Published:Updated:

`விஜய்யின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை!’- பேனர் விவகாரம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

``திரைப்படத் துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன... அவையனைத்தும் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்கப்பட்டதா?''

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. `பேனர் வைக்க வேண்டாம்’ என்ற விஜய்யின் கோரிக்கையை ஏற்று, பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. நிகழ்ச்சியில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபனா, `மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய விஜய், ``லைஃப், ஃபுட்பால் கேம் மாதிரி. நாமெல்லாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம்.

`சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட குரல் அது..!' - நடிகர் விஜய் கருத்தை ஆதரித்த கமல்
விஜய்
விஜய்

அதைத் தடுக்க ஒருகூட்டம்வரும். நம்மகூட இருக்கிறவனே சேம் சைடு கோல் போட்ருவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்கிடாதீங்க. உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தைக் கொண்டுவாங்க. சுபஸ்ரீ விவகாரத்தில், ட்விட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்தா நல்லா இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறதுனு தெரியாம, லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுறாங்க. யாரை எங்கு உட்கார வைக்கணுமோ... அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்..." என்று அனல் பறக்கப் பேசினார். விஜய்யின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, `நடிகர்களின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். நரேந்திர மோடியின் பிறந்தாளை முன்னிட்டு, சென்னையில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``இந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களைத் திசைதிருப்பி சிலர் அரசியல் செய்கின்றனர். பேனர் விவகாரத்தைப் பொறுத்தவரை ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டுக் கூற முடியாது. அனைத்துக் கட்சியினரும் பேனர் வைத்ததுண்டு. திரைப்படத் துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன... அவையனைத்தும் அனுமதி வாங்கிய பிறகுதான் வைக்கப்பட்டதா? தேவாலயமாக இருந்தாலும் மசூதியாக இருந்தாலும், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இனி பேனர் வைக்கக்கூடாது.

``என் ரசிகனை எதும் பண்ணாதிங்க!'' - விஜய் எச்சரிக்கை | Bigil
பொன்னார்
பொன்னார்

தமிழன் என்ற முறையில், இந்தியா முழுவதும் தமிழ் பரவ வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை உள்ளது. ஆனால், அதற்கான வேலைகளைச் சீரிய முறையில் செய்ய வேண்டும். இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக்கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சர்யமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது, காங்கிரஸ் இந்தியைக் கொண்டுவர முயன்று தோற்றுப்போனது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள்” என்றார். நடிகர் விஜய்யின் கருத்து தொடர்பாகக் கேட்டதற்கு, ``நடிகர்கள் கூறும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர்களும் இந்த நாட்டின் குடிமக்களே!” என்றார்.