Published:Updated:

பஞ்சாப்: சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிவைப்பு! - தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு

தலைமை தேர்தல் ஆணையம்

பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல், பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப்: சட்டப்பேரவைத் தேர்தல் தள்ளிவைப்பு! - தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு

பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல், பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Published:Updated:
தலைமை தேர்தல் ஆணையம்

பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல், பிப்ரவரி 20-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருந்தது. சீக்கிய மத குரு ரவிதாஸ் நினைவு நாள் பிப்ரவரி 16-ம் தேதி கடைபிடிக்கப்படுவதால் முதலமைச்சர் சரண்சிங் சன்னி, பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் தேதியை தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

தேர்தல்
தேர்தல்

இந்த நிலையில், தேர்தலை ஒத்திவைக்க அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பஞ்சாப் மக்கள் ஏராளமானோர், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை புனித யாத்திரை செல்வார்கள் என்பதால், ஊரில் யாரும் இருக்கமாட்டார்கள். அதனால், அவர்களால் வாக்களிக்க முடியாது என்ற காரணத்தினால் தேர்தல் தேதி பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism