Published:Updated:

`கடலுக்கு அப்பால் தனியொரு ராஜ்ஜியம் அமைச்சுக்கங்க...’ - திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

பொன்.ராதாகிருஷ்ணன்

``ஆ.ராசா பேசிய கருத்து திமுக-வினுடைய கருத்தா, திமுக ஆட்சியினுடைய கருத்தா அல்லது தமிழ்நாடு முதல்வருடைய கருத்தா என முதல்வர் விளக்கம் சொல்லியாக வேண்டும்.” - பொன்.ராதாகிருஷ்ணன்

`கடலுக்கு அப்பால் தனியொரு ராஜ்ஜியம் அமைச்சுக்கங்க...’ - திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

``ஆ.ராசா பேசிய கருத்து திமுக-வினுடைய கருத்தா, திமுக ஆட்சியினுடைய கருத்தா அல்லது தமிழ்நாடு முதல்வருடைய கருத்தா என முதல்வர் விளக்கம் சொல்லியாக வேண்டும்.” - பொன்.ராதாகிருஷ்ணன்

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று (ஜூலை 5) பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருச்சியில் மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் கண்டோன்மென்ட் பறவை சாலையிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பா.ஜ.க உண்ணாவிரதப் போராட்டம்
பா.ஜ.க உண்ணாவிரதப் போராட்டம்

போராட்ட நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தவறான ஆட்சியை, ஊழல் நிறைந்த ஆட்சியை, போதைகளுக்குத் துணை போகும் ஆட்சியை, தமிழை அழிக்கின்ற ஆட்சியைக் கண்டிக்கும்விதமாக பா.ஜ.க-வினுடைய உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாடு முழுக்க நடைபெற்றிருக்கிறது. 47 ஆயிரம் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தோற்றுப்போகும் அளவுக்குத் தமிழ்நாட்டில் கல்வித்தரம் இருக்கிறது. தமிழை அந்த அளவுக்கு அழித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஊழல் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டு முதல்வர் இருக்கும் மேடையிலேயே, பிரிவினைவாதம் பேசக்கூடிய அளவுக்கு முன்வந்திருக்கிறார்கள். முதல்வர் இருந்த மேடையிலேயே தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும்போது, `அண்ணா வழியை நாங்கள் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். பெரியார் வழியை பின்பற்றும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்’ எனப் பேசியிருக்கிறார். அவர் ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல. தி.மு.க-வினுடைய கொள்கை பரப்புச் செயலாளர். 1960-களில் பிரிவினைவாத எதிர்ப்பு சட்டம் வந்தபோது, ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்கிற முழக்கத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு வந்தவர் அண்ணா. 60 வருடங்களுக்கு முன்பாக நடந்த விஷயத்தை கோடிட்டுக் காட்டி, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் பேசுகிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

பா.ஜ.க., உண்ணாவிரதப் போராட்டம்
பா.ஜ.க., உண்ணாவிரதப் போராட்டம்

ஆ.ராசா பேச்சினுடைய கருத்து திமுக-வினுடைய கருத்தா, திமுக ஆட்சியினுடைய கருத்தா அல்லது தமிழ்நாட்டு முதல்வருடைய கருத்தா என முதல்வர் விளக்கம் சொல்லியாக வேண்டும். இல்லையெனில், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடியெடுத்துவைக்கிறார் என்றுதான் பொருள். அப்படி ஒருவேளை தமிழ்நாட்டைப் பிரிப்போம் என்று சொல்லி அவர்கள் வந்தார்களேயானால், எந்த காரணத்தைக் கொண்டும் அதை அனுமதிக்க மாட்டோம்.

இந்தப் பிரிவினைவாதத்துக்காகவா மக்கள் திமுக-வுக்கு வாக்களித்தார்கள்... ‘பழைய திராவிட நாட்டை நோக்கித்தான் எங்களுடைய பயணம்’ என தி.மு.க சொன்னால் மக்களிடமிருந்து ஒரு ஓட்டுகூடப் பெற முடியாது. ‘அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு’ என்கினற இதைச் சாதாரண வார்த்தையாக நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டைச் சுடுகாடாக மாற்ற வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள். ஏறக்குறைய மாற்றிவிட்டார்கள். இது ஒன்றும் தி.மு.க-வினுடைய தனிப்பட்ட விஷயம் கிடையாது. 8 கோடி தமிழர்களுடைய விருப்பத்தைப் பொறுத்த விஷயம் இது. தனியா பிரிஞ்சு போயிடுவோம்னா, நீங்க தனியா போங்க. ஒரு திமுக-காரன்கூட உங்க கூட வர மாட்டான். உங்களுக்கென தனியொரு ராஜியத்தை கடலுக்கு அப்பால் போய் அமைச்சுக்கங்க. இது தமிழர்களுடைய பூமி. இந்தியாவின் அசைக்க முடியாத பூமி. அசைக்க நினைத்தால், அசிங்கப்பட்டு அழிந்துபோவீர்கள்” என்றார்.