Published:Updated:

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்

சிறையில் ஏழு புத்தகங்கள் எழுதினேன்!

நாங்கல்லாம் அப்பவே அப்படி!

சிறையில் ஏழு புத்தகங்கள் எழுதினேன்!

Published:Updated:
சீமான்
பிரீமியம் ஸ்டோரி
சீமான்
மேடைதோறும் எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்துக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், இப்போது வீட்டுச் சிறையில் இருந்துகொண்டு, ‘டல்கோனா’ சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘இப்படி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த அனுபவம் இதற்கு முன் உண்டா?’ என்ற கேள்வியை அரசியல் பிரபலங்கள் சிலரிடம் கேட்டோம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பழ.நெடுமாறன்;

‘`2003-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, பொடா வழக்கில் கைது செய்தார்கள். கிட்டத்தட்ட, ஒன்றரை வருட காலம் சிறையில் இருந்தேன். அப்போதுதான் ஏழு புத்தகங்கள் எழுதினேன். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் ஒருவருட காலம் காவல்நிலையத்தில் கையெழுத்து போட வேண்டியிருந்தது. அப்போது சென்னையை விட்டு வெளியே போக வேண்டுமானால், பொடா நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டியிருந்தது. பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது. பத்திரிகையாளர்களைச் சந்திக்கக்கூடாது என வாய்ப்பூட்டு போடப்பட்டது. அதனால், பெரும்பாலான நாள்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.’’

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

சீமான் ;

‘`இதற்கு முன்பாக, இத்தனை நாள்கள் வீட்டில் முடங்கி இருந்ததாக எந்த நினைவும் இல்லை. போனவருடம், எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கூட்டம் நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடம் கருத்துகேட்டதற்காகக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மூன்று நாள்கள் சிறையில் இருந்தேன். பின்னர், ஜாமீனில் வெளிவந்தேன். அதற்கு முன்பாக என்றால், 2008, 2009 ஆகிய இரண்டு ஆண்டுகளில், ஈழப்பிரச்னை குறித்துப் பேசியதற்காக, கிட்டத்தட்ட ஒருவருடம் சிறையில்தான் இருந்தேன்.’’

சீமான்
சீமான்

ப வேல்முருகன் ;

‘` இதற்கு முன்பாக என்றால் 1987 செப்டம்பர் 17-23 வரை, வன்னிய மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது வடதமிழகம் முழுவதும், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தில், துப்பாக்கிச்சூடு நடந்து 21 பேர் பலியானார்கள். துணை இராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உருவானது. அந்தக் காலகட்டத்தில் நான் மாணவனாக அந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். அப்போது ஊரை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.”

ப வேல்முருகன் ;
ப வேல்முருகன் ;

சு.வெங்கடேசன் ;

‘`இதற்கு முன்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு ஊரடங்கில் முடங்கி இருந்ததாக எந்த முன் அனுபவமும் எனக்கு இல்லை. இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தில் தமிழகத்தில் பரவலாக 52 இடங்களில் ஒன்றிரண்டு நாள்கள் ஊரடங்கு அமலில் இருந்ததாகத் தெரிகிறது. அதற்கு அடுத்ததாக தற்போதுதான். தனிப்பட்ட முறையில் என்றால், காவல்கோட்டம், வேள்பாரி என என் இரு நாவல்கள் எழுதிய காலகட்டங்களில் இருந்திருக்கிறேன். காவல்கோட்டம் ஒருவருடத்தில் பல முறை பத்து நாள்கள், இருபது நாள்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து எழுதியிருக்கிறேன். வேள்பாரியும் அப்படி எழுதியதுதான்.’’

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

பா.வளர்மதி (முன்னாள் அமைச்சர்)

‘`1989 தி.மு.க ஆட்சியில் இருந்த காலகட்டம் அது. நான் அ.தி.மு.க மகளிரணிச் செயலாளராக இருந்தேன். அப்போது, அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வந்தார்கள். அப்போது என்மீதும் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த நேரத்தில், காவல்துறையில் கையில் சிக்காமல் இருக்க, 17 நாள்கள் நண்பர் ஒருவரின் வீட்டில் ரகசியமாக இருந்தேன். பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் எல்லாம் என் பெயரும், என்னைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வரும். நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிய பிறகு வெளியே வந்தேன். அந்த நாள்களில் சாப்பிடுவது, புத்தகம் படிப்பது, தூங்குவது ஆகியவற்றிலேயே என் பொழுது கழிந்தது. சரித்திர புத்தகங்கள், உலக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படிப்பது எனக்கு விருப்பமான ஒன்று. அதைத்தான் அப்போது செய்துவந்தேன். என் வாழ்க்கையில் அது ஒரு புது அனுபவமாக இருந்தது. இப்போது அந்த நாள்களின் நினைவுதான் வருகிறது.’’

பா.வளர்மதி
பா.வளர்மதி

ஜோதிமணி (காங்கிரஸ்)

``நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். வீட்டில், நானும் என் அம்மாவும் மட்டும்தான். ஆண் - பெண் பேதம், மூடத்தனம் எதுவும் இல்லாது முற்போக்குக் குணம் கொண்டவளாக நான் இருப்பதற்கு என் அம்மாவின் வளர்ப்புமுறைதான் காரணம். அப்படிப்பட்ட என் அம்மா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார். என்னதான் துணிச்சலை அவர் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தாலும்கூட, `இத்தனை வருடங்களாக என்னை வளர்த்து ஆளாக்கிய என் ஒரே சொந்தம் இனிமேல் இல்லை' என்ற நிலையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. துக்கம், தனிமை, வெறுமை என்று எல்லாம் ஒருசேர அழுத்திப்பிடிக்க, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் என் வீட்டை விட்டே நான் வெளியில் வரவில்லை. அந்த அளவு மன அழுத்தம்!

ஜோதிமணி
ஜோதிமணி

அதன் பின்னர், `விபாசனா மெடிட்டேஷன் வகுப்பு'க்குச் சென்றுதான் மெல்ல மெல்ல மீண்டு வந்தேன். இந்த ஊரடங்கு காலகட்டம், அம்மாவை இழந்து நின்ற வலியை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறது.''