Published:Updated:

``தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத மாபெரும் எழுச்சி பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ளது!” - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

`இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.க-வும் சேர்ந்து பத்து வருஷமாக ஒரு பேரூராட்சியில் நிர்வாகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சேர்ந்து வெற்றிபெற்றதும் உண்டு' என உள்ளாட்சித் தேர்தல் பற்றிக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

``தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத மாபெரும் எழுச்சி பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ளது!” - பொன்.ராதாகிருஷ்ணன்

`இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.க-வும் சேர்ந்து பத்து வருஷமாக ஒரு பேரூராட்சியில் நிர்வாகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சேர்ந்து வெற்றிபெற்றதும் உண்டு' என உள்ளாட்சித் தேர்தல் பற்றிக் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.

Published:Updated:
பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மாநகராட்சி 23-வது வார்டில் இருக்கும் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க மக்களை நம்பி தனித்து நிற்கிறது. தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எல்லா இடங்களிலும் பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. தமிழகத்திலுள்ள நிர்வாகிகளிடம் இன்று காலை 5 முதல் 7 மணி வரை அலைபேசியில் பேசினேன். எல்லோரும் உற்சாகமாக இருக்கிறர்கள். இந்தத் தேர்தலில் பா.ஜ.க தமிழகத்தில் மிகப்பெரிய முத்திரை பதித்ததாக அமையும்.

வரிசையில் நின்று வாக்களித்த பொன்.ராதாகிருஷ்ணன்
வரிசையில் நின்று வாக்களித்த பொன்.ராதாகிருஷ்ணன்

வாக்குச் சாவடிக்குள் செல்லும் யாராக இருந்தாலும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. சிலர் தாங்கள் வாக்களிப்பதை செல்போன்களில் படம் பிடித்து, வெளியே பரப்புகிறார்கள். எனவே, எந்த செல்போனையும் யாரும் வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக் கூடாது. அதுபோல வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போனை வெளியே வைத்துக்கொண்டு போகக்கூடிய வசதி இல்லாமல் இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் எல்லா மாவட்டங்களிலும் வாக்காளர்கள் செல்போன் வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தலில் பணப் பட்டுவாடா செய்வது ரொம்ப வேதனையான ஒன்று. நேர்மையானவர்கள், ஏழைகள் எல்லாம் வருங்காலத்தில் தேர்தலைச் சந்திக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் காலத்தில் அல்லாமல், சாதாரண காலத்தில் இதைப் பெரும் இயக்கமாக எடுத்து நடத்த வேண்டும். இல்லையென்றால், பெரும் பண முதலாளிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் முன்னிற்கக்கூடிய நிலை ஏற்படும். அவர்களால் எந்த நன்மையும் வராது, அது பெரிய நஷ்டமாகத்தான் முடியும்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

திருமங்கலம் ஃபார்முலா கொண்டுவந்தவர்கள் ஆளுங்கட்சியினர்தான். தமிழகத்தை அதல பாதாளத்துக்குக் கொண்டு சென்றது தி.மு.க. தமிழக வாக்காளர்களை விலைபொருளாக, சந்தைப் பொருளாக மாற்றியது தி.மு.க-தான். தனித்து நிற்பதால் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் எழுச்சி பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ளது. மறைமுகத் தேர்தல் எப்படி நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். இதில் யார் யாருடன் போவார்கள் என்று தெரியாது. கன்னியாகுமரி மாவட்டமே அதற்கு எடுத்துக்காட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பா.ஜ.க-வும் சேர்ந்து பத்து வருஷமாக ஒரு பேரூராட்சியில் நிர்வாகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சேர்ந்து வெற்றிபெற்றதும் உண்டு. தலைவர் தேர்தலில் குதிரைப் பேரம் நடப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் இங்கு வாக்காளர்களையே குதிரையாக்கிவிட்டார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism