Published:Updated:

`நோபல் பார்சல்!'- எகிப்து வெங்காயம், சம்ஸ்கிருதம் பற்றிய விளக்கத்துக்கு மக்கள் கருத்து! #VikatanPollResults

'எகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது!', 'சம்ஸ்கிருதம் சர்க்கரையைக் குறைக்கும்!'... இந்தக் கருத்துகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

Onion & Sanskrit #VikatanPollResults
Onion & Sanskrit #VikatanPollResults

உயர் பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இருவர் சென்ற வாரம் பேசிய இரண்டு விஷயங்கள்தான் இணையத்தின் வைரல் டாபிக்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, "எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்துக்கு நல்லது. எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வர் அறுத்துச் சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார்!" என்று பேச, அதுவே நெட்டீசன்களின் ஹாட் டாபிக்காகி போனது.

சுவையில்லை, மணமில்லை... எகிப்து வெங்காயத்தில் என்னதான் பிரச்னை?

அதேபோல, மக்களவையில் பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங் சம்ஸ்கிருத மொழி குறித்துப் பேசியதும் பெரும் கலாய் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. சென்ற வாரம், மக்களவையில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இதில் பேசிய பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங், "அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தினமும் சம்ஸ்கிருதம் பேசுவது நமது நரம்புகளைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும். இதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களை அது தள்ளி வைக்கும்." எனத் தெரிவித்தார்.

இந்த இரண்டு குறித்தும் மக்களின் கருத்து என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள் இதோ...

`எகிப்து வெங்காயமும் இதயமும், சம்ஸ்கிருதமும் சர்க்கரையும்!' இந்தக் கருத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் அளித்த பதில்கள்...

Onion & Sanskrit #VikatanPollResults
Onion & Sanskrit #VikatanPollResults

விகடனின் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடனின் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

Onion & Sanskrit #VikatanPollResults
Onion & Sanskrit #VikatanPollResults

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

Onion & Sanskrit #VikatanPollResults
Onion & Sanskrit #VikatanPollResults

மொத்தத்தில், எகிப்து வெங்காயம் மற்றும் சம்ஸ்கிருதம் பற்றி அரசியல் தலைவர்கள் உதிர்த்த கருத்துக்கு, 51.02% மக்கள் கலாயாக 'நோபல் பரிசு குடுக்கலாம்' என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக சீரியஸாக 26.63% பேர், 'ஆதாரமில்லா அபத்தம்' என்று கூறியுள்ளனர். அனைத்து பதில்களும் பெற்ற சதவிகிதங்கள்...

`நோபல் பார்சல்!'- எகிப்து வெங்காயம், சம்ஸ்கிருதம் பற்றிய விளக்கத்துக்கு மக்கள் கருத்து! #VikatanPollResults
இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்டில் பதிவு செய்யுங்கள்.