Published:Updated:

``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர்

ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர்

பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``இது எனக்கான களம் இல்லை..!"- பதவியை ராஜினாமா செய்த பொள்ளாச்சி இளம் திமுக கவுன்சிலர்

பொள்ளாச்சி நகராட்சியின் திமுக இளம் பெண் கவுன்சிலர் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ராஜினாமா செய்த பொள்ளாச்சி திமுக கவுன்சிலர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெரும்பானமையான வார்டுகளில் வென்று நகராட்சியை கைப்பற்றியது. பொள்ளாச்சி தி.மு.க நகர செயலாளர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகராட்சி தலைவராகப் பதவியேற்றார்.

பொள்ளாச்சி நகராட்சி
பொள்ளாச்சி நகராட்சி

இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலராக இருந்த நர்மதா கண்ணுச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் ஐந்து நிமிடங்களில் முடிந்துவிட, யாரும் எதிர்பாராத வகையில் நர்மா கண்ணுச்சாமி தனது ராஜினாமா கடிதத்தை, நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தியிடம் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நர்மதா,

திமுக கவுன்சிலர் நர்மதா ராஜினாமா
திமுக கவுன்சிலர் நர்மதா ராஜினாமா

“கடந்த 10 மாதங்களாக பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த நான், தனிப்பட்ட காணரங்களுக்காக என்னுடைய விலகல் கடிதத்ததை வழங்கியிருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பளித்த வார்டு மக்கள், ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள், சக நகரமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.

நான் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் மக்களுக்காக பணியாற்றும் இந்த வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் வந்தேன். என் சொந்தக் காரணங்களால் இது எனக்கான களம் இல்லை என தோன்றியதால், மீண்டும் என் படிப்பை தொடர முடிவு செய்தேன்.

தேர்தலின்போது நர்மதா
தேர்தலின்போது நர்மதா

அதன் மூலம் மக்களுக்குப் பணியாற்ற திட்டமிட்டிருக்கிறேன். பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டிருக்கும் நான், மக்களுக்குப் பணியாற்ற வேறு களம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நர்மதா பதவி விலகலுக்கு பின்னணியில் தி.மு.க உட்கட்சிப்பூசல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், “உள்ளாட்சித் தேர்தலில், பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் பதவிக்கு மிகப்பெரிய ரேஸ் நடந்தது. அதில் அப்போதைய மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தரப்பால் முன்னிறுத்தப்பட்டவர்தான் நர்மதா. படிப்பில் சிறந்து விளங்கும் நர்மதா அரசுப் பணி தேர்வுக்காக தயாராகி வந்தார்.

தேர்தலின்போது நர்மதா
தேர்தலின்போது நர்மதா

நகராட்சி தலைவர் பதவி என்பதால்தான் அவர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அது நடக்கவில்லை. அவருடைய தந்தை கண்ணுச்சாமி நகரச் செயலாளர் பதவிக்கு முயற்சி செய்தார். அதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்தவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்” என்றனர்.