சமூகம்
Published:Updated:

வார்த்தை போர்!

மோடி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி - ஸ்டாலின்

ஓவியம்: சுதிர்

வார்த்தை போர்!

``துரதிர்ஷ்டவசமாக, வரலாறு என்ற பெயரில், மக்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சில கதைகள் மட்டுமே நமக்குக் கற்பிக்கப்படுகின்றன.’’

- நரேந்திர மோடி, பிரதமர்

வார்த்தை போர்!

``வரலாறு, அறிவியல் அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். ஆனால், சிலர் கற்பனைக் கதைகளை, வரலாறாகப் பேசுகிறார்கள். அவர்களை நம்பி எவரும் ஏமாந்துவிடக் கூடாது. வரலாற்றைத் திரிப்பது நாட்டுக்கே ஆபத்து.’’

- மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

****

``2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு முடிவுரை எழுத நம்மால் முடியும். 25 எம்.பி-க்களை பாரதிய ஜனதா கட்சி பெறும். அதற்கு இந்த ரஃபேல் வாட்ச்சும் உழைக்கும்.’’

- அண்ணாமலை, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்

வார்த்தை போர்!

``நாடாளுமன்றத் தேர்தல் இருக்கட்டும்... முதலில் பா.ஜ.க-வுக்கு எவ்வளவு வாக்குவங்கி இருக்கிறது... கட்சியில் எத்தனை உறுப்பினர் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எத்தனை வாக்குச்சாவடி இருக்கின்றன என்பதே தெரியாத கட்சிதான் பா.ஜ.க.’’

- செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்துறை அமைச்சர்

*****

``ஜனநாயக நாடான இந்தியாவில், மன்னர் ஆட்சி நடத்துகிறது தி.மு.க. தாத்தா, பிள்ளை, பேரன் என வரிசையாக ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடலா?”

- சி.வி.சண்முகம், அ.தி.மு.க எம்.பி

வார்த்தை போர்!

``சி.வி.சண்முகத்தின் அப்பா முன்னாள் எம்.பி. அதனால்தான் கட்சியில் அவருக்கு இடமும் சீட்டும் கிடைத்தன. அப்படியிருக்கையில், வாரிசு அரசியல் பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?’’

- பொன்முடி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்

*****

``தைரியம் இருந்தால் எடப்பாடி, `தனிக் கட்சி தொடங்குவேன்’ எனச் சொல்லிப் பார்க்கட்டும், அவர் எங்கே போவார் என்றே தெரியாது.’’

- ஓ.பி.எஸ்., முன்னாள் முதலமைச்சர்

வார்த்தை போர்!

`` `நாம் ஒருவர் நமக்கு நால்வர்’ என ஓ.பி.எஸ் செயல்பட்டு வருகிறார். அவர் வேண்டுமென்றால், `ஓ.பி.எஸ் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கிக்கொள்ளட்டும்!’’

- ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்

*****

``லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் மகள்களைப் பாதுகாக்க இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் காய்கறி நறுக்கும் கத்திகளைக் கூர்மையாக வைத்திருங்கள். அது காய்கறிகளை நன்றாகச் சீவினால், எதிரிகளின் தலைகளையும் சீவும்.’’

- பிரக்யா சிங் தாக்கூர், பா.ஜ.க எம்.பி

வார்த்தை போர்!

``இஸ்லாமியர் இனப்படுகொலைக்கு பா.ஜ.க எம்.பி ஒருவர் வெளிப்படையாக அழைப்பு விடுத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கவில்லை. காஷ்மீரில் உண்மையைப் பேசுபவர்கள்மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் பாய்கிறது. ஆனால், தங்களது வாக்குவங்கியைத் திருப்திப்படுத்தும் வகையில் பிரக்யா பேசியிருப்பதால், அவரை மத்திய அரசு கண்டுகொள்ளாது.’’

- மெஹபூபா முஃப்தி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்

****

``இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்திருக்கின்றன. போர் வெடிக்கும் சூழலில், இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து இந்தியாவைத் தாக்க வாய்ப்பிருக்கிறது.’’

- ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி

வார்த்தை போர்!

``ராகுல் காந்தி இன்னும் 1962 காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இந்திய ராணுவத்தை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தி, அவர்களின் மன உறுதியைச் சீர்குலைக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் அல்லது ராகுலுக்கு இந்திய ராணுவ வீரர்கள்மீது நம்பிக்கை இல்லையா?’’

- அனுராக் தாக்கூர், மத்திய அமைச்சர்

******

``கார்கே புண்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்திய விதம், பொய்யைப் பரப்ப முயன்ற விதம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். இதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்.’’

- பியூஷ் கோயல், மத்திய அமைச்சர்.

வார்த்தை போர்!

“சுதந்திரப் போராட்டத்தின்போது மன்னிப்புக் கேட்டவர்கள், சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்”

- மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்