Published:Updated:

``காங்கிரஸ் கட்சியை எங்கும் காணமுடியவில்லை” - மத்திய அமைச்சர் அமித் ஷா

அமித் ஷா, மோடி

உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, பிரதமர் தலைமையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று அமித்ஷா தெரிவித்தார்.

குஜராத்தில் உள்ள போயன் மோதி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ``இந்தியாவை பாதுகாப்பான, வளமான மற்றும் சக்திவாய்ந்ததாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்கள் ஏற்றுகொண்டனர். நான்கு மாநிலங்களில் பாஜகவிற்கு கிடத்த "மகத்தான" வெற்றியே இதற்கு சாட்சி.பிரதமர் மோடி குஜராத்தின் வளர்ச்சிக்காக நிறைய உழைத்திருக்கிறார்” என்றார்.

சோனியா - ராகுல்
சோனியா - ராகுல்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பேசுகையில், ``இந்த நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது. தற்போது காங்கிரஸ் கட்சியை எங்கும் காணமுடியவில்லை. ஏழை,எளிய மக்களின் ஆரோக்கியத்தில் மோடி மிகுந்த அக்கறை வைத்திருக்கிறார். ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் நாட்டில் 100 கோடி மக்களை கவர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 2017-ல் 10 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது. 2022ல் இந்த எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 20240க்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி இருக்கும்'' என்றார்.