Published:Updated:

ராமதாஸ் : தலித்துகளுக்கு நான் செய்த சேவை; திருமாவளவன் பாராட்டினார் - டாக்டர் ராமதாஸ் நேர்காணல்

ராமதாஸ்

திருமாவளவன் தலித்துகளுக்காக நான் செய்த சாதனைகளை விளக்கி அரை மணி நேரம் பேசினார் - ராமதாஸ்

ராமதாஸ் : தலித்துகளுக்கு நான் செய்த சேவை; திருமாவளவன் பாராட்டினார் - டாக்டர் ராமதாஸ் நேர்காணல்

திருமாவளவன் தலித்துகளுக்காக நான் செய்த சாதனைகளை விளக்கி அரை மணி நேரம் பேசினார் - ராமதாஸ்

Published:Updated:
ராமதாஸ்
தமிழக அரசியல் வரலாற்றை மாற்றியமைத்ததில் இவருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. மிகப் பெரிய போராட்டங்கள் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையை வாங்கி தந்தவர். 43 ஆண்டு காலம் தமிழக அரசியலில் பயணிக்கும், தொண்டர்களால் அன்போடு மருத்துவர் அய்யா என்றழைக்கப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ராமதாசுடன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நிகழ்த்திய உரையாடலை இங்கு காண்போம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீங்கள் மருத்துவராக பணியாற்றியபோது ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள் நடந்ததுண்டா?

Ramadoss
Ramadoss

நான் மூன்றாண்டு காலம் அரசு மருத்துவராக இருந்தேன். அங்கு என்னுடைய பெயர் சின்ன டாக்டர். ஏனென்றால் அங்கு வேலை பார்த்த அனைவரும் என்னைவிட வயதானவர்கள். காலை, மாலை இரு வேளைகளும் ஓ. பி. க்கு செல்வேன். சிறிது காலம் சென்றவுடன் தனியாக க்ளினிக் வைத்தேன். அப்போது அந்த இடத்தில் எனக்குக் கொஞ்சம் நல்ல பெயர் இருந்ததால், மக்கள் நிறைய பேர் என் க்ளினிற்கு வந்தார்கள். நோயாளிகளுக்கு மூன்று ரூபாய் வரை வசூலித்தேன். என் கடைசி மருத்துவ காலத்தில் நான் வாங்கிய பணம் ஐந்து ரூபாய். ஒரு சில பேரிடம் பணம் கேட்டால், அவர்கள் தலையை சொரிவார்கள். அப்படி தலையைச் சொரிந்தால், அவர்களிடம் பணம் இல்லையென்று அர்த்தம். சிறுது நேரம் கழித்து மறுபடியும் தலையைச் சொரிவார். ஏனென்று கேட்டால், பஸ்ஸுக்கு காசில்லை என்று காசு வாங்கிட்டு போவார்கள்.

மருத்துவராக இருந்த உங்களுக்கு எப்படி அரசியல் ஈடுபாடு வந்தது?

அன்புமணி - ராமதாஸ்
அன்புமணி - ராமதாஸ்

எனக்கு ஆரம்ப காலகட்டத்தில் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. சமுதாயத்தைப் பற்றி தான் நான் நினைத்தனே தவிர அரசியல் பற்றி நான் நினைக்கவில்லை. அங்காங்கே நிறைய வன்னியர் சங்கங்கள் இருந்தன. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். அதன்பின் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கினேன். அது ஆரம்பித்து 33 வருடங்கள் ஆகிறது. ஆனால், என் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இன்று வரை ஒரு சமூகப் போராளியாகத்தான் நான் இருப்பனே தவிர ஒரு அரசியல்வாதியாக நான் வாழ்ந்ததில்லை.

தற்போது உங்கள் மகன் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகி உள்ளார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்
பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ்

எல்லா தந்தையையும்போல நம்ம பையன் ஒரு தலைவராகிறான் என்ற மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. அவர் கண்டிப்பாக அதைச் சிறப்பாக எடுத்து செய்வார் என்று நம்பிக்கையும் இருக்கிறது. ஏனென்றால் அவர் ஐந்து வருடம் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டார். அதற்காக நான்கு விருதுகள்கூட வாங்கியிருக்கிறார். அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 'நான் என்னப்பா செய்யணும்?' என்று என்னிடம் கேட்டார். உடனே நான் 'ஜனாதிபதிக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ வசதி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழைக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்' என்றேன். அதன்பின் தேசிய ஊரக சுகாதார அமைப்பை (Nation Rural Health Mission) கொண்டு வந்தார். அதற்காக அவருக்கு விருது கொடுத்தார்கள். அவரும் என்னைப்போல தான். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் மருத்துவம் பயின்று விட்டு மருத்துவத்தை விட்டுவிட்டு அரசியலில் இறங்கிவிட்டார்.

ஒரு காலக்கட்டத்தில் நீங்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவராக இருந்தீர்கள். ஆனால் இப்போது அந்த நெருக்கம் குறைந்துவிட்டதாகத் தோன்றுகிறதே?

திருமாவளவன்
திருமாவளவன்
விகடன்

அது விலகி நிற்பது என்றல்ல. ராமதாஸை தலித்திற்கு எதிராகச் சித்தரித்தால் அவர்களுடைய இயக்கம் வளரும் என்று ஒரு சில அமைப்பினரால் கட்டமைக்கப்பட்டது தான் இந்த பிம்பம். இன்று வரை ஒரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த ஒரே தலைவர் நான்தான். எனக்கு அம்பேத்கர் விருது கொடுத்தார்கள். அப்போது திருமாவளவன் தலித்துகளுக்காக நான் செய்த சாதனைகளை விளக்கி அரை மணி நேரம் பேசினார். மறைந்த பேராசிரியர் அன்பழகனும் என்னைப் பாராட்டிப் பேசினார்.

ஒரு மாநிலத்தின் அரசியல் தலைவராக பார்க்கப்படும் நீங்கள் தேசிய அளவில் பெரும் தலைவராக உருவாகாமல் போனதற்கான காரணமாக நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள்?

வாஜ்பாயுடன் ராமதாஸ்
வாஜ்பாயுடன் ராமதாஸ்

தேசிய அளவில் பாட்டாளி மக்கள் கட்சி நிறைய டெல்லியில் பண்ணியிருக்கிறது. நான் பாரளுமன்றத்திற்குப் போக மாட்டேன் என்று அறிவித்தவுடன், பாராளுமன்றத்திலிருந்து என் வீட்டிற்கு வந்தார் வாஜ்பாய். அதே போல 18 மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தோம். அதற்கு 18 மாநில மொழிகளிலும் அழைப்பிதழ்கள் அடித்தோம். அதைப் பார்த்தவுடன், 'இதில் என்னுடைய மொழி இல்லையே?' என்று அத்வானி கேட்டார். இப்படி தேசிய அளவில் ஏராளமான விஷயங்கள் செய்திருக்கிறோம்.

வீடியோ நேர்காணலைக் காண