Published:Updated:

``கருத்துக்கணிப்பு தடை உள்ளிட்ட 6 சீர்திருத்தங்கள்... ” - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

ராமதாஸ்

``தேர்தல் ஆணையம் வெளியிட்ட 6 சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்” என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.

``கருத்துக்கணிப்பு தடை உள்ளிட்ட 6 சீர்திருத்தங்கள்... ” - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

``தேர்தல் ஆணையம் வெளியிட்ட 6 சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்” என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.

Published:Updated:
ராமதாஸ்

ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல் உட்பட தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 6 சீர்திருத்தங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ் குமார், மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

அந்த கடிதத்தில், ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்தல், 18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதி காண் நாள்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தல், கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம், ரூ.2000-த்திற்கும் கூடுதலாக பெற்ற அனைத்து நன்கொடைகளையும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பதை கட்டாயமாக்குதல்’’ போன்ற சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் நடைமுறை செய்ய பரிந்துரைத்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசு
மத்திய அரசு

குரேஷி உள்ளிட்ட ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் ஆணையர்கள் பலரும் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தகுதி நீக்கம் செய்யும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அரசு முன்வரவேண்டும்'' என கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism