Published:Updated:

கோவை மேயர் ரேஸ்: அப்செட்டில் மாவட்டப் பொறுப்பாளர்கள்... முன்னேறும் புதுவரவுகள்!

கோவை மேயர் ரேஸ்

கோவை மாநகராட்சி மேயர் ரேஸில், ஏற்கெனவே இருந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு திருப்தியான பதில் வராத நிலையில், புதிதாகச் சிலரின் பெயர்கள் அடிபட்டுவருகின்றன.

கோவை மேயர் ரேஸ்: அப்செட்டில் மாவட்டப் பொறுப்பாளர்கள்... முன்னேறும் புதுவரவுகள்!

கோவை மாநகராட்சி மேயர் ரேஸில், ஏற்கெனவே இருந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு திருப்தியான பதில் வராத நிலையில், புதிதாகச் சிலரின் பெயர்கள் அடிபட்டுவருகின்றன.

Published:Updated:
கோவை மேயர் ரேஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. வெற்றிபெற்ற வேட்பாளர்கள், இன்று உறுப்பினர்களாக பதவியேற்கவுள்ளனர். நாளை மறுநாள் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், தற்போதுவரை கோவை மாநகராட்சி மேயர் யார் என்கிற தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கோவை நா.கார்த்தி மருதமலை சேனாதிபதி
கோவை நா.கார்த்தி மருதமலை சேனாதிபதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேயர் பதவிக்கு 10-க்கும் மேற்பட்டோர் முயன்றுவருகின்றனர். முக்கியமாக மாவட்டப் பொறுப்பாளர்கள் கார்த்தி தன் மனைவி இளஞ்செல்விக்கும், மருதமலை சேனாதிபதி தன் மகள் நிவேதாவுக்கும் கடுமையாக முயன்றுவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவர்களைத் தவிர 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மீனாலோகு உள்ளிட்ட ஏராளமானோர் மேயர் பதவிக்கு முயல்கிறார்கள். சென்னையில் அறிவலாயம், உதயநிதி அலுவலகம், அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் என்று முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

யாரிடமும் செந்தில் பாலாஜியோ, தலைமையோ பிடி கொடுத்துப் பேசுவதில்லையாம். இதனால், கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டேயிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``சமீபத்தில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக்கு எதிராக மகளிரணித் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைவுதான்.

கோவை திமுக
கோவை திமுக

மருதமலை சேனாதிபதி மகள் நிவேதாவின் வேட்புமனுவிலேயே ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. உளவுத்துறை ரிப்போர்ட்டும் அவருக்கு எதிராகவே உள்ளது. ரேஸில் உள்ள மூத்த நிர்வாகிகள், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

காலம் காலமாக கோவை திமுக-வை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சாதிய அரசியலும் இந்த ரேஸில் தலைவிரித்தாடுகிறது. அதன்படி, மாநகராட்சி எல்லையில் வரும் நான்கு மாவட்டப் பொறுப்பாளர்களில், மருதமலை சேனாதிபதி, பையாகிருஷ்ணன் மற்றும் சி.ஆர்.ராமசந்திரன் ஓர் அணியாகத் திரண்டுள்ளனர்.

கோவை
கோவை

இப்போதே அணியாகச் செயல்படுவதால், மேயர் யார் என்பதைக் கடைசி நேரத்தில்தான் அறிவிப்பார்கள். முன்னரே அறிவித்தால் அது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். யாரும் எதிர்பாராத ஒருவர் மேயராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதன்படி19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்பனா, 30-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா, 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெய்வயானை ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. இவர்களில் ஒருவர் பெயரை மேயராக அறிவிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கோவை மாநரகாட்சியில் ஐந்து மண்டலங்கள் உள்ளன. மண்டலங்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை மேயர் பதவியேற்ற பிறகு வெளியிடவும் திட்டமிட்டுவருகின்றனர்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism