Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: சுதிர்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

காவிக் கட்சியின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக, மனதில்பட்ட வருத்தங்களை வெளிப்படையாகப் போட்டு உடைத்தவர் பிரகாச நடிகர். ஆனால், சமீபத்தில் அவர் நடித்த படத்துக்கு அவார்டுகளை அள்ளிக்கொடுத்து, ஆச்சர்யப்படுத்தியது டெல்லி தரப்பு. இனியாவது பிரகாச நடிகர் டெல்லிக்கு எதிரான கொதிப்பைக் குறைப்பாரா என்பதுதான் அங்கிருப்பவர்களின் எதிர்பார்ப்பாம். இது குறித்து, சமீபத்தில் பிரகாச நடிகருக்கு நெருக்கமான நிழல்புள்ளி ஒருவர் மூலம் அவருடைய மனநிலையை விசாரிக்கவும் சொன்னார்களாம். ‘அவார்டு என்பது திரையில் என் நடிப்புக்காக… நிஜத்தில் எனக்கு நடிக்கத் தெரியாது. மனதில்பட்ட ஆதங்கத்தை எப்போதும்போலப் பேசத்தான் செய்வேன்’ எனப் பிரகாச நடிகர் சொல்ல, விசாரிக்கச் சொன்னவர்கள் வெறுத்துப்போனார்களாம். #வடை போச்சே மொமன்ட்!

கிசுகிசு

டெல்டா மாவட்டத்தில் இலைக் கட்சியின் ட்ரீட்மென்ட் புள்ளி, பணிவுப் பக்கம் போனதால் நீக்கப்பட்டார். அவருடைய மாவட்டப் பதவியை வாங்க மகாத்மாவின் பெயர்கொண்டவர் பல ரூட்டிலும் மெனக்கெட்டுவருகிறார். ட்ரீட்மென்ட் புள்ளிக்கு வலதுகரமாக விளங்கிய அவரையே பதவிக்குக் கொண்டுவர நினைத்த துணிவுத் தரப்பு, இப்போது வேறுவிதமாக யோசிக்கிறதாம். ட்ரீட்மென்ட் புள்ளிக்கு எதிராகப் பல காலமாக முழங்கிவரும் ‘மதுக்கூர்’ தடாலடிப் புள்ளியை மாவட்டப் பொறுப்புக்குக் கொண்டுவர நினைக்கிறதாம் துணிவுத் தரப்பு. “ட்ரீட்மென்ட் புள்ளிக்கு டஃப் ஃபைட் கொடுக்கவும், கடைசிவரை அணி மாறாமல் இருக்கவும் மதுக்கூர் தடாலடிப் புள்ளிதான் சரிப்படுவார்” என முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த சான்றிதழ்தான் இதற்குக் காரணமாம். #காமெடி கீமடி பண்ணலியே!

கிசுகிசு

மத்திய அரசின் சினிமா விருதுகளுக்கான அறிவிப்பைப் பார்த்ததும், ‘நாம் ஏன் சினிமா விருதுகளை அறிவிக்கவில்லை?’ என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாராம் முதன்மையானவர். அப்போதுதான் கடந்த ஆறு வருடங்களாகத் தமிழ்நாடு அரசு சினிமா விருதுகளை அறிவிக்காத கொடுமை தெரியவந்ததாம். “நல்ல படங்களை எடுக்கச் சொல்லி நான் பல மேடைகளில் வலியுறுத்துகிறேன். நீங்க அவார்டுகளுக்கான அறிவிப்புகளைத் தள்ளிப்போடுவது நியாயமா?” என அதிகாரிகளிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் முதன்மையானவர். மொத்தமாக ஆறு வருடங்களுக்கான விருதுகளையும் அறிவிக்க எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்பது குறித்து உடனே `நோட்’ வைக்க உத்தரவிட்டிருக்கிறாராம். #அவார்டுல அரசியல் பண்ணிடாதீங்க பாஸ்!

கிசுகிசு

சொல்லிக்கொடுக்கும் துறையில், நாளுக்கு நாள் நடக்கும் குளறுபடிகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அங்கன்வாடிகளுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்ட சீருடை, பெண் குழந்தைகளுக்கு சரியான முறையில் தைக்கப்படவில்லையாம். ‘எல்.கே.ஜி., யூ.கே.ஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு எது பாதுகாப்பான உடை என்பதுகூடத் தெரியாமல் இப்படி டிசைன் செய்தவர்கள் யார்?’ எனச் சொல்லிக்கொடுக்கும் துறையின் கீழ்மட்ட அதிகாரிகள் கேள்வி கேட்கிறார்கள். இத்தகைய சீருடைகளை வழங்க முடிவெடுக்கிறபோது, உரிய துறையின் அமைச்சர் பார்வை வரை அந்த டிசைனை அனுப்பி ஓகே வாங்குவது வழக்கமாம். ஆனால், இப்போதைய அன்பான அமைச்சருக்கு இதைப் பார்க்க நேரம் இல்லையாம். #கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை..!

கிசுகிசு

கடலுக்குள் நினைவுச்சின்னம் அமைக்க ஏற்பாடாவதை எதிர்த்து, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருக்கிறாராம் அண்ணன் தலைவர். கட்சி சார்பாக இல்லாமல், தன் பெயரிலேயே வழக்கு போட்டு தடை வாங்கியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இந்த முடிவிலிருந்து முதன்மையானவர் பின்வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரைச் சீண்டும் வகையில் கடுமையான வார்த்தைகளைத் தொடர்ந்து பேசுகிறாராம். ஆளும் தரப்பிலிருந்தே அண்ணன் தலைவருக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு பெருகுவதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள். #எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?!