Published:Updated:

``அதிமுக-வுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை” - எடப்பாடி பழனிசாமி

பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க-வின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

``அதிமுக-வுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை” - எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க-வின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி

சென்னை தலைமைச் செயலகத்தில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இணைந்து பேட்டியளித்தனர். அப்போது, எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து இருக்கிறது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டது.

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி
பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி

கிராமத்திலிருந்து நகரம் வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. அதிமுக ஆட்சியில் இருந்த போது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. அதிமுகவின் செயல்பாட்டுக்கு பாஜக-வின் வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை. வி.பி துரைசாமி போன்று கட்சி மாறி மாறி செல்பவர்கள் நாங்கள் கிடையாது'' என்றார். முன்னதாக அதிமுக-வின் பொன்னையன் பாஜக குறித்து பேசியதற்காக வி.பி.துரைசாமி எதிர்வினை ஆற்றியிருந்தது குறிப்பிடதக்கது.

அதிமுக ஒருங்கினைப்பாளர், ஓ.பி.எஸ், ``பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசிய கருத்தை, அவரின் சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism