Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

சினிமா, டி.வி நிகழ்ச்சி உள்ளிட்டவற்றைக் குறைத்துக்கொண்டு, நடுநிலைக் கட்சியின் தலைவர் தீவிரமான அரசியலுக்குள் வர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் முன்னணி நிர்வாகிகள். “முழு நேரமும் அரசியல் செய்துகொண்டிருந்தால், பட்ட கடனை யார் அடைப்பது?” என்கிறாராம் நடுநிலைத் தலைவர். மதுரைக்கார ஃபைனான்ஸியரிடம் மாதா மாதம் கட்டும் வட்டித்தொகையை அவர் சுட்டிக்காட்ட, கட்சி நிர்வாகிகளுக்கு மயக்கம் வராத குறையாம். #சங்கமே அபராதத்துலதான்யா ஓடிக்கிட்டிருக்கு!

கிசுகிசு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மெர்சலான நடிகரின் மன்றத்தினரை ஆதரித்து, புலிக்கட்சியின் தலைவர் ட்வீட் போட, முதன்மையானவர் கவனம் வரை அதைக் கொண்டுபோயிருக்கிறது உளவுத்துறை. முக்குலத்துச் சமூக வாக்குகள் மெர்சலான நடிகரின் பக்கம் திரும்பாதபடி, இப்போதே வியூகம் அமைக்க வேண்டும் என முதன்மையானவரும் உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். நடிகரின் அரசியல் மூவ் 2026-ஐ நோக்கி நகர்வதால்தான் இந்த அளவுக்குக் கண்காணிக்கிறார்களாம். #போற திசையிலெல்லாம் போடுறா செக் போஸ்ட்ட!

கிசுகிசு

இலைக் கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளிக்கும், முன்னாள் சட்டப்புள்ளிக்கும் இடையேயான பனிப்போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லையாம். சாதிரீதியான சண்டையாக அதை மாற்றி, கட்சிக்குள் தனக்கு ஆதரவு திரட்ட ட்ரீட்மென்ட் புள்ளி பல நிர்வாகிகளிடமும் பேசிவருகிறாராம். முன்னாள் சட்டப்புள்ளி இதைச் சட்டை செய்யாவிட்டாலும் இலைக் கட்சியின் துணிவானவர், ட்ரீட்மென்ட் புள்ளியின் சாதிரீதியான ஒருங்கிணைப்பை இப்போதே உடைத்தெறிய நினைக்கிறாராம். அதனால் ட்ரீட்மென்ட் புள்ளிக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம், ‘நமக்குக் கட்சிதான் முக்கியம்’ என வலியுறுத்திவருகிறாராம். #கப்பு முக்கியம் பிகிலு!

கிசுகிசு

சின்ன தலைவிக்குச் சொந்தமான சேனலிலிருந்து, பல ஊழியர்கள் விலகிக்கொண்டிருக்கிறார்களாம். ஏன், எதற்கு என்று கேட்கக்கூட நிர்வாகத்தில் ஆள் இல்லையாம். சேனல் நிர்வாகத்தை கவனிக்கும் விவேகமான புள்ளி, மாதத்துக்கு ஒரு முறைதான் ஆபீஸ் பக்கம் வந்துபோகிறாராம். அதனால், சின்ன தலைவிக்குக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார்களாம் ஆதங்கத்திலிருக்கும் ஊழியர்கள். #ஒரு கடிதம் எழுதினோம்... அதில் எங்கள் கடுப்பை அனுப்பினோம்!

கிசுகிசு

தலைமைக்கும் தனக்குமான மன வருத்தங்களை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக, முதன்மையானவரிடம் சரணாகதி ஆகியிருக்கிறார் வாய்த்துடுக்கு அமைச்சர். ‘இனி உங்களின் எண்ணத்துக்கு மாறாக எனது செயல்பாடுகள் இருக்காது. உங்களைக் கேட்காமல் ஊடகங்களிடம் வாய் திறக்க மாட்டேன்’ எனப் பல உத்தரவாதங்களை அமைச்சர் கொடுக்க, வருத்தங்கள் மறந்து ஆரத் தழுவிக்கொண்டாராம் முதன்மையானவர். #‘நான் கொஞ்சம் எமோஷனாயிட்டேன்’ மொமன்ட்!

கிசுகிசு

டெண்டர் விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருந்த வகையில், வாரிசின் செயல்பாடுகளுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஆனால், திடீரென என்ன மாற்றமோ… கான்ட்ராக்ட், கமிஷன், டெண்டர் என அத்தனை தளங்களிலும் தலையீடு காட்டத் தொடங்கியிருக்கிறாராம் வாரிசு. இலைக் கட்சியின் ஆதரவுப்புள்ளிகள் கேட்கும் டெண்டர்களையும் ஓகே செய்து கொடுக்கும்படி போனிலேயே ஆர்டர் போடுகிறாராம். பெரிய தொகைக்குரிய டெண்டர்கள், இனி தன் கவனத்துக்கு வராமல் நடக்கக் கூடாது என்றும் கறார் உத்தரவு போட்டிருக்கிறாராம். #நிதி நிதியா முந்திரிக்கா... டெண்டரை டெண்டரைச் சுத்தி வா!