதங்களில் அங்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு எதிராக அவர் மேற்கொண்ட தீவிரமான பிரசார உத்தி கவனிக்கப்பட வேண்டியது. ரஜினி தன்னை ஓர் அரசியல் தலைவராக எப்படி முன்னிறுத்திக்கொள்ளப்போகிறார், அவருடைய வியூகம் என்னவாக இருக்கும், தனியாக அல்லது கூட்டணியாகச் செயல் படப்போகிறாரா என்பதைப் பொறுத்தே அவரின் வெற்றி அமையும்.”