Published:Updated:

மைக் ப்ளீஸ்

மைக் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மைக் ப்ளீஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது

மைக் ப்ளீஸ்

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது

Published:Updated:
மைக் ப்ளீஸ்
பிரீமியம் ஸ்டோரி
மைக் ப்ளீஸ்
மைக் ப்ளீஸ்

`` `மறுபடியும் நடிக்கப் போய்விட்டார் கமல்ஹாசன்’ என்கிறார்கள். சிறையிலிருந்தால்தான் தலைவர் என்று இல்லை; திரையிலிருந்தாலும் தலைவர்தான்!’’ - கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

மைக் ப்ளீஸ்

``படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்த லட்சம் பேரை நாம் காட்ட முடியும். படிக்காமலேயே சாதிக்கலாம் என்று சொல்வது தன்னம்பிக்கை ஊட்டுவதல்ல, அது வெறும் ஆசைவார்த்தை; சூழ்ச்சி!’’ - மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

மைக் ப்ளீஸ்

``கிராமத்தில் பிறந்து ஏழை மக்களுடன் வாழ்ந்தவன் என்பதால், அவர்களின் கஷ்டம் எனக்குப் புரியும். தி.மு.க ஆட்சியில் ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன!’’ - எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்

மைக் ப்ளீஸ்

``ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாகச் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகி, ஆர்.எஸ்.எஸ் தொண்டராகப் பணியாற்றச் செல்ல வேண்டும்!’’ - திருமாவளவன், வி.சி.க தலைவர்

மைக் ப்ளீஸ்

``மத்தியில் பா.ஜ.க எட்டு ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னும் 80 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்யும். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது வந்த கூட்டம், தற்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு வருகிறது!’’ - நயினார் நாகேந்திரன், பா.ஜ.க எம்.எல்.ஏ

மைக் ப்ளீஸ்

``அ.ம.மு.க இருக்கும்வரை நான் தோற்கமாட்டேன்; காணாமல் போக மாட்டேன். இறப்பது ஒரு முறை; வாழ்வதும் ஒருமுறை. என்ன வருகிறது எனப் பார்த்துவிடலாம்!’’ - டி.டி.வி.தினகரன், அ.ம.மு.க பொதுச்செயலாளர்

மைக் ப்ளீஸ்

``கட்சியை வளர்க்க, எதிர்க்கட்சி என்று சொல்லி மாயப் பிரசாரத்தைச் செய்துவருகிறது பா.ஜ.க. அ.தி.மு.க ஒருபோதும் எதிர்க்கட்சிக் கடமைகளிலிருந்து விலகாது!” - ஜெயக்குமார், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism