Published:Updated:

குமரி: `துறைமுகத் திட்டம் வராது என்று நான் சொல்லவே இல்லை!’ - அடித்துச் சொல்லும் பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன், ``ஒரு கற்பனைக்காகச் சொல்கிறேன். நாளை சீனா அம்பாந்தோட்டையை மையமாகவைத்து ஒரு பிரச்னையை உண்டாக்கிறாங்கன்னுவையுங்கள். அப்போது...”

இலங்கை அம்பாந்தோட்டைப் பகுதியில் சீனா துறைமுகம் அமைத்துவருகிறது. எதிர்காலத்தில் அங்கு ராணுவ தளம் அமைத்தால், அது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். இந்தியாவின் வட எல்லை போன்று தென் எல்லையில் பதற்றமான சூழ்நிலையை சீனா உருவாக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. எனவே, தென் மாவட்டங்களின் பாதுகாப்புக்காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத் திட்டம் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகத்துடன் கடற்படை மையமும் அமைக்கப்படும் என்ற பேச்சு ஓடுகிறது. அதேசமயம், கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது துறைமுகத் திட்டம் வராது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இப்போது அம்பாந்தோட்டை விவகாரம் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. எனவே, கன்னியாகுமரி துறைமுகத்தின் நிலை குறித்து அந்தத் திட்டத்துக்கு வித்திட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "அம்பாந்தோட்டை விவகாரங்களையெல்லாம் மனதில் வைத்துத்தான் துறைமுகத் திட்டத்தை யோசித்தேன். இதை எதிர்க்கக்கூடியவர்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் துணைபோகக்கூடியவர்கள் என நான் அந்த நேரத்திலேயே திரும்பத் திரும்பச் சொன்னேன்.

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுக எதிர்ப்பு போராட்டம்
கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுக எதிர்ப்பு போராட்டம்
ஃபைல் படம்

ஸ்ரீலங்காவுக்கும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் இருக்கும் பிரச்னைபோல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதுமட்டும் கிடையாது. சீனாவின் ஆளுமை அங்கே வந்துவிடும். வடக்கே இவ்வளவு நாளும் சீனா படையை குவித்தது என்ற தகவல் வருவது போன்று, அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையில் வரும்போது சீனாவின் கடல் எல்லை ஏறக்குறைய நம்முடைய பக்கத்தில் வந்திரும். அது நமக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதுகிறேன்.

மத்திய அரசை இதில் எந்தவிதத்திலும் குறை சொல்ல முடியாது. கன்னியாகுமரியில் வர்த்தகரீதியாகவும், மீனவர்களின் நலன் கருதியும் துறைமுகத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஒருவேளை இயற்கைச் சீற்றம் காரணமாக கடலில் மீனவர்கள் காணாமல் போனால் அவர்களை மீட்க கப்பல் அனுப்பும் ஏற்பாடு, உடனடியாக ஹெலிகாப்டர் அனுப்பும் ஏற்பாடு என எல்லா விஷயங்களுக்காகவும் நாம் அந்தத் துறைமுகத்தை திட்டமிட்டோம்.

பொன். ராதாகிருஷ்ணன்
பொன். ராதாகிருஷ்ணன்

மீனவர்கள் வாழ்வில் முன்னேறக் கூடாது என நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் செய்யும் வேலைகள்தான் இவை. துறைமுகம் வராது என நான் எப்போது வாக்குறுதி கொடுத்தேன்? மக்கள் விருப்பத்தோடுகூட இது நடக்கும் எனச் சொன்னேன். மக்கள் விருப்பம் இல்லாமல் இது நடக்காது. எது நடந்தாலும் மக்கள் விருப்பத்தோடு நடக்கும் என்றேன். வளர்ச்சிப்பணி தூத்துக்குடியில் தொடக்கியிருக்கிறாங்க. அதைச் சொல்லும்போது இங்குள்ளவர்கள் வேற மாதிரி நினைக்கிறார்கள். அது போன்ற விஷயங்களை நான் தேர்தல் நேரத்தில் சொல்லியிருகிறேன். மற்றபடி துறைமுகம் வேண்டாம் என ஒருபோதும் சொல்ல மாட்டேன். மக்கள் விரும்பாத திட்டத்தைக் கொண்டுவர மாட்டேன் என நான் சொன்னேன். துறைமுகத் திட்டம் வராது என்று நான் சொல்லவே இல்லை.

'ஆணித்தரமாகச் சொல்கிறேன் கன்னியாகுமரியில் வர்த்தகத் துறைமுகம் வராது' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஒரு கற்பனைக்காகச் சொல்கிறேன். நாளை சீனா அம்பாந்தோட்டையை மையமாகவைத்து ஒரு பிரச்னையை உண்டாக்கிறாங்கன்னு வையுங்கள். அப்போது `எங்களை காப்பாத்து, ராணுவத்தை கொண்டுவா, கடற்படையைக் கொண்டுவா’ அப்பிடீன்னு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கேட்பாங்களா மாட்டாங்களா... மக்கள் விரும்பக்கூடிய திட்டத்தை அப்போது கொண்டு வருவமா இல்லியா... ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றி ஜெயிக்கணும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி எல்லா வேலைகளையும் செய்தது. என்னைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த கூட்டம்தான் இது" என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு